இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 65
July 15, 2021
வாழ்த்துகள் எங்கள் அப்பா தோழரே
அன்பின் முதல்வருக்கு,
வணக்கம்.
இன்று நமது தோழர் சங்கரய்யா அவர்களுக்கு நூறாவது பிறந்த நாள்அரசு விழாவாக அதைக் கொண்டாட வேண்டும் என்று கோரினோம்குறைந்த அவகாசம், நடைமுறை சிக்கல் போன்றவை அது நிகழாமல் செய்துவிட்டிருக்கும் என்றே கருதுகிறேன்அவரது நூற்றாண்டு தொடக்கத்தில் இரு செய்திகளையும் ஒரு கோரிக்கையையும் உங்களிடம் வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது1968 இல் இருமொழிக் கொள்கையை சட்டமன்றத்தில் அண்ணா கொண்டு வருகிறார்பட்டும் கற்றும் தெளிந்த அனுபவத்தோடுஇதை வாழ்த்துகிறேன். ஆனால் ஒருமொழிக் கொள்கையை நீங்கள் கொண்டு வந்திருக்க வேண்டும். இதை ஒருநாள் நீங்கள் உணர்வீர்கள்என்று கூறினார்அதை நாம் உணார்கிறோம்ஆனால், அதுகுறித்து எதுவும் பேசுவதற்கோ கோருவதற்கோ உரிய நேரம் இது இல்லை1992 இல் சட்டமன்றத்தில் பேசும்போதுதிமுகவும் அதிமுகவும் உரிமை மற்றும் மாநில சுயாட்சி குறித்து அதிகமாக பேசுவதும் செயல்படுவதும் மகிழ்ச்சி அளிக்கிறதுஆனால் தராளமயமாக்கல் அனைத்தையும் உலக வங்கியிடம் கொண்டுபோய் அடகு வைத்துவிட்ட பிறகுதாரளமயத்தை உலகமயமாக்கலை எதிர்க்காமல் இவற்றை அடைய இயலாது என்பதை உணருங்கள் என்றார்இதை கோரிக்கையாக வைக்க ஆசைப்படுகிறேன்வெற்றி பெற்றதும் நீங்கள் தோழர் சங்கரய்யா அவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற பாங்கு எங்களை நெகிழச் செய்ததுதந்தை மகன் பாங்கு அது அந்தத் தந்தையின் கோரிக்கையை பரிசீலியுங்கள்தாராள மயத்தை, உலகமயமாக்கலை எதிர்த்து களமாடாமல் அதை அடைய இயலாதுதிமுக அவற்றிற்கெதிராக களமாடுவதுஅரசு விழாவைவிட அவரை மகிழ்ச்சிப்படுத்தும்அதுதான் அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் வாழ்த்துமாகும்நன்றி முதல்வரேவாழ்த்துகள் எங்கள் அப்பா தோழரே
July 7, 2021
அசந்தல்
ரெண்டு மணிக்கு வருவதாக சொல்லி மூன்று மணிக்கு வந்த பிள்ளை சொன்னான்
”செத்த செத்து தூங்கிட்டேன் சார்” என்னாது செத்து தூங்கிட்டியா?“அசந்தல் ஸ்லிப்பாகி செத்துனு வந்துடுச்சு சார்”அட அழகா இருக்கே“அசந்தல்”ஒன்றியம் முழுக்க இந்த இயக்கம் ...

UAPA சட்டத்திற்கு எதிராக
கொடுஞ்சட்டத்தால் சிறையிருப்போரை விடுவிக்கக் கோரிஇன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகே CPM நடத்தும் கண்டண இயக்கம்
விசிக உரிமையோடும் உணர்வோடும் அதில் பங்கேற்கிறதுதிமுகவும் காங்கிரசும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே நமது ஆசைகூட்டணிக்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப் பெரிய கண்டன இயக்கத்தை திமுக முன்னெடுக்க வேண்டும்ஒன்றியம் முழுக்க இந்த இயக்கம் வீரியத்தோடு கொண்டுசெல்லப்பட வேண்டும்
June 25, 2021
குலக்கல்வி ஒருபோதும் …
”பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்களை வளரச் செய்தல்” என்ற பொருளில் புதுச்சேரி அரசுப் பள்ளி குழந்தைகளோடு 25.01.2021 அன்று காணொலியில் கலந்துரையாடி இருக்கிறார் புதுச்சேரியின் துணைநிலை ஆளுனர் திருமிகு கிரண்பேடி
மிக அருமையான தலைப்பு. குழந்தைகளை பொறுப்புள்ள குடிமக்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாமும் காலங்காலமாக தெருவிறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறோம்
பொறுப்புள்ள குடிமக்கள் என்பவர் யார்? ஒரு பொறுப்புள்ள குடிமகன் அல்லது குடிமகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? என்பதில்தான் நமக்கும் மதவாதிகளுக்கும் இடையே பிரச்சினை இருக்கிறது
இந்த முரண்பாட்டைத்தான் அந்தக் காணொலி நிகழ்ச்சியிலும் நம்மால் காண முடிந்தது. மநுவாதிகளின் பிரதிநிதி ஒருவராக அவர் தனது கருத்தை வைக்கிறார்
ஒரு பள்ளிக் குழந்தை ஒரு கேள்வியோடு எழுகிறாள்.
அந்தக் கேள்வி அந்தக் குழந்தையினுடையதுதானா அல்லது யாரோ எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொண்டு எழுந்து நிற்கிறாளா என்கிற அய்யம் இயல்பாகவே எழுகிறது.
ஏனெனில் கேள்வி அப்படிப்பட்டது.
மனப்பாட வழிக் கல்வி தங்களை நூறாண்டுகளுக்கு பின்நோக்கி இழுப்பதாக்க் கூறிய அந்தக் குழந்தை. செயல்வழிக் கல்வி என்பது தங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காதா? என்றும் கேட்கிறாள்
இதற்காகவே காத்திருந்தவர்போல் ஒருவிதத் துள்ளலோடு,
புதியக் கல்விக் கொள்கை செயல்வழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும்
அந்தத் திட்டம் அமலுக்கு வரும்வரை குழந்தைகள் காத்திருக்கக் கூடாது என்றும்
த
ங்களது பெற்றோர் வழியிலான குலத்தொழிலை மிகுந்த கவனத்தோடு குழந்தைகள் கற்க வேண்டும் என்றும் கூறியதோடு நிற்காமல்இந்தக் கருத்தை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்
நஞ்சைத் தேனோடு சரிவிகிதத்தில் கலந்து தருகிற வித்தையில் அவர் சனாதனவாதிகள் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பது தெளிவாகிறது
ராஜாஜி அவர்களால் கொண்டு வரப்பட்டு தந்தை பெரியார், இடதுசாரிகள் ஆகியோரின் கடும் போராட்டத்தின் விளைவாக ராஜாஜி வீட்டிற்கு அனுப்பப்பட்டு பெருந்தலைவர் காமராசரால் திரும்பப் பெறப்பட்டத் திட்டம் குலக்கல்வித் திட்டம்
பெற்றோரின் தொழிலைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பதுதான் அன்றையக் குலக்கல்வியின் சாரம்
இன்றையப் புதியக் கல்விக் கொள்கையின் சாரமும் அதுதான்
மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கிற புதியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் கடுமையான போராட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.
ஆசிரிய இயக்கங்கள் இந்த விஷயத்தில் போதுமான அளவு கவனத்தைக் குவிக்கவில்லை என்பதுதான் மிகுந்த கவலையைத் தருகிறது
பொறுப்புள்ள குடிமக்களாகப் பிள்ளைகளை வளார்த்துவிடுகிற சூழல் இந்தப் பொழுதிலேகூட ஆசிரியர்களுக்கு இல்லை.
