இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 64

August 2, 2021

இது அப்பன்களின் பெருமிதம் மகள்களே




வீட்டுக்குள்ளே பெண்ணை

பூட்டி வைப்போம் என்ற மதவெறி மனிதர்கள் தலை குனியட்டும் நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு கோலும் மோகன் பகவத்களை உலுக்கி எடுக்கடும் இது அப்பன்களின் பெருமிதம் மகள்களே பிள்ளைகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் அரை இறுதிக்குள் நுழைந்த மகிழ்ச்சியில்
02.08.2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 02, 2021 10:29

July 31, 2021

இது ஒன்றிய அரசின் தோல்வி

 மிசோரம், அசாம் எல்லைத் தகறாறு மனிதப் பலியில் நிற்கிறது

இது ஒன்றிய அரசின் தோல்வி என்கிறார் ராகுல்விமர்சிப்பதால் மட்டும் மாறிவிடாதுபாஜகவிற்கு எதிராக ஒன்று திரட்டுங்கள்அல்லது அவர்கள் அழித்துக் கொண்டே இருக்கநீங்கள் விமர்சித்துக் கொண்டே இருக்கநாங்கள் அழிந்துகொண்டே இருப்போம்
29.07.2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2021 09:28

இரண்டும் பிஜேபி ஆளும் மாநிலங்கள்

 ஒன்றியம் என்றால் கோவம் வருகிறது அவர்களுக்கு

ஒரே நாடு என்கிறார்கள்மிசோரம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைத் தகறாறில் இதுவரை ஐந்து காவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்இரண்டு முதல்வர்களும் திட்டிக் கொள்கிறார்கள்இரண்டும் பிஜேபி ஆளும் மாநிலங்கள் என்பது தகவலுக்காக
29.07.2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2021 09:25

தீண்டாமைச் சுவர் இடிக்கப்படும்வரை

 மேலக்கல்கண்டார்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு ராஜீவ்காந்தி நகரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி CPM ஆர்ப்பாட்டம் செய்த செய்தி 28.07.2021 தீக்கதிரில் வந்திருக்கிறது

தீண்டாமைச் சுவர் இடிக்கப்படும்வரை போராட்டம் தொடரட்டும்தோழர்களுக்கு அன்பும் நன்றியும்
28.07.2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2021 09:23

July 29, 2021

நம்பி வாக்களித்த மக்களை

 சென்னை முழுவதையும் ஸ்டாலினுக்கு சென்னை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்

இது கலைஞருக்கே வாய்க்காததுஅரும்பாக்கம் கூவம்பகுதி குடியிருப்புகளை அறிவிப்பின்றி இடிக்க முயற்சிப்பதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றனநம்பி வாக்களித்த மக்களைப் பாதுகாக்க வேண்டியது ஸ்டாலினது கடமை
29.08.2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2021 11:02

July 28, 2021

மாநிலங்களுக்கு இடையேயான எல்லைத் தகறாறில் ...

 ஒன்றியம் என்றால் கோவம் வருகிறது அவர்களுக்கு

ஒரே நாடு என்கிறார்கள்மிசோரம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைத் தகறாறில் இதுவரை ஐந்து காவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்இரண்டு முதல்வர்களும் திட்டிக் கொள்கிறார்கள்இரண்டும் பிஜேபி ஆளும் மாநிலங்கள் என்பது தகவலுக்காக
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2021 19:30

தீண்டாமைச் சுவர் இடிக்கப்படும்வரை

 மேலக்கல்கண்டார்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு ராஜீவ்காந்தி நகரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி CPM ஆர்ப்பாட்டம் செய்த செய்தி 28.07.2021 தீக்கதிரில் வந்திருக்கிறது

தீண்டாமைச் சுவர் இடிக்கப்படும்வரை போராட்டம் தொடரட்டும்தோழர்களுக்கு அன்பும் நன்றியும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2021 18:59

மாறாக பள்ளிகள் குழந்தைகளிடம் போக வேண்டும்

 கிராமங்களில் தொடக்கப் பள்ளிகளைத் திறப்பதற்கு இயலுமா என்பதை ஆராயுமாறு சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது

