முரண்களை சுமந்து அலைய வேண்டாம்

நேற்று (09.04.2020)பிற்பகல் 01.25விக்டோரியாவின் அலைபேசிக்கு ஷியாமளாவிடம் இருந்து அழைப்புSHYAM CALLINGஎன்பதைப் பார்த்ததுமே கீர்த்தனா அழத் தொடங்கி விட்டாள்விசும்பிக்கொண்டே விக்டோரியா அலைபேசியை வாங்கி“அழாத பாப்பா, அழாத பாப்பா” என்றவாறே சத்தமாக அழத் தொடங்கி விட்டதுஎனக்கும் கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டதுஒருமணி நேரத்திற்கு முன்பு பேசிய ஷியாமளா முடிந்ததும் சொல்வதாக சொல்லியிருந்தாள்முடிந்துவிட்டதுவிக்டோரியாவின் அக்காவினுடைய கணவர் இறந்துவிட்டார்ஒருமணி நேரத்திற்குள் எரித்துவிட வேண்டும் என்று நெறுக்குவதாகக் கூறினாள்அதற்குள் கலெக்டரிடம் அனுமதி பெற்று போவது கடினம்எனவே போவதில்லை என்று முடிவெடுத்தோம்வீடியோ பார்த்துக் கொள்வது என்று முடிவு செய்தோம்02.15 வாக்கில் மீண்டும் அழைத்தாள்இதற்கிடையே தூய உடல் ஏற்றிச் செல்லும் வண்டிக்கு இன்னொரு உடலை எடுத்துச் செல்ல புக் ஆனதால் வண்டி வர 04.30 ஆகும் என்றாள்ஆகா, அதற்குள் அனுமதி வாங்கி போய்விடலாம் என்று தோன்றவே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் விரைகிறேன்அங்கு சென்று பார்மாலிட்டிகளைத் துவங்குவதற்குள் வண்டி வந்துவிட்டதாக பிள்ளை சொல்லவே திரும்பிவிட்டேன்திருமணம் ஆனதில் இருந்து நானும் அவருமாகவே எதற்கானாலும் சேர்ந்தே திரிவோம்எனக்கு திருமணமாகுப் பொழுது ஷியாமளா மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்அதற்கப்புறம் அவள் அவள் எனது பிள்ளையாகவே ஆகிறாள்அவளது திருமணத்தின் ஊடாக அவருக்கும் எனக்கும் சிறு ஊடல்நானும் அவரும் ஒருவருக்கொருவர் பேசுவதில்லை என்றாகிவிட்டதுகோவத்தில் அவளோடும் பேசுவதைத் தவிர்த்து விட்டேன்மற்றபடி குடும்பத்தில் யாருக்கும் யாரோடும் முரணெதுவும் இல்லைரெண்டரை வருடங்களுக்குப் பிறகு ஒரு வாய்ஸ் மெசேஜ் வருகிறதுஎடுத்துக் கேட்கிறேன்“எபீன் தாத்தா”ஒரு ஆண் பிஞ்சின் மழலையார் என யோசிப்பதற்குள்“புவா சாப்டியா?”அய்யோ, தவமே செய்யாமல் வரமா?“பெரம்பலூர் வரேன்
ஒன்ன தூக்கறேன்
கரட்டாம்பட்டி வரேன்”யாரெனப் புரிந்துவிட்டது.பேரன்அம்மா சொல்லி கொடுத்து ரிகர்சல் எடுத்து வந்த குரல்இளகிப் போனேன்இன்னும் கொஞ்ச நாள் கழித்து மகள் மருமகன் பேரன் பேத்தி எல்லோரும் வருகிறார்கள்வாங்க சொல்கிறேன் எப்போதும்போலபிறகு உம்அவர்களுக்கு நான் உம் என்று இருப்பது எந்த விதத்திலும் பாதிக்கவில்லைஎன்னைத் தவிர எல்லோரும் ஒன்றுதான்திடீரென்று பேத்தி வருகிறாள்சத்தமாக,“டேய்”திரும்புகிறேன்“ன்னா”சிரிப்பு தொண்டைக்குழிவரை வந்துவிட்டது“;ஊக்கு” என்று கைகளை நீட்டுகிறாள்அம்மா சொன்னதை செய்கிறாள்தூக்கிவிட்டேன்மகள்களுக்கு அப்பன்களை சுளுவாக வளைக்கத் தெரிகிறதுசகோதரன்களுக்கு இந்தக் கலை வாய்க்க மறுக்கிறதுமகளோடு ராசியாகிவிட்டதுஅவருக்கும் உடல் சரியில்லாமல் போகிறதுஇப்பவும்கூட என் நியாயம் சரி என்றே எனக்குப் படுகிறதுஎன் நியாயம் எனக்கு சரியென்றால் அவர் நியாயம் அவருக்கு சரிதானேபோய் பார்த்துபழசெல்லாம் மறந்துடுவோம் என்று சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறேன்போகவே முடியவில்லைஒருக்கால் அதே மாதிரி அவருக்கும் தோன்றியிருக்கலாம்உடம்பு நன்றாக இருந்தபோது அவரது வந்திருக்கலாம்நானாவது போயிருக்கலாம்இது நடந்திருந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக அவர் வாழ்ந்திருக்கலாம்இனி அவரும் வர இயலாதுநானும் போக முடியாதுஎன் அன்பிற்குரியவர்களே,முரண்களை சுமந்து அலைய வேண்டாம்#சாமங்கவிந்துஒருமணிமூன்றுநிமிடங்கள்
11.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2020 19:34
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.