100 விழுக்காடு தேர்ச்சியைக் கொடுத்தாலும் ஏன் 101 விழுக்காடு எடுக்கவில்லை என்றுகூட அதிகாரிகள் கேட்டுவிடக்கூடிய சூழல் இருக்கிறது.
மதிப்பெண்னும் தேர்ச்சி விழுக்காடுமே ஆசிரியர்களின் தகுதியை தீர்மானிப்பதாக அமைகிறது.
ஆசிரியருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவை இன்றைய கல்விச் சூழல் பெருமளவு சேதப்படுத்தி வைத்திருக்கிறது
நிறைய விசயங்களை ஆவணப்படுத்த வேண்டிய அவசியத்தை ஆசிரியர்களுக்கு இன்றைய கல்விக் கட்டுமானம் வழங்கி இருக்கிறது
நிறைய விலை இல்லாப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டியதும் அவற்றை ஆவணப்படுத்தி வைத்திருப்பதுமாக ஆசிரியர்களை கிட்டத்தட்ட பகுதிநேர பதிவு எழுத்தர்களாகவே மாற்றி வைத்திருக்கிறது
இந்தச் சூழல் ஆசிரியர்கள் வேறு வழியே இல்லாமல் மனப்பாடம் செய்யச் சொல்கிற ஆட்களாகவே மாறுவது தவிர்க்க முடியாததாகிறது. இதுதான் புதியக் கல்விக் கொள்கையின் எதிர்பார்ப்பும்கூட
மனப்பாடம் என்று வந்துவிட்டால் கல்வி மீண்டும் அவாள்களுடையதாகி விடும்
ஆசிரியர்களுக்கு மிகச் சிக்கலான நேரம் இது. கல்விக் கூடங்களில் சனாதனத்திற்கு எதிராக்க் களமாட வேண்டிய நேரம்
இந்த நிலையில் புதியக் கல்விக்கொள்கை அமல்படுத்தபடும் வரைக்கும்கூட காத்திருக்காமல் குலக்கல்வியைக் கற்கவேண்டும் என்று பேடி அவர்கள் கூறுகிறார். இந்த நிமிடமே குழந்தைகள் குலக்கல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவரது பதைபதைப்பை நம்மால் கோனார் நோட்ஸ் இல்லாமலேயே புரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு சமூகத்தின் நகர்தலுக்கு உதவுவது நல்ல கல்வியின் ஒரு கூறு. கல்வியானது சமூகத்தை நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். நகராத சமூகம் தேங்கும்.
நகர்தலில் இரண்டு வகைகள் உண்டு
1) முன் நோக்கி நகர்தல்
2) பின் நோக்கி நகர்தல்
எவ்வளவுதான் முன்னேறிய சமூக இருப்பினும் நகர்தலை நிறுத்திக் கொள்ளும் எனில் அந்தப் புள்ளியில் அது தேங்கிவிடும்
முன் நோக்கி நகராத சமூகம்கூட ஏதோ ஒரு இடத்தில் தேங்கித்தான் போகும் . அது அவ்வளவு ஒன்றும் ஆபத்து இல்லாததும்கூட . தேங்குகிற சமூகம் கொசுக்களை உருவாக்கும் .
ஆனால் பின்நோக்கி நகர்கிற சமூகமோ தானே கொசுவாக மாறும் . ஏதோ ஒரு கட்டத்தில் அந்தச் சமூகத்தை எதிர் விழுமியங்கள் விழுங்கித் தின்றுவிடும்
இதைத்தான் அந்தக் குழந்தை கூறி இருக்கிறாள் . குடிமக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துவது என்பதும் பின்நோக்கி நகர்தலின் ஒரு கூறு. இந்தக் காரியத்தைத்தான் மனப்பாடவழிக் கல்வி செய்துகொண்டிருக்கிறது என்பதுதான் அந்தக் குழந்தையின் வேதனை.
நொடிக்கு நொடி நகர்தலின் வேகமும் இலக்கும் கூர்மைபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் . இல்லாது போனால் அந்தச் சமூகம் அறிவியல் , கலை , கலாச்சாரம் , அரசியல் போன்ற துறைகளில் பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி நகர்ந்துவிடும் .
கலை , அறிவியல் , கலாச்சாரம் , அரசியல் ஆகியவற்றை கங்கு அனையாமல் காக்கும் இந்த நகர்தலை இயக்கும் சக்திகளுல் கல்வி மிக முக்கியமானது . ஆகவே தேவைக்கு ஏற்ப கல்வித் திட்டத்தையும் அதன் கட்டமைப்பையும் அவ்வப்போது கூர்தீட்டிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியமாகும் .
அதனால்தான் ஒவ்வொரு சமூகமும் குறிப்பிட்ட காலகட்ட இடைவெளிகளில் தமது குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்தை மிகுந்த கவனத்தோடு புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது .
தமது மண்ணின் எதிர்காலத்தை நிர்மானிக்கப் போகிற கல்வித் திட்டங்களை வகுப்பதற்காக அனைத்துவகை கல்விமான்களையும் அறிவியல் வல்லுனர்களையும் சமூகத்தின்மீது அக்கறையுள்ள ஆளுமைகளையும் அவை பயன்படுத்துகின்றன .
இவ்வளவு முன்னெடுப்புகளை எவ்வளவுதான் கவனமாக மேற்கொண்டாலும் ,
குறிப்பிட்ட மண்ணை எந்த அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறதோ அந்த அரசியலின் சாயம் நேரடியாகவோ , மறைமுகமாகவோ , கூடுதலாகவோ குறைச்சலாகவோ அந்தக் கல்வித் திட்டத்தில் நிச்சயமாக வெளிப்படவே செய்யும் .
இப்போது இந்தியாவிலும் ஒரு புதிய கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது .
அவ்வப்போது புதியக் கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் படுவது இங்கும் வாடிக்கைதான் . எனவே இதில் ஒன்றும் வியப்பில்லை .
தேன் தடவிய சொற்களோடு வந்திருக்கிறது இன்றையக் கல்விக் கொள்கை . கொஞ்சம் கவனம் பிசகிய நிலையில் வாசித்தாலும் வாசிப்பவர்களை சாய்த்துவிடக்கூடிய அளவில் வசீகரமான வார்த்தை வலையாக அதை தயாரித்து வீசியிருக்கிறார்கள்
இப்போதுவர இருக்கிற புதிய கல்விக் கொள்கை ராஜாஜி அவர்களின் குலக் கல்வித் திட்டத்தைவிட கொடூரமானதாக இருக்கிறது
29.06.1952 அன்று திருவாண்மியூரில் சலவைத் தொழிலாளிகளின் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினர் திரு ராஜாஜி.
தங்களதுகுழந்தைகள் படிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என சலவைத் தொழிலாளிகள் அவரிடத்தில் கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களது கோரிக்கை என்பதுகூட பள்ளிக் கல்வியைத் தாண்டியதாக இல்லை.
இந்தக்கோரிக்கையே ராஜாஜிக்கு சொல்லொன்னாத கோவத்தைக் கொடுக்கிறது.
எல்லோரும்படித்துவிட்டால்எல்லோருக்கும்வேலையை எப்படித் தருவது ?
