விற்றுக்கொண்டே இருக்கிறோமென்பது
எம் மீதான உங்கள் குற்றச்சாட்டுகடலை காடுகளை நதிகளை நீரைமணலை மலைகளை எண்ணெயைஆகாசத்தை விமானத்தை வங்கியைஇன்சூரன்சைஏ இந்தாப்பா கைவலிக்கிறதுசுருக்கமா சொல்கிறேன்அனைத்தையும் விற்பதற்காகத்தானேவாக்குகளை வாங்கினோம்ஈன விலைக்கு விற்கிறோமென்பதுஅடுத்தக் குற்றச்சாட்டுஎமக்கு வாக்களித்த மக்கள் ஆசையற்றவர்கள்மலிவாகத்தான் கொடுத்தனர் தம் வாக்குகளைநாங்களும் மலிவாகவே விற்கிறோம்பாரம் குறைவதென்பது ஜென் சுகம் தெரியுமாகுறைத்திருக்கிறோம்விற்பதற்கு இனி ஏதுமில்லை என்ற ஏளனம் ஆகாதுஅனைத்தையும் அவர்களுக்கு விற்ற எங்களுக்குஅவர்களை விற்கவும் தெரியும்
01.02.2021 அன்று நிதிநிலை அறிக்கை வாசித்து முடிக்கப்பட்டபோது
Published on February 02, 2021 16:13