இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 67

May 29, 2021

February 25, 2021

கவிதை 18

 ஸ்ரீதேவி இறந்த அன்று எழுதியது

எனவே ஸ்ரீதேவி....********************** ஆமாம்தான்திருடினான்தான்மூன்றுபிடி அரிசியை கொஞ்சம் புளியைஆமாம் ஆமாம்திருடினான்தான்அந்தப் பழங்குடிப் பையனின்கொள்ளுத் தாத்தனிடமிருந்து வனத்தைத் திருடிவயலாக்கிஅதில் விளைந்த நெல்லைஅவனது பாட்டனின் வனத்தில் ஒரு துண்டு திருடிஆலையாக்கிஅவித்துஉலர வைத்துஅரைத்துஅரிசியாக்கிஅவனது அப்பனின் வனத்தில்சாலை போட்டுமாமனின் காட்டு மரத்தில் வண்டி செய்துபங்காளியின்காடு திருடி கட்டப்பட்டகடையிலிருந்து ஆமாம்திருடினான்தான்மூன்றுபிடி அரிசியையும்துளியூண்டு புளித்துண்டையும் திருடினான்தான்காடு திருடியவர்கள்துளியூண்டு புளி திருடியவனைகொன்று போட்டிருக்கிறார்கள்கொலையைச்சுடச்சுடபடமெடுத்துமானுட நெருடலேதுமின்றிவலை ஏற்றி இருக்கிறார்கள்படங்களில்சாவதாய் நடிப்பீர்கள் ஸ்ரீதேவிஅந்தப் படத்தில்இயல்பாய் செத்திருக்கிறான்அதாவதுசாவதாய் வாழ்ந்திருக்கிறான்ஸ்ரீதேவிஇத்தனை எழுதியும் எவ்வளவு அழுதும் ஆறவில்லைஆறும்போதுஉங்களுக்கொரு இரங்கலை சொல்வேன்போய் வாருங்கள் ஸ்ரீதேவி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 10:20

பார்ப்பணியம் இருக்கிறது கமல்

 எப்படிப் பார்த்தாலும் கலைஞரின் பொதுவாழ்க்கையின் நீளம் 75 ஆண்டுகள்

சரியாக, தவறாக, இயல்பாக, முரணாக எத்தனையோ செய்திருக்கிறார்கொள்ளவும் விமர்சிக்கவும் ஏராளம் இருக்கிறது அவரிடம்அதை தாராளமாக யார் வேண்டுமானாலும் செய்யலாம்75 ஆண்டுகால செயல்பாடுகளை விமர்சிக்காமல் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியும் செயல்பட்டதுதான் குற்றம் என்பது மாதிரி நக்கல் கலந்து நீங்கள் பேசியதைகைதட்டி ரசித்தவர்களே சிறிது நேரம் கழித்து யோசித்துப் பார்த்தபோது உங்களை அசிங்கமாகப் பார்க்கத் தொடங்கி இருப்பார்கள்இதை அறியாமல் செய்பவர் அல்ல நீங்கள்சமீபத்தில் யூ ட்யூப் சேனல் வைத்து நடத்தும் நிகழ்ச்சியில் பேசும்போதுயூ ட்யூப் எப்போதோ வந்திருக்க வேண்டிய தொழில் நுட்பம்போட்ட முதலுக்கு துரு பிடிக்கிற வரைக்கும் சம்பாதிக்க ஆசைப்படும் முதலாளிகளின் சுயநலம்தான் அதைத் தடுத்தது என்று எவ்வளவு சரியாகப் பேசினீர்கள்இப்படிப் பேச எவ்வளவு துணிச்சலும் புத்தியும் வேண்டும்அப்படிப்பட்ட நீங்கள் வயோதிகத்தைக் கிண்டல் செய்கிறீர்கள் என்றால்அதன் பின்னணியில்அரசியல் இருக்கிறதுமதம் இருக்கிறதுமத அரசியல் இருக்கிறதுஜாதி இருக்கிறதுஜாதி அரசியல் இருக்கிறதுசுத்தி வளைப்பானேன்,பார்ப்பணியம் இருக்கிறது கமல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 10:15

February 14, 2021

தேசத்தைக் காத்தல் செய்வோம்

 





வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளின் ரசிகன் நான்

தோழர் கருப்பு அன்பரசன் முகநூல் பக்கத்தில் இருந்து இந்தப் படத்தை எடுத்தேன்

நெகிழ்ந்து போனேன்

ராணுவத்தில் பணியாற்றும் தனது மகனை போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயத் தந்தை சென்று சந்தித்த

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தருணமதுஅந்நியர்களிமிருந்து தேசத்தைக் காக்கிற பணியில் இருக்கும் மகன்

உள்ளூர் கார்பரேட்டுகளிடமிருந்து

தேசத்தின் உயிர்த் தொழிலான விவசாயத்தைக் காக்கிற பணியில் இருக்கும் தந்தை

எகிப்தில் மக்கள் போராட்டத்தின்போது

போராட்டக் களத்தில் இருக்கும் தனது தாயை

அவர்களை அடித்து விரட்ட வேண்டிய பணியில் இருந்த மகன் சந்திக்கிறான்

வாழ்த்துகிறான்

ஆனால் அவர்களை அடித்து விரட்ட வேண்டியது தனது பணி என்கிறான் வேதனையோடு

தாய் சொல்கிறார்

போடா மகனே

நீ போய் உன் வேலையைப் பார்

நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன்

நமது தந்தை மகனிடம் என்ன சொல்லிப் பிரிந்திருப்பார்?