கொஞ்சம்எண்ணிக்கையிலானவேலைதான் இருக்கிறது. அவரவரும் அவரது குலத் தொழிலை திறம்படச் செய்தாலே போதும் .இந்த பூமி செழிக்கும் என்பது மாதிரி கொந்தளித்துவிட்டு நகர்கிறார்
இதேகாலகட்டத்தில்ராஜாஜியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த திரு சென்னாகவுடா அவர்கள் யாதவா சமூகத்தை சார்ந்த மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்
எல்லோரும்படித்துவிட்டுஅரசு வேலைக்குத்தான் வரவேண்டும் என்று கருதக் கூடாது.. நிறைய பால் பண்ணைகளை நிறுவ வேண்டும். நமது அறிவையும் திறமையையும் முழுவதுமாக அந்தத் துறையிலேயே செலவு செய்து பால் உற்பத்தியிலே முன்னனி நாடாக நமது நாட்டை மாற்ற வேண்டும்
என்றுஉரையாற்றிவிட்டுநகர்கிறார் அவர்
இந்தஇரண்டு உரைகளையும் கூர்ந்து கவனித்த தந்தை பெரியார் ராஜாஜி அரசாங்கம் ஏதோ ஒரு மோசடியான கல்வித் திட்டத்தைக் கொண்டுவரப் போகிறது என்று உணர்கிறார்
அதுகுறித்துதினமும் உரையாடவும் எழுதவும் தொடங்குகிறார். அவர் கணித்தது போலவே ரஜாஜி அரசாங்கம் கொடூரமான குலக்கல்வித் திட்டத்தை அமலுக்கு கொண்டுவரப் போவதாக அறிவித்தது
அந்தத்திட்டத்தின்படி
நகரப்பள்ளிகள் வழக்கம்போல செயல்படும். அங்கு ஆறு மணி நேரமும் குழந்தைகள் கல்வியைப் பெறுவார்கள்
கிராமத்துப்பள்ளிகள்,
1) மூன்றுமணி நேரம் கொண்ட இரண்டு ஷிஃப்டுகளாக செயல்படும்
2) முதல்ஷிஃப்டிற்கு பள்ளிக்கு வரும் குழந்தைகள் இரண்டாவது ஷிஃப்டிற்கு வரத் தேவை இல்லை
3) முதல்ஷிஃப்டிற்கு பள்ளிக்கு வரும் குழந்தைகள் இரண்டாவது பாதி நேரத்தில் தங்களது குலத்தொழிலைக் கற்றுக் கொள்வார்கள்.
4) இரண்டாவதுஷிஃப்டிற்கு பள்ளிக்கு வரும் குழந்தைகள் முதல் பாதியில் தங்களது குலத்தொழிலைக் கற்றுக் கொள்வார்கள்
அதாவது செருப்பு தைக்கும் தொழிலாளியின் பிள்ளை பாதி நேரம் கல்வி கற்பான். மீதி நேரம் செருப்பு தைக்க கற்றுக் கொள்வான். ஒரு தச்சரின் பிள்ளை தனது கல்வி நேரத்தில் பாதி நேரத்தை தச்சுத் தொழிலைக் கற்பதற்காகச் செலவிடுவான். துப்புறவுத் தொழிலாளியின் குழந்தை தனது கல்வி நேரத்தில் பாதி அளவு துப்புறவுத் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்
குலத் தொழில் இல்லாத குழந்தைகளுக்கு
1) விவசாயம்
2) கொட்டகைபோடுதல்
3) செங்கல்அறுத்தல்
4) சாலைகள்போடுதல்
5) கிணறுவெட்டுதல்
போன்றதொழில்களில் பயிற்சி கொடுக்கப்படும் என்று அரசு கூறியது
இந்தக்கொடுமைகள் நகரத்துப் பள்ளிக்களுக்கு இல்லை. கிராமத்தில் உள்ள பார்ப்பனக் குழந்தைகளும் ஆண்டைகளின் குழந்தைகளும் நகரத்துப் பள்ளிகளில் இருந்ததால் அவர்களும் இந்தக் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள்
ஆக, இந்தக் குலக்கல்விச் சகதியில் சிக்கிக் கொள்வது கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் குழந்தைகள் மட்டும்தான்
மேற்கூறியதொழில்கள் 5 வயதுக் குழந்தைகள் கற்றுக் கொள்வது என்பது மிகவும் ஆபத்தானது.
மட்டுமல்ல, காலையில் மேற்காணும் தொழிலில் ஈடுபடும் குழந்தைகள் மதியம் பள்ளிக்கு வந்தால் களைப்போடு இருப்பார்கள். அவர்களால் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும்?
போக, இது சாதிய கட்டமைப்பை இன்னும் கெட்டிப்படுத்திவிடும் என்பதைப் புரிந்துகொண்ட தந்தை பெரியார்
சாதிஒழிப்பும் புதியக் கல்விக் கொள்கை ஒழிப்பும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்றும் சாதி ஒழிய வேண்டும் என்றால் புதியக் கல்விக் கொள்கை ஒழிய வேண்டும் என்றும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தார்
11.07.1953 மற்றும்12.07.1953 ஆகியதேதிகளில் தஞ்சையில் திராவிடர் கழக மாநாடு நடைபெறுகிறது
அதில்12.07.1953 அன்றுநடைபெற்ற மாநாடு புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடாகவே நடைபெறுகிறது.
அந்தமாநாட்டில் குலக்கல்விக்கு எதிராக,
1) 14.07.1953 அன்று சட்டசபை மறியல் செய்வது என்றும்
2) 20.07.1953 அன்று பள்ளிகளை மறிப்பது என்றும்
தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன
20.07.1953 அன்று மாணவர்களை எப்படியேனும் பள்ளிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் அரசு படாத பாடு பட்டது. வீடுவீடாய் சென்றேனும் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்று ஆசிரியர்களை முடுக்கி விட்டது
குழந்தைகள்தாம் செய்யும் தொழிலுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தானே பெற்றவர்கள் தங்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அவர்களுக்கு பள்ளிக்கூடங்களே அவர்களது குலத் தொழிலை சொல்லிக் கொடுப்பது என்ன நியாயம் என்று தந்தை பெரியார் கேட்டார்.
அப்போதுபலமாக இருந்த இடதுசாரிகள் சட்டசபையில் முடிந்தவரைப் போராடிப் பார்த்தார்கள்.
ராஜாஜிதனக்கே உரிய பிழைக்கும் தந்திரங்களால் அனைத்தையும் எதிர் கொண்டு சமாளித்து வந்தார்
ராஜாஜியைவீட்டிற்கு அனுப்பாமல் குலக்கல்வியை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்த தந்தை பெரியார் அதை வெளிப்படையாக எடுத்துக் கூறவும் செய்தார்
காங்கிரஸ்உறுப்பினர்களின்உதவி இதற்கு எந்த அளவிற்கு தேவை என்பதையும் அவர் உணர்ந்தவராகவே இருந்தார்
காமராசருக்கும் ராஜாஜிக்கும்உள்ள இடைவெளியை குலக்கல்வியை அப்புறப் படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார்
ராஜாஜிவீட்டிற்குப் போக வேண்டும். அது நம்மால் ஆனால் என்ன? காமராசரால் ஆனால் என்ன? என்றெல்லாம் பேசுகிறார்
அதன்பிறகு காங்கிரசிற்குள் சில நடக்கின்றன
10.04.1952 அன்று முதல்வராகப் பொறுப்பேற்ற ராஜாஜி சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து 09.04.1954 அன்று பதவி விலகுகிறார்
காமராசர்13.04.1954 அன்றுமுதல்வராகப் பதவி ஏற்கிறார்
மாறுபாடானகருத்துகள் புதியக் கல்விக்கொள்கைமீது இருப்பதாலும், சர்க்கார் கட்சியிலும் இது பிரதிபலிப்பதாலும் மிகவும் பயனுள்ள இந்தத் திட்டத்தை மிகுந்த விசனத்தோடு திரும்பப் பெறுவதாக 17.05.1954 அன்று சட்ட சபையில் அன்றைய கல்வி அமைச்சர் திரு சி.சுப்ரமணியம் அறிவிக்கிறார்
இந்தத்திட்டத்தை அதன் பயன்பாடு கருதி ஏதேனும் ஒரு அரசாங்கம் மீண்டும் கையில் எடுக்கும் என்றும் அவர் அன்று மேலவையில் கூறிதாக ஒரு தகவல் உண்டு. இதை அவர் மறுத்துள்ளதாகவும் தகவல் உண்டு.
அவர்சொல்லாவிட்டாலும்அவரது விருப்பம் அதுதான்.