சத்துணவு இல்லாமையால் குழந்தைகள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஒருவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பதாகத் தெரிகிறதுபள்ளிகள் இல்லாததால் குழந்தைகளைக் கடத்தியோ அல்லது பெற்றோரின் சம்மதத்தோடோ வேலைகளில் அமர்த்தப்படுவதாகவும் செய்திகள் வருகின்றனநிறைய குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.எனில்,அனைத்து தடுப்பரண்களையும் கடந்து சில திருமணங்கள் நடந்திருக்கவும் கூடும் இவை அனைத்தும் பள்ளிகள் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றனபிள்ளைகள் இல்லாத பள்ளிகளில் எத்தனைக் காலம்தான் காலை முதல் மாலை வரை வேலை பார்ப்பது?எங்களுக்கும் பள்ளிகளைத் திறக்க வேண்டும்பிள்ளைகளின் இரைச்சலைக் கேட்காத எங்கள் செவிகளும் “டேய் என்ன அங்க சத்தம்” என்று சொல்லாத எங்கள் குரலும் அய்யோ என்று போகட்டும்ஆனால் குறைந்துகொண்டே வந்த தொற்றின் எண்ணிக்கை இன்று சன்னமாகக் கூடியிருப்பதாக பத்திரிக்கையாளர் குணசேகரன் எச்சரிக்கிறார்சென்னையில் நேற்று 122இன்று 164கோவையில் நேற்று 164இன்று 179நேற்றுவரை இறங்குமுகம். இன்று மீண்டும் ஏறத் தொடங்கி இருக்கிறதுமூன்றாம் அலை இன்னும் மோசமாகும் என்றும் செய்திகள் வருகின்றனகுழந்தைகளின் பிறப்பு விகிதம் மூன்றில் இரண்டு பங்காகக் குறைதுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறதுமரண விகிதம் அதிகரித்திருக்கிறதுதமிழ் நாட்டில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும்எனவே தமிழ் மக்கள் குடும்பக்கட்டுப்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும்வேறு ஒரு காரணத்திற்காக அவர் சொல்லி இருந்தாலும் தோழர் மணியரசனின் இந்தத் தகவலும் அச்சமளிப்பதாகவே உள்ளதுஇந்த நிலையில் குழந்தைகள் கூடிவேறு மாதிரி ஆனால்வேண்டாம் அந்தச் சிந்தனைக்குள் போகவே வேண்டாம் குழந்தைகள்,பட்டினியில் வாடக் கூடாதுவேலை வாங்கப்படக் கூடாதுகுழந்தைத் திருமணங்கள் நடக்க கூடாதுகல்வியும் அவர்களுக்குப் போக வேண்டும்அது எப்படி?பள்ளிகளும் திறக்கப்படாமல் இத்தனையையும் சாத்திய படுத்துவது?அது நமது வேலைசாத்தியப் படுத்த என்ன செய்யலாம் என்று கூடிப் பேச வேண்டும்மார்த்தி சொன்னதில் ஒன்று சொல்கிறேன்சொல்வார்,INSTEAD THE SCHOOL SHOULD GO TO THE STUDENTS"இப்படிப் பெயர்க்கலாம்,குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு மாறாக பள்ளிகள் குழந்தைகளிடம் போக வேண்டும்இந்தக் காலத்திற்கு ஏற்றார்போல் சொல்வதெனில்கொரோனா முற்றாய் முடியும்வரை மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு பதில் பள்ளிகளை மாணவர்களை நோக்கி நகர்த்துவோம்எப்படி?சத்தியமாய் இந்தப் புள்ளியில் என்னிடம் ஏதும் இல்லைஆனால் உட்கார்ந்து இதுகுறித்து அக்கறையோடு உரையாடும்போதுஎன்னிடம் இருந்தும் கருத்துக் கிடைக்கும்உங்களிடம் இருந்தும் கிடைக்கும்யோசிப்போம்#சாமங்கவிய ஒருமணி பன்னிரண்டு நிமிடம்28.07.2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2021 10:23

July 26, 2021

நுட்பத் தமிழ் உவமைகள்

 வழக்கமாக பயன்படுத்தப்படும் அல்லது எளிதில் சிக்கக்கூடிய விஷயங்களை அல்லது பொருள்களை விடுத்து அரிதானவற்றை உவமையாக்குவதை "Far fetched simile" என்று ஆங்கிலத்திலே சொல்வோம்

