இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 72
April 22, 2020
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அவசியம் நடத்தியே ஆக வேண்டுமா?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அவசியம் நடத்தியே ஆக வேண்டுமா?”இது விஷயத்தில் ஆசிரியர்கள்,நடத்த வேண்டும்,நடத்தத் தேவை இல்லைஎன்பதாக இரண்டாய் பிரிந்து நிற்கிறார்கள் ”என்கிறார் எனக்கான ஆசான்களில் ஒருவரான தோழர் மாடசாமி (ச. மாடசாமி)தேர்வு தேவையா? இல்லையா? என்ற கேள்வியே தவறுதான் என்பது,“தேர்வை நடத்தியே தீர்வார்கள்” என்ற மணிமாறனின் (மணி மாறன்) ஒரு பின்னூட்டத்தின் வழி தெளிவாகிறதுநடத்தட்டும் நடத்தாமல் போகட்டும் நமது நிலையை நாம் சொல்லிவிட்டு போவதே சரியானதுஒரு சன்னமான கேள்வியில் இருந்து இதைத் தொடங்கலாம்இவ்வளவு கொடூரமான சூழலில் இந்தத் தேர்வை ஏன் நடத்த வேண்டும்?தேர்வை நடத்தினால்தானே சார் அவன் பாசா பெயிலா தெரியும்?சரி, அதத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்?என்ன சார், இப்படிக் கேட்டுட்டீங்க, பாசானாதானே அவன் மேல் படிப்புக்குப் போக முடியும்?பத்தாங்கிளாஸ் பாசானா என்ன மேல் படிப்பு?பதினொன்னங்கிளாஸ்,அப்புறம்?ITI,அப்புறம்?பாலிடெக்னிக்இவ்வளவுதானே, இதுலயெல்லாம் இந்த ஆண்டு பத்தாங்கிளாஸ் படிச்ச எல்லோருக்குமான அனுமதி கொடுத்தால் என்ன?எல்லோருமே தப தபன்னு சீட்டு கேட்பாங்களே சார்கேட்கட்டுமேஎல்லோருக்கும் கொடுக்க முடியுங்களா?அது சரி பரிட்சை எழுதி பாசாகி வந்தவங்க கேட்டா மட்டும் கேட்கிறவர்களுக்கு எல்லாம் கொடுத்துடுறீங்களா?அதெப்படி சார்?அப்ப என்ன செய்யறீங்க?வடிகட்டி கொடுப்போம்அப்படியே இப்பவும் கொடுத்துட வேண்டியதுதானேமார்க் இல்லாம எப்படி சார் வடி கட்டுறது?அப்ப வாய்ப்புக்கு அல்ல மதிப்பெண். வடிகட்டறதுக்குத்தான். அப்படித்தானே?ஏதோ சின்னதா ஒரு தேர்வு வச்சு கொடுத்துட வேண்டியதுதானேஒன்னு தெரிந்துகொள்ளுங்கள் பத்தாம் வகுப்பு முடிக்கும் குழந்தைகளுள் ஏறத்தாழ 85 விழுக்காடு மேல்நிலை முதலாம் ஆண்டுதானே வருவார்கள்ஆமாம் சார்கொடுத்துடலாமேஎல்லோரும் பர்ஸ்ட் க்ரூப் கேட்டாகொடுப்போமேபத்தாங்கிளாசே பாசாக இயலாத புள்ளைங்களும் வந்துடுவாங்களே?வரட்டுமேஅவன் பதினொன்னாங்கிளாஸ்ல பெயிலாயிடுவானேஆக பதின்னாம் கிளாஸ்ல பெயிலாகறவன் பத்தாங்கிளாஸ்லேயே பெயிலாக்கனுங்கறீங்க, அப்படித்தானே?ரொம்பக் கொழப்புறீங்க சார்இன்னும் கொஞ்சம் கொழம்புங்க சார். தெளிவு கிடைக்கும்பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு வேண்டாம் என்பது நமது பதினைந்து வருடக் கோரிக்கை.+1, மற்றும் +2 வகுப்பு பாடத் திட்டத்தையும் தேர்வு முறையையும் செறிவாக்கினாலே போதும்அதற்கான உரையாடலே இந்த நொடிக்கான தேவை#சாமங்கவிய57நிமிடங்கள்
22.04.2020
22.04.2020
Published on April 22, 2020 13:20
மருத்துவப் படிப்பிற்கே தேர்வை ரத்து செய்யும்போது...