நீ முகாம் போ

நான் களம் போகிறேன்

தேசத்தைக் காத்தல் செய்வோம்


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2021 03:33

கவிதை 17

 பேருந்து நிலையம்

ஏதோ ஒரு நடத்துநரின் தொடர் விசில்ஏதோ ஒரு பறவையின் தொடர் குரல்எதற்கு எது எச?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2021 03:12

February 13, 2021

கவிதை 16

 அக்காப் பாப்பாவும்

தங்கச்சிப் பாப்பாவும்படுக்கை அறைச் சுவரில்வரைய ஆரம்பித்தார்கள்அக்காப் பாப்பா மரமொன்று வரையதங்கச்சிப் பாப்பா மரம்போன்ற ஒன்றை வரைந்தாள்மரம் போன்றதன் கிளை போன்றதன் மேல்பறவை போன்ற ஒன்றையும்வரைந்து வைத்தவள்மரம் போன்றதில் பறவை போல ஒன்றிருப்பதால்மரம் போன்றதே மரமென்றும்அக்கா வரைந்தது மரமே ஆயினும்பறவை போன்றேனும் ஒன்றில்லாத காரணத்தால் அது மரம் இல்லை என்றும் சாதிக்கிறாள்தங்கச்சிப் பாப்பா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2021 18:14

February 5, 2021

கவிதை 15

 தொடர் தும்மலென்னை குலுக்கி எடுத்தபோது

படிகளின் மையத்தில் இருந்தேன்மூக்கும் கண்களும் உடைந்து ஒழுகதுடைத்து சுத்தமாகிஆசுவாசப் படுத்திக் கொண்டபோதுஏறிக்கொண்டிருந்தேனா அல்லது இறங்கிக் கொண்டிருந்தேனா என்றஅய்யம் தொற்றிக் கொண்டது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2021 06:58

February 2, 2021

கவிதை 14

 விற்றுக்கொண்டே இருக்கிறோமென்பது

எம் மீதான உங்கள் குற்றச்சாட்டுகடலை காடுகளை நதிகளை நீரைமணலை மலைகளை எண்ணெயைஆகாசத்தை விமானத்தை வங்கியைஇன்சூரன்சைஏ இந்தாப்பா கைவலிக்கிறதுசுருக்கமா சொல்கிறேன்அனைத்தையும் விற்பதற்காகத்தானேவாக்குகளை வாங்கினோம்ஈன விலைக்கு விற்கிறோமென்பதுஅடுத்தக் குற்றச்சாட்டுஎமக்கு வாக்களித்த மக்கள் ஆசையற்றவர்கள்மலிவாகத்தான் கொடுத்தனர் தம் வாக்குகளைநாங்களும் மலிவாகவே விற்கிறோம்பாரம் குறைவதென்பது ஜென் சுகம் தெரியுமாகுறைத்திருக்கிறோம்விற்பதற்கு இனி ஏதுமில்லை என்ற ஏளனம் ஆகாதுஅனைத்தையும் அவர்களுக்கு விற்ற எங்களுக்குஅவர்களை விற்கவும் தெரியும்
01.02.2021 அன்று நிதிநிலை அறிக்கை வாசித்து முடிக்கப்பட்டபோது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2021 16:13

January 31, 2021

கவிதை 13

 நஞ்சுக் கோப்பையை எம் மீது நீட்டுகிறீர்கள்

ஆயுளை இரட்டிப்பாக்கும் பானமென்கிறீர்கள்நஞ்சு கொல்லுமென்கிறோம்இருக்கட்டுமேதயாரித்தாயிற்றென்பதால்குடித்துவிட வேண்டுமென்று கட்டளையிடுகிறீர்கள்ஒன்றாய் திரண்டுநீங்கள்கோப்பையைக் கிடாசும்ரைநகரமாட்டோமென்றதும்ஒன்றரை வருடத்திற்கு கருணையோடுநஞ்சு தருவதை நிறுத்தி வைப்பதாகக்கூறுகிறீர்கள்ஒன்றரை வருடம் கழித்தாலும் அது புளித்த நஞ்சுதான்அறிவோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2021 21:25

கவிதை 12

 எத்தனை டிராக்டர் பேரணி நடத்தினாலென்ன?

அத்தனை நியாயங்களும்உம் பக்கம் இருந்தாலும் என்ன?எத்தனை உயிர்கள் போனாலும்தான் என்ன?பெரும்பான்மை இருக்கிறது குதிக்கவே குதிப்போமென்று குதிப்பீர்கள் என்றால்ஒன்று சொல்வேன்சாக்ரடீசிற்கு விஷம் கொடுத்த பெரும்பான்மையைதுப்பிக் கொண்டுதான் இருக்கிறதுசாக்டீசை தத்தெடுத்த வரலாறு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2021 19:19

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.