அக்காப் பாப்பாவும்
தங்கச்சிப் பாப்பாவும்படுக்கை அறைச் சுவரில்வரைய ஆரம்பித்தார்கள்அக்காப் பாப்பா மரமொன்று வரையதங்கச்சிப் பாப்பா மரம்போன்ற ஒன்றை வரைந்தாள்மரம் போன்றதன் கிளை போன்றதன் மேல்பறவை போன்ற ஒன்றையும்வரைந்து வைத்தவள்மரம் போன்றதில் பறவை போல ஒன்றிருப்பதால்மரம் போன்றதே மரமென்றும்அக்கா வரைந்தது மரமே ஆயினும்பறவை போன்றேனும் ஒன்றில்லாத காரணத்தால் அது மரம் இல்லை என்றும் சாதிக்கிறாள்தங்கச்சிப் பாப்பா
Published on February 13, 2021 18:14