இரண்டு நாட்களுக்கு முன்னால் தனக்கும் திரு கவுண்டமணி அவர்களுக்கும் இடையேயான அலைபேசி உரையாடலை தோழர் பாமரன்
(Ezhirko Pamaran Shanmugasundaram) வைத்திருந்தார்மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களுக்கான இறுதித் தேர்வை அமெரிக்கா ரத்து செய்ததும் இல்லாமல் அவர்களுக்கு லைசென்சும் வழங்கி அவர்களை கொரோனாப் பணிக்கு அனுப்பிட்டதாக திரு கவுண்டமணி கூறியதாகவும்ஏதோ அடித்து விடுகிறார் போல என்று நினைத்த தான் இணைய தளத்தில் சோதித்தபோது அது உண்மை என்பதை தெரிந்து கொண்டதாகவும் கூறியிருந்தார்எவ்வளவு தேடலோடு இருக்கிறார் கவுண்டமணிஅது சரி,மருத்துவப் படிப்பிற்கே தேர்வை ரத்து செய்யும்போது இத்தகைய கொடிய சூழலிலும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை எப்படியும் நடத்தியே தீர்வது என்ற நமது நிலை மெய்சிலிர்க்க வைக்கிறது
22.04.2020
(Ezhirko Pamaran Shanmugasundaram) வைத்திருந்தார்மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களுக்கான இறுதித் தேர்வை அமெரிக்கா ரத்து செய்ததும் இல்லாமல் அவர்களுக்கு லைசென்சும் வழங்கி அவர்களை கொரோனாப் பணிக்கு அனுப்பிட்டதாக திரு கவுண்டமணி கூறியதாகவும்ஏதோ அடித்து விடுகிறார் போல என்று நினைத்த தான் இணைய தளத்தில் சோதித்தபோது அது உண்மை என்பதை தெரிந்து கொண்டதாகவும் கூறியிருந்தார்எவ்வளவு தேடலோடு இருக்கிறார் கவுண்டமணிஅது சரி,மருத்துவப் படிப்பிற்கே தேர்வை ரத்து செய்யும்போது இத்தகைய கொடிய சூழலிலும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை எப்படியும் நடத்தியே தீர்வது என்ற நமது நிலை மெய்சிலிர்க்க வைக்கிறது
22.04.2020
Published on April 22, 2020 13:18
இந்திய இஸ்லாமியர்களுக்கும் இந்தியாதான் தாய்நாடு
“இந்தியா இஸ்லாமியர்களின் சொர்க்கமாக உள்ளது”என்று அரபு நாடுகளுக்கு பதிலளித்திருக்கிறார் மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்விஇஸ்லாமியர்களுக்கும் தலித்துகளுக்குமான நரகமாக இருக்கிறது எமது நாடு என்பது வேறு விசயம்இந்த நாடே இஸ்லாமியர்களது அல்ல என்பதுபோலவே ஆளும் கட்சியின் பொறுப்பாளார்களே பேசினார்கள்ஆகவே உண்மைக்கு மாறான தகவல் இது என்பதெல்லாம் வேறுநான் கேட்பது வேறுஇப்படி சொல்ல வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு ஏன் வந்தது?எங்கள் அரசு அடுத்த ஒரு நாட்டிற்கு தன்னிலை விளக்கம் தர வேண்டிய அளவிற்கு இந்த நாட்டை ஏன் கொண்டு சென்றீர்கள்?இந்தியக் கட்டமைப்பென்பது இந்திய இஸ்லாமியர்கள் இல்லாமல் இல்லைசொர்க்கமெல்லாம் வேண்டாம் என் அன்பிற்குரிய அமைச்சரேஇந்திய இஸ்லாமியர்களுக்கும் இந்தியாதான் தாய்நாடுஅதை உணர்ந்து செயல் படுங்கள்எந்த ஒரு நாட்டிற்கும் நாம் தன்னிலை விளக்கம் தரவேண்டிய தேவை இருக்காது
22.04.2020
22.04.2020
