இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 68
January 31, 2021
கவிதை 11
விபத்தில்
எனக்குகால் ஒடிந்ததால்தான்நிகழ்ச்சியைஒத்தி வைக்க நேர்ந்ததென்றுஅவனிடம் சொன்னதைஎன்னிடமும் சொல்லியிருக்கலாம் நீவிந்தி விந்தியாவதுநடந்து தொலைத்திருப்பேன்நேற்றவனை பார்க்க நேர்ந்தபோதுகவிதை 09
அறைக்குள் நுழைந்திருக்கும்
இந்தப் பிடிச்சப்பிடி மென் குளிரைசமாளித்து விடலாம்வாசிக்கிற சூடில் ஒருதுண்டு கவிதையும்ஒரு கோப்பைசர்க்கரைப் போடாத பாலற்ற எலுமிச்சைத் தேநீரும்வாய்த்து விட்டால்January 30, 2021
சூத்திர விடுதலைக்கான முன் நிபந்தனை
தலித்தைவிட சூத்திரன் உசத்தியானவன் என்று சூத்திரர்கள் பலர் கருதுவதும்
ஏதோ தாம் பெரிய அவதாரம் என்பதுபோல் கருதி கிடைக்கிற தலித்துகளைத் தாக்குவதுமாக நகர்வது தொடர் கதையாக இருக்கிறதுஆவுடையார்கோவிலுக்கு அடுத்துள்ள குணத்திரான்பட்டியைச் சேர்ந்த இளைஞன் மதன்பொறியியலில் பட்டையம் பெற்றவன்கோவையில் கார் ஓட்டுனராகப் பணி புரிகிறார் பொங்கலுக்காக விடுப்பில் வந்திருக்கிறார்24.01.2021 அன்று மாலை தனது நண்பர்களோடு பட்டமங்கலத்தில் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்அவரை தண்ணிகொண்டான் மங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ப்ரதீப், மெய்கண்டன் உள்ளிட்ட இளைஞர்கள் மதனை ஜாதியை சொல்லித் திட்டியும் தாக்கியும் உள்ளனர்ஒருவழியாகத் தப்பித்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்ரு வீடு திரும்பும்போதுமீண்டும் வழி மறித்து தாக்கியுள்ளனர்ஒருகட்டத்தில் நா வறண்ட நிலையில் தண்ணீர் கேட்ட மதனது வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்போதையில் இருந்த அவர்கள் மயங்கியபோதுதான் மதனால் அங்கிருந்து தப்பிக்க முடிகிறதுஎன்கிற செய்தியை தம்பி ஸ்டாலின் தி தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்தலித் என்றால் பரிகசிக்கவும் தாக்கவுமான லைசென்சை இவர்களுக்கு எவன் தந்தது?அவ்வளவு உயர்வானவர்களா இடை சாதியினர்?இவர்களே இன்னும் தங்களுக்கான விடுதலைக்காக குரல் கொடுப்பவர்கள்தானே?எனில், இவர்களுக்கும் மேல் யாரோ இருக்கிறார்கள்தானே?இன்னும் சொல்லப்போனால் இப்படியான ஒரு அடுக்கு ஏற்பாடே அவர்களுக்கு எதிராக எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பார்ப்பனர்கள் செய்ததுதானேஅடுத்தவனை அடிமையாகக் கருதும் இடைசாதிக் காரன் எப்படி தனது விடுதலைக்காக குரல் கொடுக்க முடியும்இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காத அளவிற்கு கடுமையான தண்டனை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டும்எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்சூத்திர விடுதலைக்கான முன் நிபந்தனை தலித் விடுதலைNovember 8, 2020
இந்தத் தீர்ப்பு இவர்களை உற்சாகப்படுத்திவிடக் கூடும்
10.12.2019
ஹிதேஷ் ஷர்மாவின் வீட்டிற்கு சென்ற அந்த தலித் பெண் அவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலத்தை தருமாறு கேட்கிறார்
அவரை வீட்டிற்குள் அடைத்து சாதியின் பெயரால் ஹிதேஷ் ஷர்மாவின் குடும்பம் அந்தப் பெண்ணை அவமானப் படுத்துகிறது