அந்தவகையில் இன்று மீண்டும் இந்தத் திட்டத்தை மைய அரசு கையெடுத்திருக்கிறது.
திருமிகுகிரண்பேடி போன்றவர்களுக்குஇந்தச் சட்டம் அமலாகும் வரைக்கும்கூட காத்திருக்கத் தயாராக இல்லை. குழந்தைகள் இந்த நிமிடமே தங்களது பெற்றோர்களின் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.
அந்தக் குழந்தை விரும்பிய செயல்வழிக் கல்வி என்பதை இப்படி எளிதாகப் புரிந்து கொள்ளலாம்,
கீழடியப் பற்றி ஐந்து மதிப்பெண்ணிற்கு மனப்பாடம் செய்வது ஒரு வகை
கீழடிக்கே குழந்தைகளை அழைத்துச் சென்று பார்வையிடச் செய்வது என்பது செயல்வழிக் கல்வி
இதைக் கோரிய அந்தக் குழந்தைக்குத்தான் செயல்வழிக் கல்வி என்பது குலக்கல்வி என்று திரித்து பாடம் எடுக்கிறார் பேடி
குலக்கல்வி ஒருபோதும் பொறுப்பான குடிமக்களை உருவாக்காது
நாம்என்ன செய்யப் போகிறோம்?
நன்றி : “அறம் வெல்லும்”
ஏப்ரல் 2021
ஊசியின் காதில் ஒட்டகம்கூட நுழையலாம் ….
”பேச்சு வழக்கில் உள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். காப்பாற்றுவது போதாதென்று அவற்றை வளார்த்தெடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள்
இப்படிக்கருதுபவர்கள் குறுகிய மனம் கொண்டவர்கள். இப்படியானக் கருத்து தேச விரோதமானது
எல்லாகிளை மொழிகளையும் “இந்துஸ்தானி” யோடு இணைத்துவிட வேண்டும்
இதைதற்கொலை என்று கருதக் கூடாது. இது தியாகம்”
என்று27.08.1925 நாளிட்ட“யங் இந்தியா” வில் காந்தி எழுதியதாக “மொழி எங்கள் உயிருக்கு நேர்” என்ற தனது நூலில் வைத்திருக்கிறார்
இந்தஆண்டில் எனக்கு அய்யம் இருக்கிறது. காரணம், அவர் திராவிடர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ”யங் இந்தியா” வில் எழுதியதாக தோழர் அரண் தனது நூலில் கூறுகிறார்
தோழர்ஆழி செந்தில்நாதன் தனது மேற்காணும் நூலில் “1917 கும் 1920 கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியை தேசிய விடுதலை இயக்கத்தின் மையத்திற்கு நகர்த்தினார்” என்றும் குறிப்பிடுகிறார்
இந்த காலக் குழப்பத்தை நாம் நின்று விவாதிக்க வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை
ஏன்எனில்,
காந்திஇந்துஸ்தானியில்இருந்து இந்திக்கு தாவி விட்டார் என்பது தெளிவாகிறது. அவர் எப்போது இந்திக்குத் தாவினார் என்பது இப்போது நமக்கு அவசியமில்லாத ஒன்று
அவர்இந்துஸ்தானியைஏன் கை எடுத்தார்? கை எடுத்த இந்துஸ்தானியை கீழே வைத்துவிட்டு இந்தியை ஏன் கை எடுத்தார்? என்பதே நாம் இப்போது உரையாட வேண்டிய ஒன்றாக இருக்கிறது
காந்தி“இந்துஸ்தானி” யை இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கான கருவியாகப் பார்த்திருக்கிறார்.. ஆகவே இந்துஸ்தானியை இந்திய மொழியாக அறிவித்துவிட வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
அப்படிஅறிவித்து விட்டால் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான வேற்றுமைகளும் சண்டை சச்சரவுகளும் குறைந்து விடும் என்றும் அவர் கருதினார் என்பதாக தோழர் அரண் தனது “இந்திய அரசிலமைப்புச் சட்டத்தில் இந்தி பேரினவாதம்” என்ற நூலில் குறிப்பிடுகிறார்
இதைகாங்கிரசில் இருந்த இந்துமதத் தீவிரவாதிகள் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள்
அவர்கள்இந்தியை இந்துக்களின் மொழியாகவும் இந்துஸ்தானியை இஸ்லாமியர்களின் மொழியாகவும் கட்டமைத்துவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள்
அவர்கள்சமஸ்கிருதத்தைத்தான்இந்துக்களின் மொழியாகக் கட்டமைத்து அதை இந்தியாவின் மொழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று துடித்தார்கள்
அதில்அவர்களுக்கு சிக்கல்கள் இருந்தன
சமஸ்கிருதம்பேச்சு வழக்கில் இல்லை
இந்துஸ்தானியிலோ பாரசீகச்சொற்களும் அரபிச் சொற்களும் கலந்த மொழியாக இருந்த்தது. இது அவர்களை உறுத்தியது. எனவே இந்துஸ்தானியில் உள்ள அந்த மொழிச் சொற்களுக்கு பதிலாக சமஸ்கிருத சொற்களை இணைத்து இந்தியை உருவாக்க முயன்றனர்
மொழி இரு மதத்தவரை ஒன்றிணைக்கும் என்று காந்தி கருதினார். மொழியைக் கொண்டு இரு மதத்தவரிடையே உள்ள பிரச்சினைகளை கெட்டிப்படுத்திவிட முடியும் என்று அன்றைக்கு காங்கிரசில் இருந்த இந்துமதத் தீவிரவாதிகள் கருதினர்
இதைநாம் இப்படி கொள்ளலாம்,
சிலகிளை மொழிகளை அழித்து ஒரு ஒற்றைப் பொதுமொழியை உருவாக்குவதன் மூலம் மதமாச்சிரியங்களை கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று காந்தி கருதினார்.
ஒருஒற்றை மொழியைத் திணிக்க முயற்சித்தபோது ஒரே மதத்தவரைக் கொண்ட ஒரு நாடு இரண்டாக உடைந்ததை வரலாறு நமக்கு எச்சரித்துக்கொண்டே இருக்கிறது
அதுமட்டும் அல்ல,
அந்தமுயற்சிதான் உலகத்தாய்மொழி நாளினையும் உலகிற்கு கொடை அளித்தது.
பாகிஸ்தானின்மேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்களின் தாய்மொழி உருதாகவும் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் தாய்மொழி வங்கமாகவும் இருந்தது.
மேற்குப்பாகிஸ்தான் கொஞ்சம் அரசியல் செல்வாக்கோடு இருந்த காரணத்தால் வங்கமொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தானியரை மக்களை சிறுபான்மையினராக பாவிக்க ஆரம்பித்தது.
இதன்ஒரு கூறாக கிழக்குப் பாகிஸ்தானியர்மீது தங்களது தாய்மொழியான உருதினை திணிக்க ஆரம்பித்தது
கிழக்குப்பாகிஸ்தானியர்கள், அதிலும் குறிப்பாக கிழக்குப் பாகிஸ்தான் மாணவர்கள் இதற்கு எதிராக மிக மூர்க்கமாக போராடினார்கள். அப்படி போராடிய மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயற்சித்தது பாகிஸ்தான் அரசு.