தமிழில் இதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை
யாரேனும் சொன்னால் மேலே உள்ள வரியை எடுத்துவிட்டு அதை வைத்துவிடலாம்ஆனால் அப்படிப்பட்ட ஒரு அரிய உவமையை தமிழில் இன்று காண முடிந்ததுதஞ்சை அகழியில் ஒரு நீர்த்தூம்பியை முனைவர் மணிமாறன் அவர்களும் சுவடியியல் ஆய்வாளர் கோ.ஜெயலட்சுமி அவர்களும் கண்டறிந்தனர்நீர்த்தூம்பி என்றால் பூமிக்கு கீழே நீரை எடுத்து வரும் குழாய் என்று கொள்ளலாம்இத்தோடு இதை நிறுத்திக் கொள்கிறேன்நீர்த்தூம்பி குறித்து சொல்ல வந்த அவர்கள்“பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழிஇரும்பெரு நீத்தம் புகுவது போலஅளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்” என்ற “மணிமேகலை” வரிகளை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தியை இன்றைய தீக்கதிரில் வாசித்து அசந்து போனேன்பெரிய ஏரிகளிலே தேக்கப்பட்ட தண்ணீர் பூமிக்கு அடியே செல்லும் சிறிய குழாய்கள் வழியாக சென்று மக்களுக்கு பயன்களைத் தருவது போலசிறிய செவித்துளை வழியே அறக்கருத்துகள் மனதை சென்றடைந்து நெறிப்படுத்தும்மூன்று விஷயங்கள் சொல்லமணிமேகலை காலத்தில் நிறைய பெருஏரிகள் வெட்டப்பட்டு பராமரிக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒன்றுபூமிக்கு கீழே குழாய்களை செலுத்தி அவற்றின் வழியாக நீரை மக்களுக்கு கொண்டு செல்லும் நீர் மேலாண்மை அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது என்பது இரண்டுசின்ன செவித்துளை வழியாக கொண்டு செல்லப்படும் நல்ல விஷயங்களுக்கு பூமிக்கு கீழே சிறிய குழாய் வழியாக கொண்டு செல்லப்படும் தண்ணீரை உவமையாக்கும் நுட்பம் தமிழில் உண்டு என்பது மூன்று#சாமங்கவிய ஒருமணி பதினைந்து நிமிடங்கள்26.07.2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2021 10:22

ஐம்பதுமணி நேரமாவது அய்யாவோடு இருக்கிற வாய்ப்பு கிடைத்தபோதும்...

 


எண்பத்தி ஒன்பதிற்கும் தொண்ணூற்றிரண்டிற்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு நாளில்

திருச்சி கலைக்காவிரியில் நடந்த ஒரு கருத்தரங்கில்

அறுபதுகளில் இருந்த அவரை இருபதுகளின் மத்தியில் இருந்த நான் முதன்முதலில் சந்திக்கிறேன்

சந்தித்தேன் என்பதெல்லாம்கூட பொய்தான்

பார்த்தேன் என்பதுதான் சரி

என்ன நடந்தது என்பது சரியாக நினைவில்லை

ஆனால் திருக்குறள் குறித்து அல்லது வள்ளுவர் குறித்து

இவரால் ஏற்கமுடியாத ஒரு கருத்தை யாரோ கூறிவிட

மேடையில் ”பாய்ந்து ஏறுவது” என்பதற்கு இலக்கணத் தழும்பாய் பாய்ந்து ஏறினார்

பிடி பிடி என்று, பிசிறே இல்லாமல் ஆற்றொழுக்காய் கொட்டி முடிக்கிறார்

இருந்த ஆயிரத்தி சொச்சம் மக்களும் வெடித்து ஆரவாரிக்கிறார்கள்

அருகே அமர்ந்திருந்த கலைக்காவிரியின் அன்றைய சவுண்ட் இஞ்சினியரான கிறிஸ்டோபரிடம் கேட்கிறேன்,

“யார் இவர்?”