Published on April 22, 2020 13:17
April 21, 2020
இந்த மாற்றம் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது
தப்ளிக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்தான் கொரோனாவை பரப்பினார்கள் என்று திரு நாராயணன் உள்ளிட்ட இந்துத்துவ குழுவினர் தொடர்ந்து புலம்பிக் கொண்டே இருந்தனர்இப்போது காசிக்கு போய் வந்தவர்களுக்கும் தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறதுசிவராத்திரிக்கு போய் வந்தவர்களையும் பரிசோதிக்க வேண்டும் என்பதும்ராமர் ஆலய மண்பூஜைக்கு சென்று வந்தவர்களையும்பெருங்கூடுகைகளுக்கு சென்று வந்தவர்களையும்கூட சோதிக்க வேண்டும்அது ஒருக்கால் யாருக்கேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களையும் அவர்களிடமிருந்து வேறு யாருக்கும் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான்இன்னொரு விஷயம்தப்ளிக் மாநாடு சென்று வந்தவர்களில் தொற்று கண்டறியப்பட்டுசிகிச்சைப் பெற்றுத் திரும்பியவர்கள்ப்ளாஸ்மா செல்களை தருவதற்கு முன் வந்திருக்கிறார்கள்ப்ளாஸ்மா செல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்அது தொற்று உள்ளவர்களை விரைவாக குணப்படுத்தும்இப்போதுநாராயணன் அவர்கள் தப்ளிக் மாநாடு சென்று வந்தவர்களைஅவர்கள் தாமாகவே சிகிச்சைக்காக வந்ததற்காகவும்ப்ளாஸ்மா செல்க்ளை அவர்கள் தர முன்வந்திருப்பதற்காகவும் பாராட்டுகிறார்இவர்களது எம்பிக்கள் உள்ளிட்டு இவர்கள் போட்ட ஆட்டத்தில் அரபு நாடுகள் விழித்துக் கொண்டு பிரதமரை எச்சரிக்க ஆரம்பித்ததனால்கூட இந்த மாற்றம் இருக்கலாம்காரணம் எதுவாயினும்,இந்த மாற்றம் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறதுதிரு நாராயணான் சொன்ன காரணங்களையே எடுத்துக் கொள்வோம்திரு நாராயணனுக்கு சொல்ல சில இருக்கின்றனஇஸ்லாமியர்கள் செய்த நல்லதுகளுக்காக நீங்கள் அவர்களைப் பாராட்டுவதாகவும் கொள்கிறேன்எனில்அவர்கள் நல்லது செய்கிறவர்கள், நல்லவர்கள் என்று தெரியாததால்தான் நீங்கள் அவர்களை சபித்துக் கொண்டும் தூற்றிக் கொண்டும் இருப்பதாகவும் கொள்ள வாய்ப்பிருக்கிறதுஅவர்கள் செய்த தியாகத்தையும் நல்லதுகளையும் அறிந்து கொண்டால் நீங்கள் மனிதத் தன்மையோடு நடந்து கொள்வீர்கள் என்றும் தோன்றுகிறதுஇந்த கொரோனா காலத்தில் சொந்தங்களே நிராகரித்த பல இந்து பந்தங்களின் உடல்களை இஸ்லாமிய சகோதரர்கள் சுமந்து வந்து புதைத்திருக்கிறார்கள்வெள்ளம் காலத்தில் மசூதிகளில் இந்துக்கள் தங்குவதற்கு திறந்துவிடப்பட்டனசீதக்காதி வரலாறுகளைப் படியுங்கள் திரு நாராயணன்ராமேசுவரம் கோவில் கட்டமைப்பில் அவனது பங்கு குறித்து படியுங்கள்சுதந்திரப் போராட்டத்தில்பிரிவினையின் போது இங்குள்ள இஸ்லாமியர்கள் தங்களை இந்திய இஸ்லாமியர்களாகப் பாவித்து பாகிஸ்தானை நிராகரித்ததுஇன்னும் இன்னுமாய் உள்ள வரலாறுகளைப் படியுங்கள்இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள்உங்களைப் போன்றவர்களின் சாமிட்டத்திற்குப் பிறகும், ஆர்.