அதன்விளைவாக 21.02.1952 அன்று டாக்காவில் போராடிக்கொண்டிருந்த மாணவர்கள்மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தியது அரசு. இதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டனர்
இது”வங்கதேசம்” உருவாவதற்கான மிக முக்கியமான காரணமானது. வங்கம் உருவானபிறகு அவர்கள் ஒவ்வொரு பிப்ரவரி 21 அன்றும் மொழித் தியாகிகள் தினமாகக் கொண்டாடுவது என்று முடிவெடுத்து கொண்டாட்த் தொடங்கினார்கள்
பிரவரி21 ஐநாவும் யுனெஸ்கோவும் உலகத் தாய்மொழி தினமாக அங்கீகரித்தன. அதன்பிறகுதான் நாம் பிரவரி 21 ஐ உலகத் தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடுகிறோம்
ஒருமொழியைத் திணித்தால் ஒரு மதத்தவரே வசிக்கும் நாடும் இரண்டாகப் பிளவுபடும் என்கிற இந்தப் படிப்பினையை காந்தியார் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது நிகழ்வதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே அவர் மறைந்து விட்டார்
ஆனால்இந்த வரலாற்று உண்மையை சரியாகப் படித்துக் கொள்ளாதவர்களாகவே பாஜகவினரும் ஆர்எஸ்எஸ் காரர்களும் ஒற்றைபடுத்தலில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறனர்
ஏதோஒரு வகையில் இந்தியை ஒற்றை மொழியாகக் கொண்டுவந்துவிட ஆசைப்படுகின்றனர்.
இந்திஎன்பதுகூட அவர்களது இடைக்கால ஏற்பாடுதான்
சமஸ்கிருதத்திற்கு உயிரூட்டஆயிரமாயிரம் கோடிகளை அள்ளி இறைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
சமஸ்கிருதம்வளார்ந்ததும் அல்லது இன்றைய அளவிலேயேகூட அதனை ஒற்றை மொழியாக்க வெறிகொண்டே அலைகிறார்கள்
இதற்காகஇவர்கள் கையெடுக்கும் யுக்திகள்தான் மிகமிக ஆபத்தானவைகளாக இருக்கின்றன
இவர்கள்இந்தியை ஒற்றைமொழியாகக் கொண்டு வருவதற்கு செழித்தோங்கி இருக்கிற இந்திய மொழிகளைப் படுகொலை செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள்
இப்படிச்செய்வதன் மூலம் அந்த மொழிகளின், அவற்றைப் பேசும் தேசிய இனங்களின் அடையாளங்களை, விழுமியங்களை அழித்தொழிக்க அல்லது நீர்த்துப்போகச் செய்ய நினைக்கின்றனர்
இப்படிச்செய்வதன் மூலம் இந்திபேசும் மக்களுக்கு அடிமைகளாக, இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றுவது என்பது அவர்களது திட்டம்
சுறுக்கமாகச்சொன்னால் மொழியை ஆரியப்படுத்துவதன் மூலம் மண்ணை ஆரியப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்கள்
மொழியைசனாதனப் படுத்துவதன் மூலம் மன்னை சனாதனப்படுத்த முயற்சி செய்கிறார்கள்
மன்னைசனாதனப்படுத்துவதற்குமொழியை சனாதனப்படுத்த வேண்டும். அதற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடிய மொழிகளை அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்
அவர்களதுஇந்த முயற்சிக்கு பெரும் சவாலாக இருப்பது தமிழும் தமிழ்நாடும். காரணம் அவர்களது இந்த சூழ்ச்சியை சரியாகப் புரிந்துகொண்ட நாடு தமிழ்நாடு. புரிந்து கொண்ட்து மட்டுமல்ல, அதற்கு மிக மூர்க்கமாக எதிர்வினையைத் தந்துகொண்டிருக்கிற பூமியாகவும் தமிழ்பூமி இருக்கிறது
அதனால்தான்இப்போது நடக்கும் சட்டசபைக்கான பொதுத் தேர்தலை சனாதனத்திற்கு எதிராக நடக்கும் போர் என்று பிரகடனப்படுத்தியது
அவர்களும்நமக்கு எதிராக இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள்
இப்போதுஇருக்கும் சில அரசிலமைப்புச் சட்டங்களை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின்120(1) பிரிவு பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்கிறது. ஆங்கிலமும் இந்தியும் தெரியாத உறுப்பினர்கள் அவைத் தலைவரின் அனுமதி பெற்று தங்களாது தாய்மொழியில் பேசலாம் என்று கூறுகிறது
குறித்துக்கொள்ளுங்கள், அவைத் தலவர் அனுமதி தந்தால்தான் உறுப்பினர் தனது தாய்மொழியில் பேச முடியும்
ஆனால்மாநிலங்களைப் பொறுத்தவரை
“In the official language or in the language of the state or in hindi or in English” என்று தெளிவாக இருக்கிறது
மாநிலங்களைப்பொறுத்தவரை அந்த மாநில மொழியைத் தவிர இந்தியில் பேச அவைத் தலைவரின் அனுமதி தேவை இல்லை.
அதனால்தான்பாஜகவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர்கூட சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று விரும்பினோம்
அப்படியாரேனும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் இந்தியைத் தமிழில் எழுதி வைத்து சபையில் படிக்க ஆரம்பித்து விடுவார்கள்
மொழியைப் பல வகைகளில் கொலை செய்யலாம். அவற்றில் மூன்றை இங்கு இப்படியாக வகைப் படுத்தலாம்
1) இணை மொழியாக இன்னொரு மொழியை புழக்கத்தில் விட்டு சிறிது சிறிதாக சொந்த மொழியை அப்புறப்படுத்த வைத்தல்
2) அந்தக் குறிப்பிட்ட மொழி பேசும் வாழிடத்தில் இன்னொரு பெரும்பான்மை மொழி பேசும் மக்களை பேரதிகமாக குடியமர்த்துதல்
3) ஒரு மொழி பேசும் பிராந்தியத்தை இரண்டாய் மூன்றாய் துண்டாடுதல்
ஒருஇனம் பெரும்பான்மையோடும் தனித்தன்மையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேறொரு ஆதிக்க இனத்தவரை குடியேற வைப்பது என்பது மிக முக்கியமான ஒன்று
இப்படிச் செய்வதன் மூலம் ஒரு காலகட்டத்தில் குடியேறிய இனம் பூர்விக இனத்தைவிட அதிகமாக மாறும்படிப் பார்த்துக் கொண்டாலே போதும் அது பூர்விகக் குடியின் அதிகார அழிவிற்கான முதல்படியாக அமையும்.
இப்படியாக குடியேறியவர்கள் பெரும்பான்மையினராக மாறுகிறபோது அரசியல் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது கைகளுக்கு சென்றுவிடும்.
இதன் அடுத்த நகர்வாக, பெரும்பான்மை மொழி அலுவல் மொழியாக ஆட்சி மொழியாக மாறிவிடும்
பெரும்பான்மை மக்களது கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, ஆகியவற்றை அந்தப் பகுதி மக்கள் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இறுதியாக அந்த இனமக்கள் தங்களது அடையாளத்தை இழந்து இரண்டாந்தர, அடிமைக் குடிமக்களாக மாற நேரிடும். மாற மறுக்கும் மானமுள்ள மக்களை சிறையெடுப்பதும் அழித்தொழிப்பதும் நிகழும்
மானமுள்ள அந்த மண்ணின் இளைஞர்கள் அமைப்பாகத் திரண்டு தங்களது அடையாள பண்பாட்டு மீட்சிக்காக போராடவும் நேரிடும். வேறு வழியே இல்லாமல் ஆயுதம் ஏந்தவும் தேவை ஏற்படும்
ஆகச் சமீபத்தைய ஈழத்திற்கான போரட்டம் இதற்கான எடுத்துக் காட்டு
தமிழ் நாட்டிலும் இந்த நகர்வினை அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்
NLC, தபால்துறை, ரயில்வே போன்ற பொதுத் துறைகளில் கொத்து கொத்தாக இந்தி பேசும் வடநாட்டவர்களை புகுத்துகிறார்கள். கூலி வேலையிலும் லட்சக்கணக்கான இந்திக்காரர்கள் வந்திருக்கிறார்கள்
தமிழ்நாட்டில் வடநாட்டுக்காரர்களுக்கு வீடு கட்டித் தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக கூறுகிறது
தமிழ்நாட்டில் முதல்முறையாக தமிழ் மக்களிடம் இந்தியில் வாக்கு கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்
ஒரு மொழியைப் புழங்கி வரும் ஒரு இனம் அல்லது குழு அல்லது இதுபோன்ற எதுவோ ஒன்று கட்டாயத்தின் பேரிலோ அல்லது தாமாகவோ இன்னொரு மொழியையையும் சேர்த்து புழங்க வேண்டிய நிலை வருகிறது என்று கொள்வோம். அந்தச் சூழலில் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு அந்த இனம் இன்னொரு மொழியின் மீது சாயத் தொடங்குகிறது என்றும் கொள்வோம். ஒருக்கட்டத்தில் தனது சொந்த மொழியைப் புழங்காது அடுத்த மொழியைப் புழங்க ஆரம்பிக்க ஆரம்பிக்கிற புள்ளியில் அந்த இனத்தின் தாய்மொழி மரணமடையும்
தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று திரு ராமதாஸ் அவர்கள் கூறுவதை நம்மில் பலபேர் பகடீயோடு கடக்கிறோம். இது மிக மிக ஆபத்தானது.