11.12.2019 அன்று அந்தப் பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கிறார்
எஸ் சி , எஸ்டி சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது
அதை எதிர்த்து ஹதிஷ் ஷர்மா உச்சநீதிமன்றம் போகிறார்
வெளியாட்கள் பார்க்க தலித்தை அவமானப் படுத்தினால்தான் எஸ்.சி, எஸ்.டி வழக்கு போட முடியும்
இந்த வழக்கைப் பொறுத்தவரை
அந்தப் பெண் வீட்டுக்குள் வைத்து அவமானப் படுத்தப் பட்டதாக சொல்லப்படுவதாலும்
அப்போது யாரும் இருந்து பார்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்படாததாலும்
இந்த அவமானம் பொது இடத்தில் நடக்கவில்லை என்று உறுதியாவதால்
இந்ந வழக்கை எஸ் சி, எஸ்டி பிரிவில் தொடுக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது
என்கிற தகவலை இன்றைய தீக்கதிரில் பார்க்க முடிந்தது
இவ்வளவு சட்டங்கள் இருந்தே
பீத்தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தார்கள்
மூத்திரத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்
நிர்வாணப்படுத்தி அவமானப் படுத்தினார்கள்
இந்தத் தீர்ப்பு இவர்களை உற்சாகப்படுத்திவிடக் கூடும்
வலிக்கிறது
#சாமங்கவிந்து 29நிமிடங்கள்
07.11.2020
கவிதை 07
வைப்பர்
அழிக்க அழிக்க
எனக்கான கவிதையை
எழுதிக்கொண்டே இருக்கிறது
மழை
November 7, 2020
இதையும் இன்றுதான் வாசிக்கிறேன்
திரு. ஜானகிராம்மூர்த்தி ஒரு வழக்கறிஞர்
நெல்லூர்க்காரர்
பார்ப்பனர்
16.09.1926 அன்று நீலா வெங்கட சுப்பம்மா என்கிற பெண்ணை இரண்டாந்தாரமாக சென்னையில் மணக்கிறார்
இவர் ஒரு திராவிடர்
இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர்
ஜானகிராமமூர்த்தி காலமாகிறார்
நீலா அம்மையாரை ஜானகிராமமூர்த்தியின் முதல் மனைவி ஒதுக்குகிறார்
இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு தனது கணவரின் சொத்துக்களை அனுபவிக்கும் முதல் மனைவி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று ஜில்லா கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார்
மாதம் 20 ரூபாய் ஜீவனாம்சம் என்பது தீர்ப்பு
முதல் மனைவி உயர்நீதிமன்றம் போகிறார்
கனவான்கள் திரு பாண்டுரங்கராவ் மற்றும் திரு சோமையா நீதிபதிகள்
இருவரும் பார்ப்பனர்கள்
ஆரியர் திராவிடர் கலப்புமணம் செல்லாது என்பது தீர்ப்பு
அண்ணாவின் ஆரியமாயையில் இருந்து இந்த சம்பவம் எடுத்தாளப்பட்ட 03.11.2020 நாளிட்ட விடுதலையை
இன்று வாசித்தேன்
இது
பிராமணனுக்கும் அவனது சூத்திர மனைவிக்கும் பிறக்கும் குழந்தைக்கு அவனது தந்தையின் சொத்தில் உரிமை இல்லை
என்கிற மநுதர்மத்தின் உத்தரவை ஒட்டியதுதான்
20.04.2019 அன்று கமல் இட்ட ட்விட்டரை தோழர் M S Rajagopal அவரது பக்கத்தில் வைத்திருக்கிறார்
அதில் இசைஞானியோடு இணைந்து மருதநாயகத்திற்காக அவர் எழுதிய பாடலில் இருந்து
"மதங் கொண்டு வந்தது சாதி
மனிதனை விரட்டுது
மநு சொன்ன நீதி"
என்ற வரிகளை வைத்திருக்கிறார்
இதையும் இன்றுதான் வாசிக்கிறேன்
ஒன்றரை வருடத்தில்
மநுசாஸ்திரம் இப்போது புழக்கத்தில் இல்லை. எனவே அதுபற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை என்கிற கமலின் கூற்றையும்