எஸ்.எஸ் அட்டூழியங்களுக்குப் பிறகும் இஸ்லாமியர்கள் இந்த அளவிற்கு திடமாக இருக்க முடிகிறதென்றால்உங்களைப் போன்ற சொற்ப அளவிலான இந்துக்களைத் தவிர்த்து பெரும்பாண்மை இந்துக்களின் ஈரமும் அன்புதான்இந்த தேசத்தின் கட்டுமானம்இந்திய மக்களின் ஒற்ருமையினால் எழும்பியதுபதட்டப் படாமல் படியுங்கள்ஒருக்கால் உங்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் உண்மையானது என்றால்வாசிப்பு உங்களை இன்னும் இன்னுமாய் மனிதனாக்கும்#சாமங்கவிய8நிமிடங்கள்
21.04.202
21.04.202
Published on April 21, 2020 18:15
நீ ஆடுடா லேசந்த்
லாக் டவுனில் முடங்கிக் கிடந்த குழந்தைகள் கொஞ்ச நேரம் விளையாடினர்லேசந்த் உப்புக்கு சப்ப என்று முடிவெடுத்தனர்“ஒப்புக்கு சப்பான்னா என்ன தம்பி?”“ அதா,நா அவங்களத் தொட்டா அவங்க அவுட்அவங்க என்ன தொட்டாலும் அவங்க அவுட்அதான் ஒப்புக்கு சப்பாஓகேவா”நீ ஆடுடா லேசந்த்
20.04.2020
20.04.2020
Published on April 21, 2020 18:14
அவ்வளவுதான் திரு ஜெயமோகன்
நானும் மனுஷன்நீங்களும் மனுஷன்அவ்வளவுதான் திரு ஜெயமோகன்நீங்கள் மேலடுக்கு நான் கீழடுக்கு என நீங்கள் கருதுவீர்களென்றால்நீங்கள் எத்தனை ஆயிரம் பக்கம் எழுதினால் எமக்கென்ன?நீங்கள் கழிவறையில் கழிப்பதற்கும்வால்யூம் வால்யூமாய் எழுதிக் குவித்திருப்பதற்கும்ஒரே ஒரு வித்தியாசமும் இல்லை
Published on April 21, 2020 18:12
விடுதலைத் தழும்புகள் நூலை முன்வைத்து
தொட்டால் ஒடிந்துவிடும் அளவிற்கு வயதாகிப் போன பழைய நோட்டுகளில் இருக்கும் குறிப்புகளை புது நோட்டில் எழுதிக் கொண்டிருக்கிறேன்பேசுவதற்காகவும், எழுதுவதற்காகவும் எடுத்து வைத்துள்ள குறிப்புகள்தோழர் சு.பொ. அகத்தியலிங்கம் ( Su Po Agathiyalingam) எழுதிய “விடுதலைத் தழும்புகள் என்ற நூலிலிருந்து மட்டும் நூற்றிற்கும் மேற்பட்ட குறிப்புகள் கொண்ட நோட்டு கிடைத்திருக்கிறதுநன்றாக நினைவிருக்கிறது,252 குறுங்கட்டுரைகள்சின்னச் சின்ன சம்பவங்களின் தொகுப்புகள்நாடக மேதை விஸ்வநாத தாஸ் ஒரு வருடப்பு நாளில் மேடையிலேயே இறந்ததுஒருமுறை அவர் முருகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்வள்ளி கொக்குகளை இப்படியாக விரட்டுகிறார்,“வெட்கங்கெட்ட வெள்ளை கொக்குகளா