இது பாஜகவின் செயல்திட்டம்
பலமாகஇருக்கும் தமிழ்நாட்டில் என்ன முயன்றும் உள்ளே நுழையமுடியாத சனாதனத்தை மன்னை இரண்டாய் மூன்றாய் துண்டாடி பலவீனப்படுத்துவதன் மூலம் உள்ளே நுழைக்க முடியுமா என்பது அவர்களது திட்டம்
ஊசியின்காதில் ஒட்டகம்கூட நுழையலாம் தமிழ் மண்ணில் சனாதனம் நுழைய முடியாது
ஆனாலும்கவனமாக இருப்போம்
நன்றி : உயிர் எழுத்து
மே 2021
June 24, 2021
காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்…….
கமர்கட்
இனிப்பிலும் வர்க்கபேதம்”
என்று 35 ஆண்டுகளுக்கு முன்னால் வல்லம் தாஜுபால் எழுதினார்.
காட்பரிசும் இனிப்புதான். கமர்கட்டும் இனிப்புதான். இரண்டுமே குழந்தைகளுக்குப் பிடித்தவைதான்.
ஆனால் காட்பரிஸ் ”இருக்கிற”வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமானதாகவும் கமர்கட் ”இல்லாத” வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமானதாகவும் களஎதார்த்தம் இருக்கிறது.
அதாவது குழந்தைகளுக்கான இனிப்பிலும் ஒரு வர்க்க முரண் இருக்கிறது
காட்பரிஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு கமர்கட் வாங்கித்தர மாட்டார்கள். அது மலிவானது, தரமற்றது. சாப்பிட்டால் உடலுக்கு நல்லதல்ல. மொத்தத்தில் அது தமக்கானது அல்ல என்று போகிறபோக்கில் அந்தக் குழந்தைகளுக்கு புகட்டப்படும்
கமர்கட் காட்பரிசைவிட கேடானதா என்பதுகூட அவர்களுக்கு உறுதியாகத் தெரியாது. ஆனாலும் அதை அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கித்தர மாட்டார்கள். காரணம் “இல்லாதவர்” வீட்டுப் பிள்ளைகளோடு தம் வீட்டுப் பிள்ளைகளை கமர்கட் சமப்படுத்திவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை
கமர்கட் சாப்பிடும் குழந்தைகளுக்கு காட்பரிஸ் சாப்பிட முடியாது. காரணம் அது அவர்களால் வாங்க முடியாத அளவு விலையைக் கொண்டது
குழந்தைகள் தின்னும் இனிப்பில் இவ்வளவு வர்க்க முரண் இருக்குமானால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியில் வர்க்க முரண் இருக்கத்தானே செய்யும்
இந்தப் புள்ளியில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது
ஒரு காலகட்டம் வரைக்கும் ”கமர்கட் குழந்தைகளுக்கு” கல்வியே இல்லை என்ற நிலை இருந்தது. கல்வியை அவர்களுக்கு தவிர்க்க இயலாது என்கிற நிலை வந்தபோது அவர்கள் உஷாரானார்கள்
இருவருக்கும் கல்வி என்றால் இருவரும் ஒன்றாதல் இயல்பாகிவிடும். இருவரும் ஒன்றாகிவிட்டால் அவர்கள் நமக்கு முன்னால் காலைத் தொங்கப்போட்டுக் கொண்டு அமர்ந்துவிடுவார்களே என்ற சனாதனப் பதைபதைப்பு காட்பரிஸ் சமூகத்திற்கு வந்தது.
எனவே அவர்கள் தமது வீட்டுக் குழந்தைகளுக்கு ஒரு கல்வி என்றும் இல்லாதவர் வீட்டுக் குழந்தைகளுக்கு ஒரு கல்வி என்றும் கல்வியைக் கீறி கூறு போட்டார்கள்
இப்படியாக, கல்வியிலும் காட்பரிஸ் கல்வி, கமர்கட் கல்வி என இரண்டு பிரிவுகள் உருவாகின.
இந்தப் பாழாய்ப்போன கொரோனாவும் இந்த இரண்டுப் பிரிவு கல்விக்கும் இடையே இருக்கும் இடைவெளியை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கிறது.
இதைப் பெரியப் பெரிய, தடித்த ஆவணங்களில் இருந்து எடுத்த தரவுகளைக் கொண்டெல்லாம் நிறுவத் தேவை இல்லை.
என் பள்ளியில் இருந்தும் என் பக்கத்து வீட்டில் இருந்தும் இதை இன்னும் பேரதிகமாய் நிறுவ இயலும்
மேல்நிலை இரண்டாம் ஆண்டுப் பொதுத்தேர்வு தள்ளிவைக்கப் பட்டிருந்தாலும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன
எங்கள் பள்ளியில் அன்னலட்சுமி என்ற குழந்தை இரண்டாம் ஆண்டு தட்டச்சுப் பிரிவில் படிக்கிறாள். இந்த இடத்தில் கொஞ்சம் அன்னலட்சுமி குறித்த முன்கதை அவசியமாகிறது
அவளது பெற்ரோர் இருவரும் துப்புறவுத் தொழிலாளர்கள்
அவள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒழுங்காக பள்ளிக்கு வரமாட்டாள். பத்தாம் வகுப்பில் அவள் பள்ளிக்கு வந்த நாட்கள் அநேகமாக முப்பது அல்லது முப்பத்தி ஐந்தாக இருக்கும்
அவள் பள்ளிக்கு வந்த நாட்களைவிட அவளது வகுப்பு ஆசிரியர் நிவாஸ் அவளது வீட்டிற்கு சென்ற நாட்கள் அதிகம்
அவளை பள்ளிக்கு அழைத்துவர செல்லும்போது பல நேரங்களில் கெட்ட வார்த்தைகளுக்கு மிக நெருக்கமான சொற்களால் அவர் அவளது பெற்றோரிடம் வதைபட்டதும் உண்டு
அதிசயமாக அவள் பள்ளிக்கு வந்த நாள் ஒன்றில் அவளது அம்மா அவளைத் தேடி பள்ளிக்கு வந்திருக்கிறார். அவர் வகுப்பிற்குப் போனபோது நிவாஸ்தான் வரைபடம் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்
ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அவளை அழைக்கவும் வரைபடம் முக்கியம் என்றும், அந்தப் பிரிவேளை முடிந்ததும் அழைத்துச் செல்லலாம் என்றும் நிவாஸ் கூறியிருக்கிறார்
