நேற்று மாண்பமை பிரதமர் மக்களிடத்திலே உரையாற்றி இருக்கிறார்தனது உரையினிடையே தந்தை அம்பேத்கரை அவர் நினைவு கூர்ந்ததாகவும் கூறுகிறார்கள்மகிழ்ச்சிஆனால்அதே நாளில் தந்தை அம்பேத்கரின் கொள்ளுப் பேரன் முறை கொண்ட பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே கைது செய்யப் பட்டிருக்கிறார்அதே நாளில் என்று நான் அழுத்திச் சொல்வதற்கு ஒரு காரணம்,நேற்று தந்தை அம்பேத்கரின் பிறந்தநாள்நேற்று தோழர் கவுதம் நவ்லக்காவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்இவர்களது கைதினை கண்டிக்கிறோம்அதற்கு எதிர்வினையாகபேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டேயின் “மஹத்” தினை நேற்றிலி இருந்து மறு வாசிப்பு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்நேற்று தோழர் அ.மார்க்ஸ் அவர்களின் பதிவின் மூலமாகத்தான் கவுதம் நவ்லக்கா அவர்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்ததுஇந்தக் கைதிற்கான இன்னொரு எதிர்வினையாக கவுதம் நவ்லக்கா குறித்தும் தேடிப் படிக்க முடிவெடுத்திருக்கிறேன்
15.04.2020
Published on April 19, 2020 19:30