இன்றுதான் பார்க்கிறேன்
05.11.2020
November 4, 2020
பொலிவியத் தேர்தல் 2020
அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் இன்று மெல்ல மெல்ல வரத் தொடங்கி இருக்கின்றன
ஒரு நாட்டில் தேர்தல் நடப்பதும் அதை ஒட்டி தேர்தல் முடிவுகள் வருவதும் வழக்கம்தான்
எந்த ஒரு நாட்டின் தேர்தல் முடிவும் ஏதோ ஒரு வகையில் சர்வதேச நாடுகளை பாதிக்கும் என்ற வகையில்
எந்தக் கட்சி வெற்றி பெற்றால் தேவலாம் என்று மற்ற நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருப்பதும் வாடிக்கைதான்
அந்த வகையில் அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ எல்லா நாடுகளையுமே நிச்சயம் பாதிக்கும் என்பதால்
அதுகுறித்த ஆவல் பேரதிகமாய் இருக்கும் என்பதிலும் அய்யம் இல்லை
அதுவும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் இந்நாள் அதிபருமான திரு ட்ரம்ப் தோற்க வேண்டும் என்பதே பலரது ஆசையுமாக இருக்கிறது
ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வந்தால் மட்டும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை அப்படி ஒன்றும் பெரிதாக மாறிவிடப் போவதில்லை
ஜோ பைடன் முன்னனியில் இருப்பதாகத் தெரிகிறது
மாறலாம் என்கிறார்கள்
எல்லாம் இருக்கட்டும்
ஆனால் இந்த தேர்தல்மீது காட்டப்படும் ஆர்வமும் வெளிச்சமும் 18.10.2020 அன்று தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் நடைபெற்ற தேர்தல் குறித்து ஏன் காட்டப்பட வில்லை
மூன்றிற்கு இரண்டு என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது போயினும்
சோசலிசத்திற்கான இயக்கம் ஏறத்தாழ 55 விழுக்காடுகளுக்கும் கொஞ்சம் அதிகமான வாக்குகளோடு இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்கிறது
ஈவோ அதிபராக இருந்த முந்தைய ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவரும் இடதுசாரியுமான லூயி ஆர்க் இப்போது அதிபராகிறார்
சென்ற ஆட்சியில் வறுமையை குறிப்பிட்டு சொல்லுமளவு ஒழித்துக் காட்டினார்கள்
பள்ளிகள் மருத்துவமனைகள் சாலைகள் போடப்பட்டன
வளங்களை தேசியமாக்கியதன் விளைவு அது
இவ்வளவையும் சாதித்த ஈவோ அடுத்த நாட்டில் தஞ்சம் புகவேண்டிய தேவை வந்தது
முதலாளித்தவமும் அமெரிக்காவும் மட்டுமல்ல ஈவோவும் அதற்கு காரணம் என்பதை ஆர்க் உணார்ந்தே இருக்கிறார்
அதனால்தான் ஈவோவின் சாதனைகளில் இருந்து எடுக்கவேண்டியதை எடுப்போம் தள்ளவேண்டியதை தள்ளுவோம் என்கிறார்
லித்தியம் வளமானது
பொலிவியாவில் அது ஏராளம் இருக்கிறது
இந்த வளம் அந்த நாட்டின் வளார்ச்சியை இன்னும் இன்னுமாய் நகர்த்த உதவும்
ஆனால் மூன்றில் இரண்டு பங்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை
சவால் நிறைந்ததாகவே இருக்கும்பொலிவியத் தேர்தல் 2020
சாதிக்கட்டும் ஆர்க்
#சாமங்கவிந்து10நிமிடங்கள்
04.11.2020
November 3, 2020
நோட்டிஸ் என்பது ரொம்பக் குறைவானது
ராமேஸ்வரம் கோவில் உள்ள நகைகளின் எடை குறைந்திருப்பதாகவும்
அதை ஒட்டி அங்கு வேலை பார்க்கும் பார்ப்பனர்கள் 30 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் தெரிகிறது
வெளியே வந்துவிட்டதால் கேட்கலாம்,
1) எவ்வளவு குறைகிறது?