தன் பிள்ளையை மறுப்பதற்கு அவர் யார் என அவர் ஒருமையில் கேட்க
பள்ளிக்கு வந்துவிட்டால் அவள் தன் குழந்தை என்று நவாஸ் கொதிக்க
கடும் சொற்களால் நிவாசை வசவியிருக்கிறார். பக்கத்து வகுப்பில் இருந்த ஆசிரியர்களும் பிள்ளைகளும் இந்த வகுப்பின்முன் கூடிவிட்டார்கள்
பள்ளிக்கூடத்துக்கு வந்தாதான உங்க புள்ள. ”பெரிய சார்”ட்ட(தலைமை ஆசிரியர்) போய் டிசி வாங்கிக்கொள்கிறேன் என்று அவளை இழுத்துக்கொண்டு என் அறைக்கு வந்துவிட்டார்
அவரைத் தொடர்ந்து நிவாசும் சில ஆசிரியர்களும் எனது அறைக்கு வந்துவிட்டார்கள்
“டிசி கொடுங்க சார். இதுமாதிரி கண்ட கண்ட வாத்தியார்ட்ட எல்லாம் திட்டு வாங்கனும்னு எங்களுக்கு அவசியம் இல்ல”
”அவங்களே டிசி கேட்கறாங்க. கொடுத்துடுங்க சார்.” என்கிறார்கள் சில ஆசிரிய நண்பர்கள். அன்னலட்சுமியின் அம்மா எப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேசினார்கள் என்பதை பிள்ளைகளை வந்து கேட்குமாறும் கொதித்தார்கள்
அன்னலட்சுமியின் அம்மாவும் என்னிடம் படித்தவர்தான்
கொஞ்சம் கோவப்பட்டால் அடங்குவார் என்று பட்டது
“என்ன ஓவரா கத்துற. என்னன்னு நெனச்ச. எந்திருச்சன்னா பிச்சுப்புடுவேன். ஓடிப் போயிடு” என்று உரத்து பேசவும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை
“ஆமாம் என்னையவே திட்டுங்க. ஒங்க வாத்தியாரையெல்லாம் கொஞ்சுங்க” என்று சிணுங்கியவேறே போய்விட்டார்
“நீ ஏன் நிக்கற. கிளாசுக்கு போ” என்று இந்தப் பக்கம் திரும்பிக் கத்தியதும் குழந்தையும் வகுப்பிற்கு போய்விட்டாள்
நிமிர்ந்து நிவாசைப் பார்க்கிறேன்
கண்ணீரோடு நிற்கிறார்
“என்ன சார் இப்படி செஞ்சுட்டீங்க. எங்களுக்கு மரியாதையே இல்லையா சார்”
“விடுப்பா. பத்தாங்கிளாஸ். ஏதோ அதையும் இதையும் எழுதி பாஸ் பண்ணிட்டானா அவ வாழ்க்கை விரிஞ்சுடும்பா”
”பெத்தவங்களுக்கே அக்கறை இல்லையே சார்”
“யாருப்பா பெத்தவன். அவனுக்கென்ன தெரியும். சாக்கடை அள்ளுறவங்க நிவாஸ். நீதாண்டா நிவாஸ் பெத்தவன்”
சென்றுவிட்டான்
அவளும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 191 மதிப்பெண் எடுத்து தேறிவிட்டாள்
இது குறித்து வண்ணக் கதிரில்கூட எழுதினேன்.
அதே அன்னலட்சுமி மேல்நிலை முதலாம் ஆண்டில் ஒருநாள்கூட விடுப்பெடுக்கவில்லை. எல்லா ஆசிரியர்களுக்கும் செல்லமாக மாறினாள். முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஓரளவு நல்ல மதிப்பெண்ணோடு தேர்ச்சியும் பெற்றாள்
பொது முடக்கம் முடிந்து பள்ளி திறப்பதற்குள் மீண்டும் அன்னலட்சுமி ”பத்தாம் வகுப்பு அன்னலட்சுமி”யாக மாறிவிட்டாள். பொது முடக்கம் அவளை கல்வி, பள்ளி குறித்த சிந்தனையில் இருந்து வெகு தொலைவிற்கு கொண்டு போட்டிருந்தது
அவளது பெற்றோர் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்களாக மாறிப் போனார்கள் இப்போது. அவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வருவதும் ஆசிரியர்களிடம் அன்னலட்சுமிக்கு அறிவுரை செய்து பள்ளிக்கு அழைத்து வருமாறும் கோரிக்கை வைத்தபடி இருந்தார்கள்
எவ்வளவு முயன்றும் அவளை பள்ளிக்கு கொண்டுவர முடியவில்லை
இந்த நேரத்தில் செய்முறைத் தேர்வு தொடங்கிவிட்டது
தட்டச்சு ஆசிரியர் தேர்வன்று மட்டும் பள்ளிக்கு வருமாறும் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கெஞ்சத் தொடங்கி விட்டார்
அடுத்த நாள் தேர்வு. அவளது தந்தையை அலைபேசியில் பிடித்த தெய்வீகன் அடுத்தஒருநாள் மட்டும் அவளை எப்படியேனும் சமாளித்து சரிசெய்து பள்ளிக்கு அழைத்துவரச் சொல்கிறார். அவரும் சம்மதிக்கிறார்.
அலைபேசியைத் துண்டித்த அடுத்த கணம் அழைப்பு வருகிறது. அன்னலட்சுமி பேசுகிறாள்
“புடிக்கலன்னு சொன்னா உடமாட்டீங்களா சார். சும்மா தொன தொனன்னு. HM சார் என்ன செய்யறார். அவர பேசச் சொல்லுங்க. அவர்ட்ட பேசிக்கறேன்”
என்னருகில் நின்றபடி ஸ்பீக்கர் போட்டு பேசுகிறார் என்பதால் எனக்கும் கேட்கிறது.
“நான் பேசல. ஒரு மணிநேரத்தில் அவங்க வீட்டுக்கு வரேன். சொல்லிடுங்க தெய்வீகன்” என்கிறேன். அவளுக்கும் கேட்கிறது
அரைமணி நேரத்தில் அவள் பள்ளிக்கு வந்துவிட்டாள்
தேர்வும் அடுத்தநாள் எழுதிவிட்டாள். நல்ல மதிப்பெண்ணும்கூட.
படிப்பில் நாட்டம் இல்லாதிருந்தக் குழந்தை ஒரு கட்டத்தில் கல்வியை நேசிக்கத் தொடங்குகிறாள். இவளை கொரோனா பொது முடக்கம் கல்வியில் இருந்தும் பள்ளிக் கட்டமைப்பில் இருந்தும் வெகுதூரத்தில் கொண்டுபோய் கிடத்தி உள்ளது
அன்னலட்சுமி கொரோனாவிற்குப் பிறகான ”கமர்கட் கல்வி”யின் ஒரு பருக்கை
மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் புத்தகம் தேவைப்பட்டது. பக்கத்துவீட்டு குழந்தை ஜனா இரண்டாம் ஆண்டுதான் படிக்கிறாள்.