விரட்ட விரட்ட வாரீங்களா”தாஸ் அவர்களை கைது செய்ய போலீஸ் மேடை ஏறுகிறதுதாஸ் கேட்கிறார்,“யாரைக் கைது செய்ய வேண்டும்?”“விஸ்வநாத தாஸை”“இங்கு நிற்பது தாஸ் அல்ல, முருகன். முருகன் மீது வாரண்ட் இருந்தால் சொல்லுங்கள்.கீழிறங்கிய காவலர்கள் நாடகம் முடிந்தபிறகே அவரைக் கைது செய்கின்றனர்அந்த மாவட்டத்தில் மக்களை மிருகத்தனத்தோடு அடிமைகளைப் போல நடத்திய கலெக்டரைதங்கள் பள்ளிக்கு விருந்தினராக அவர் வந்திருந்தபோது இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சுட்டுக் கொன்றுவிட்டு 12 ஆண்டுகள் சிறைக்குப் போனதுஇதைப் பதியும் நேரத்தில் அந்தக் கொலையை நியாயப்புத்திவிடாத கவனம்இப்படியான 252 சிறு கட்டுரைகள்வசந்தி தேவி அம்மாவின் மிகச் செரிவான அணிந்துரைபுத்தகத்தைத் தேட வேண்டும்1999 இல் ஒரு கூட்டத்திற்குஇதை எடுத்திருக்கிறேன் என்கிறது அந்தக் குறிப்புஇது வளரிளம் தோழர்களுக்கான முக்கியமான புத்தகம்பதிப்பில் இருக்கிறதா தெரியவில்லைஇல்லை எனில்,தோழர் சிராஜிற்கு (Mohammed Sirajudeen) இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்
20.04.2020
விரட்ட விரட்ட வாரீங்களா”தாஸ் அவர்களை கைது செய்ய போலீஸ் மேடை ஏறுகிறதுதாஸ் கேட்கிறார்,“யாரைக் கைது செய்ய வேண்டும்?”“விஸ்வநாத தாஸை”“இங்கு நிற்பது தாஸ் அல்ல, முருகன். முருகன் மீது வாரண்ட் இருந்தால் சொல்லுங்கள்.கீழிறங்கிய காவலர்கள் நாடகம் முடிந்தபிறகே அவரைக் கைது செய்கின்றனர்அந்த மாவட்டத்தில் மக்களை மிருகத்தனத்தோடு அடிமைகளைப் போல நடத்திய கலெக்டரைதங்கள் பள்ளிக்கு விருந்தினராக அவர் வந்திருந்தபோது இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சுட்டுக் கொன்றுவிட்டு 12 ஆண்டுகள் சிறைக்குப் போனதுஇதைப் பதியும் நேரத்தில் அந்தக் கொலையை நியாயப்புத்திவிடாத கவனம்இப்படியான 252 சிறு கட்டுரைகள்வசந்தி தேவி அம்மாவின் மிகச் செரிவான அணிந்துரைபுத்தகத்தைத் தேட வேண்டும்1999 இல் ஒரு கூட்டத்திற்குஇதை எடுத்திருக்கிறேன் என்கிறது அந்தக் குறிப்புஇது வளரிளம் தோழர்களுக்கான முக்கியமான புத்தகம்பதிப்பில் இருக்கிறதா தெரியவில்லைஇல்லை எனில்,தோழர் சிராஜிற்கு (Mohammed Sirajudeen) இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்
20.04.2020
Published on April 21, 2020 18:11
நீங்களும் ஒத்துப் போவதாக கொள்ளவேண்டி வரும்
இந்த ட்வீட் பாரதிய ஜனதாக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா என்பவருடையது என்பதை அறியும்போது மனதிற்கு வேதனை அளிக்கிறது.

கீழ்த்தரமான ஒருவன் முழுப்போதையில் உளறுவதைவிடவும் கீழ்த்தரமானதாக இருக்கிறது
இது இந்தியாவிற்கும் இஸ்லாமிய நாடுகளுக்குமிடையே இருக்கும் உறவை பாதிக்காதா?
இவர் எதார்த்தமாகப் பார்த்தால்கூட சக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூசுமே
இவர் இந்த ட்வீட்டை நீக்கி இருக்கக் கூடும்
ஆனாலும் நீங்கள் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாண்பமை பிரதமர் அவர்களே
அல்லாது போனால் அவரது கீழ்மையான கருத்தோடு நீங்களும் ஒத்துப் போவதாக கொள்ளவேண்டி வரும்
Published on April 21, 2020 18:09
பொறுப்பேற்க முடியாத எது குறித்தும்....