2) எவ்வளவு இருந்தது?
3) எப்படிக் குறைகிறது?
மூன்றாவது அய்யத்தை விளக்கினால்தான் புரியும் என்று நினைக்கிறேன்
5000 உருப்படிகள் இருக்கிறது என்று கொள்வோம். அவற்றின் எடை 100 கிலோ என்றும் கொள்வோம்
எடை குறைந்திருக்கிறது என்று மிக நுட்பமாக கூறப்படுகிறது
5000 உருப்படிகளில் 50 உருப்படிகள் குறைந்தாலும் எடை குறையும்
அல்லது உருப்படிகளின் எண்ணிக்கை குறையாமல் எடை மட்டும் குறைகிறதா?
இரண்டாவது காரணம் எனில் தொழிலில் அறிவுடையவர்கள்:தான் இதை செய்ய முடியும்
ஏற்கனவே பழநி முருகனை சுரண்டி கொழுத்தவர்களாயிற்றே
அதுமாதிரி சுரண்டியோ எடை குறைவான உருப்படிகளை வைத்துவிட்டு எடை அதிகமான உருப்படிகளை எடுத்திருக்கிறார்களா?
எனில் அது திருட்டு அல்லவா
ஏன் சம்பத்தப்பட்டவர்களை இன்னமும் கைது செய்யவில்லை ?
ராமேஸ்வரத்தில் தனக்கொரு கோவிலைக் கட்ட சொல்லி இறைவன் மன்னர் சேதுபதியிடம் கனவில் வந்து கட்டளை இட்டதாகவும்
அதற்கு உதவுமாறு மன்னர் இஸ்லாமியரான சீதக்காதியிடம் கேட்டுக் கொண்டதாகவும்
அவரது உதவியுடன் அந்தக் கோவில் எழுந்ததாகவும்
கல், மணல் உட்பட ஏராளமான தளவாட சாமான்கள் மிச்சப் பட்டதாகவும்
இவற்றைக் கொண்டு இன்னொரு கோவிலைக் கட்டிவிடலாமா என்று மன்னரிடம் சீதக்காதி கேட்டபோது
இறைவனின் கட்டளை எதுவென்று பார்க்கலாம் என்று மன்னர் சொன்னதாகவும்
பிறகொருநாள்,
இறைவன் மிச்சமுள்ள தளவாட சாமான்களைக் கொண்டு ஒரு பள்ளிவாசலைக் கட்ட உத்தரவிட்டதாக மன்னர் சீதக்காதியிடம் சொல்ல
அவற்றைக் கொண்டு கீழக்கரை பள்ளிவாசல் கட்டப்பட்டதாகவும்
ஒரு பெருமையும் மதங்களைக் கடந்த மாண்புமிக்க ஆன்மிக அறமும் நெகிழ்ச்சியுமான ஒரு வரலாறு இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்
ஒரு இஸ்லாமியர் இந்து ஆலயத்தை எழுப்பித் தந்திருக்கிறார்
இந்துக் கடவுள் பள்ளிவாசலைக் கட்ட கட்டளை இட்டிருக்கிறார்
புனைவாகக்கூட இருக்கட்டும்
இந்த அறம் கொண்டாடத் தக்கது
இப்படியான ஒரு இடத்தில் இறைவனுக்கு ஊழியம் செய்பவர்களால் இந்தக் காரியம் நடைபெற்றிருப்பது
கவலைக்குரியது
கண்டிக்கத் தக்கது
தண்டிக்கத் தக்கது
நோட்டிஸ் என்பது ரொம்பக் குறைவானது
நியாயம் வேண்டும்
03.11.2020
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)