“இளங்குமரனார் அய்யா. திருக்குறளுக்கு அத்தாரிட்டி”  

இப்படித்தான் இளங்குமரனார் எனக்கு அறிமுகமாகிறார்

அதன்பிறகு என் கவனத்திற்கு வரும் அவரது கூட்டங்களில் எல்லாம் வெறிகொண்ட பார்வையாளனாகக் கலந்து கொள்கிறேன்

ஒருநாள் எனது பள்ளிக்குள் வருகிறார்

என்னைத்தான் பார்க்க வருகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

“நாம என்ன அவ்வளவு பெரிய ஆளாவா அதுக்குள்ள வளர்ந்து விட்டோம். நம்மைப் பார்க்க இவ்வளவு பெரிய ஆளுமை வருகிறாரே” என்று ரெக்கை முளைத்துவிட்டது

உண்மையிலுமே அப்படித்தான் நினைத்தேன்

ஆனால் எங்களது ராமதாஸ் அய்யாவை பார்ப்பதற்காகத்தான் அவர் வந்தார்

அய்யாவும் அவரும் நெருக்க நண்பர்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது

எங்கள் பள்ளியில் அமர்ந்தபடிதான் திருச்சி அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” யை அமைப்பதற்கான திட்டத்தை வடிக்கிறார்கள்

தொடர்ந்து எம் பள்ளிக்கு வந்தவண்ணம் இருக்கிறார்

எம் பள்ளியின் அப்போதைய “நாட்டு நலப்பணித் திட்ட” பிள்ளைகளின் பெரும்பங்களிப்பு தவச்சாலையின் கட்டமைப்பில் இருக்கிறது என்பது எப்போது நினைத்தாலும் இனிக்கிற செய்தி எங்களுக்கு

சிறுபிள்ளைத்தனமான மேதாவித்தனத்தோடு அவரை அப்போது எதிர் கொண்டிருக்கிறேன்

ராமதாஸ் அய்யா தன் பிள்ளையாகவே என்னை பாவித்து வந்ததை உணர்ந்தவராக அவர் இருந்த காரணத்தினால்தான் அவற்றை பெரிது படுத்தாமல் பெருந்தன்மையோடு கடந்து போயிருக்கிறார்

தப்பு தப்பாக அவரைக் கேள்விகள் கேட்டாலும் ஒரு மாணவனுக்கு உரிய பணிவோடுதான்  நடந்து கொண்டிருக்கிறேன் என்பதுதான் சற்று ஆறுதலான விஷயமாக இருக்கிறது

ஒருமுறை எங்கள் அய்யாவிடம் கூறினார்

“இந்தப் பையனிடம் எல்லா வினாக்களுக்குமான விடைகள் உள்ளன. எதைக் கூறினாலும் அதை இடைமறித்துக் கேட்பதற்கான வினாக்களும் உள்ளன.

ஆனால் வறட்டுத்தனமான போக்கு இருக்கிறது. பக்குவப்பட பத்து வருஷம் ஆகும்.

பெருசா வருவார்”

இதைப் புரிந்துகொள்வதற்கே எனக்கு பத்துப் பதினைந்து ஆண்டுகள் பிடித்தது

ராமதாசு அய்யாவின் பிள்ளையும் எம் பள்ளியின் தமிழாசிரியருமான செல்வம் தொடர்ந்து அய்யா பற்றிய தகவல்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்

சில நாட்களுக்கு முன்னர் அய்யா அவர்கள் குளியலறையில் வழுக்கி விழுந்த தகவலைக் கூறினார்

சென்று பார்ப்பது என்று முடிவெடுத்தோம்

நேற்று ராமதாஸ் அய்யா சென்று அய்யாவைப் பார்த்திருக்கிறார்

நன்றாக இருப்பதாக செல்வம்வழி செய்தி வருகிறது

இரவு அவர் இல்லை என்ற செய்தி வருகிறது

ஐம்பதுமணி நேரமாவது அய்யாவோடு இருக்கிற வாய்ப்பு கிடைத்தபோதும் அவரிடம் இருந்து எதையும் எடுத்துக்கொள்ளாத மக்காகவே இருந்திருக்கிறேன்

போய் வாருங்கள் அய்யா


26.07.2021

 

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2021 07:31

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.