அவளைத் தேடிப் போனால் அவள் கணக்கு ட்யூசனுக்குப் போயிருந்தாள். அடுத்தநாள் காலை போனால் அவள் ஆன்லைன் வகுப்பில் இருப்பதாகவும் இடையூறு செய்தால் மனுஷியாகவே இருக்க மாட்டாளென்றும் கூறினார்கள்
”பள்ளிக்கூடம் இருந்தால்கூட கொஞ்சம் ப்ரீயா இருப்பா சார் இப்ப ரொம்ப பிசி” என்கிறார் அவளது தந்தை
ஜனா“காட்பரிஸ் கல்வி”யின் ஒரு பருக்கை
இரண்டு பருக்கைகளையும் அப்படியே எடுத்துக்கொள்ள முடியாதுதான். ஆனால் பெரும்பான்மைக்கு மிக நெருக்கமாக இவை பொருந்தும்
பொதுமுடக்கம் முடிந்து பள்ளிகள் திறந்ததும் ஜனா வைப் போன்ற காட்பரிஸ் குழந்தைகள் பள்ளியோடு பொருந்திப் போவதில் அவ்வளவாகப் பிரச்சினை இருக்காது. நீண்ட காலம் பள்ளிச் சூழலுக்கு வெளியே இருந்ததால் சிறிது அப்படி இப்படி இருக்கும்
இவர்களை எதிர்கொள்வதில் ஆசிரியர்களுக்கோ பள்ளிகளுக்கோ பெரிய சிரமம் இருக்கப் போவதில்லை
ஆனால் அன்னலட்சுமியைப் போன்ற கமர்கட் குழந்தைகளுக்கு பள்ளியோடு, கல்வியோடு பொருந்திப் போவதில் நிறைய பிரச்சினைகள் இருக்கும். இவர்களை எதிர்கொள்ளவேண்டிய ஆசிரியர்களுக்கு நுட்பமான உளவியல் ஞானமும் பக்குவமும் அவசியம்
இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே கல்வி, ஒரே வினாத்தாள் என்பதெல்லாம் இன்னும் கூடுதலான இடைவெளியை இவர்களிடையே கொண்டு வரும். இது தனியாக விரிவாக கவனிக்க வேண்டிய இடம்
ஆனால், எதற்கு கல்வி? என்பதற்கான விடை இருவருக்கும் பொதுவானதாக இருக்குமாறு கொரோனாவிற்கு பிறகான கல்வியை கட்டமைக்க வேண்டும்
வழக்கம்போல பள்ளி, தனிப்பயிற்சி, தேர்வு, மதிப்பெண், நீட், அறிவு, வேலை, சம்பளம், குடும்பம் என்பதற்கான கல்வியாக கட்டமைக்காமல் மாற்றித் திட்டமிட வேண்டும்
அறிவு நல்ல மதிப்பெண்ணைத் தரும், மருத்துவராக்கும், நல்ல சம்பளம் தரும் என்பதை மாற்ற வேண்டும். இதெல்லாம் அறிவு இல்லை.
“அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை”
என்கிறார் வள்ளுவர்
பிறரது வலியை, நோயை, துயரை தன்னுடையதாகக் கருதுகிற மக்களாக மாற்றுகிற வேலையை கல்வி செய்ய வேண்டும். இல்லாது போனால் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் “ரெம்டெசிவர்” மருந்துகளை பதுக்கி விற்கிற அறிவாளிகளை கல்வி உருவாக்கி விடும்
“வாழக் கற்றல்” என்றொரு அற்புதமான நூல் இருக்கிறது. அதில் எட்கர் பௌரே ஒரு இடத்தில் இப்படி சொல்வார்,
“தனிமைப்பட்டுக் கிடப்பதனால் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கும் மனிதனை தனிமையில் இருந்து மீட்பதும் மகிழவைப்பதும்தான் கல்வியின் நோக்கம்”
நீண்டப் பொது முடக்கத்தால் மகிழ்ச்சியை இழந்தவர்களாக தனிமையில் உழன்று வருகிற குழந்தைகளுக்கு கூடிக் கொண்டாடும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும்
மிக நீண்ட மகிழ்ச்சியின்மையினால் பீடிக்கப்பட்ட அந்தக் குழந்தைகள் மகிழ்ந்திருக்குமாறு பார்த்துக் கொள்வதே முடக்கத்திற்குப் பிறகான பள்ளிகளின் வேலையாக இருக்க வேண்டும்
June 12, 2021
கவிதை 20 24.01.2021
01
அறைக்குள் நுழைந்திருக்கும்
இந்தப் பிடிச்சப்பிடி மென் குளிரைசமாளித்து விடலாம்வாசிக்கிற சூடில் ஒருதுண்டு கவிதையும்ஒரு கோப்பைசர்க்கரைப் போடாத பாலற்ற எலுமிச்சைத் தேநீரும்வாய்த்து விட்டால்02
தன் இருத்தலை நிறுவ ஒரே ஒரு சொட்டேனும் இருட்டு தேவைப்படுகிறது வெளிச்சத்திற்கு
03
மலம் அள்ளுவதும்கீழிறங்கிசாக்கடை கசடள்ளி சுத்தம் செய்வதும்என்னை எரித்த பிறகும் தொடருமானால்இந்தக் கொடுமைக்கு எதிராகசாராய நெடியும் கோவமுமாய்கலந்து வரும்அவனது கெட்ட வார்த்தைகளாகவும்அவன் காறி உமிழும் எச்சிலாகவும்மாறியிருப்போம்என் கவிதைகளும் நானும்
25.01.2021
எத்தனை டிராக்டர் பேரணி நடத்தினாலென்ன?
அத்தனை நியாயங்களும்உம் பக்கம் இருந்தாலும் என்ன?எத்தனை உயிர்கள் போனாலும்தான் என்ன?பெரும்பான்மை இருக்கிறது குதிக்கவே குதிப்போமென்று குதிப்பீர்கள் என்றால்ஒன்று சொல்வேன்சாக்ரடீசிற்கு விஷம் கொடுத்த பெரும்பான்மையைதுப்பிக் கொண்டுதான் இருக்கிறதுசாக்ரடீசை தத்தெடுத்த வரலாறு26.01.2021
01
இன்று தோழர் M S Rajagopal அவர்கள் வைத்துள்ள செறிவான பதிவு ஒன்றைத் தன் பக்கத்தில் வைத்திருக்கிறார்
அதன் பிழிவாக நான் கொள்வதுஅறிவியலை தமிழ்ப் படுத்துவதும்அறிவியல் சொற்களை தமிழ்ப் படுத்துவதும்வேறு வேறுஇரண்டும் முக்கியமானவைதான்அறிவியலை தமிழ்ப் படுத்துவது கட்டாயம்இதில் சமரசம் கூடாதுஆனால் அறிவியல் சொற்களை தமிழ்ப் படுத்தும்போதுநெளிவு சுழிவு அவசியம்02
கொட்டும் பனியில்வீரச் சமரில்உயிரை நீத்தஉழுகுடித் தகப்பனேஎன்னைக் காக்கஎம்மண்ணைக் காக்ககளத்தில் நிற்கும்உழுகுடித் தோழனேடிராக்டர் ஓட்டும்மகனே மகளேதேசம் காக்கநீங்கள் நடத்தும்ட்ராக்டர் பேரணிவெல்லும் வெல்லும்நிச்சயம் வெல்லும்
27.01.2021
சௌத் ஏசியன் பாலாஜி,
தான் பேராசிரியர் சந்திரசேகர் எழுதிய “சீனா அன்றும் இன்றும்” என்ற நூலை வாசித்ததனால்தான் இடதுசாரியாய் மாறினேன் என்கிறார்.இதில் ஆச்சரியம் என்னவென்றால் சந்திரசேகர் அவர்கள் தீவிரமான இடதுசாரி எதிர்ப்பாளர். ஒரு ஆழமான இடதுசாரி எதிர்ப்புக் கண்னோட்டத்துடன் சீனாவின் மீதான தனது விமர்சனமாகத்தான் அவர் அந்த நூலை எழுதியிருந்தார். கம்யூனிச எதிர்ப்பாளர் ஒருவர் எழுதிய ஒரு நூல் அதன் வாசகன் ஒருவனை எப்படி இடதுசாரியாய் மாற்றும்? என்ற கேள்விக்கு பாலாஜி தரும் பதில்தான் ஒரு நல்ல நூல் ஆசிரியன் எவ்வளவு யோக்யமாயிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு நல்ல அளவு கோளாக விளங்குகிறது.அவர் சொல்கிறார்,சந்திரசேகர் இடதுசாரி எதிர்ப்பாளர் என்பதற்காக அந்த நூலில் சீனாவைப் பற்றி எந்த பொய்யான தகவல்களையும் தராததோடு சீன வளர்ச்சியையும் மறைக்காது உள்ளது உள்ளபடி தந்திருந்தார். சீன இடதுசாரிகளின் உழைப்பை, அர்ப்பணிப்பை அதன் விளைவுகளை அந்த நூலில் இருந்து கண்டு கொண்டதின் விளைவே நான் இடதுசாரியானேன்இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)