மூன்று நாட்களில் கொரோனா இல்லாமல் போகும் என்றீர்கள்மூன்றாவது நாளில் பேரதிகமாய்த் தொற்றுஇதற்கு நீங்கள் காரணம் இல்லை என்பது தெரியும்பொறுப்பேற்க முடியாத எது குறித்தும் உளறுவதைத் தவிர்க்க வேண்டும்
Published on April 21, 2020 18:00
April 19, 2020
ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்
பொதுவாகவே அலட்சியமான அதிகாரியையோ அல்லது ஆட்சியாளரையோ கடக்க நேரிடும் காலங்களில் அவர்களை நீரோவோடு பொருத்திப் பார்ப்பது வாடிக்கைஇன்றைய தேதியில் அப்படியான ஒரு தலைவரை இந்திய மக்கள் கடந்து கொண்டிருக்கிறார்கள்கொரோனா மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில்“கை தட்டுங்கள்”,“விளக்கு ஏற்றுங்கள்”என்று கூறும் தலைவர் ஒருவரை இந்திய மக்களாகிய நமக்கு காலம் கொடையளித்திருக்கிறதுஅநேகமாக இந்திய மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு புள்ளியில் அவரை நீரோவோடு பொருத்தி பகடி செய்திருக்கக் கூடும்காரணம் இதுதான்,ரோம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பதாக நமக்குள் விதைக்கப்பட்டிருக்கிறதுஆனால் இது உண்மையல்லமுழுக்க முழுக்க அந்தக் காலத்தின் முதலாளிகளும் செல்வந்தர்களும் செனட்டர்களை தங்கள் கைகளுக்குள் மடக்கிக் கொண்டுதங்களுக்கு எதிரான நீரோவின்மீது பரப்பிய வதந்தி ஏறத்தாழ 1956 வருடங்களுக்கும் மேலாக உலகப் பொதுத் தளத்தில் உயிரோடு இருக்கிறது18.07.0064,வெளியூரில் இருந்த நீரோவிற்கு ரோம் எரியும் செய்தி போகிறதுஉடனே வருகிறான்அவன் பேரரசன்மெய்க்காப்பாளர்கள்கூட அவனோடு இல்லைதீ அணைக்க திரளோடு திரளாய் இணைகிறான்இடிபாடுகளுக்கு இடையே சிக்கிகொண்டிருப்பவர்களை மீட்கிறான்நிவாரணப் பணிகளுக்காக முதலாளிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் வரி விதிக்கிறான்முதலாளிகளும் செல்வந்தர்களும் இணைகிறார்கள்எதை செய்தோசெனட்டர்களையும் தங்களோடு இணைத்துக் கொள்கிறார்கள்கிறிஸ்தவ தலைவர்களும் வரலாற்று ஆசிரியர்களும் விலை போகிறார்கள்ரோம் பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாய் வதந்தியை பரப்புகிறார்கள்செனட் நீரோவை ரோமின் எதிரி என்று பிரகடனப்படுத்துகிறதுஅவரை கட்டாயத் தற்கொலை செய்துகொள்ளுமாறு உத்தரவிடுகிறதுகட்டாயத் தற்கொலை செய்து கொள்கிறார்விதிவிலக்காகஅந்தக் காலத்து செனட்டரான திரு டாசிட்டஸ் உண்மையை உள்ளது உள்ளபடி பதிவு செய்து வைத்துள்ளார் என்ற தகவலை தோழர் அறிவுக்கடல் தனது “இன்னாள் இதற்கு முன்னால்” நூலில் குறிப்பிடுகிறார்டாசிட்டஸ் ஒரு வரலாற்று ஆசிரியரும் கூடஆக,தனது நகரம் தீப்பற்றி எரிந்தபோது,ஓடோடி அங்கு வந்தவனை,உதவியாளர்கள் இல்லாமலே நிவாரணப் பணிகளில் ஈடு பட்டவனை,பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் துடைத்தவனை,அவர்களுக்கு உணவளித்தவனை,நிவாரணப் பணிகளுக்காக செல்வந்தர்களிடமும் முதலாளிகளிடமும் வரி விதித்தவனைகஜா புயலின்போது எம் மக்களைப் பார்க்க மறுத்தவரோடுஓகி எம் மக்களை கிழித்துக் கூறு போட்டபோது அயல்நாட்டு விருந்தினரோடு விருந்து சாப்பிட்டவரோடு,..ஏழைகளிடம் வரிபோட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பவரோடுஎன் அன்பிற்குரியவர்களே ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்அது ஒரு நல்லவன் பிணத்தை 1950 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்து மீண்டும் கொல்வதற்கு ஒப்பாகும்
Published on April 19, 2020 19:43
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)