இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 69

August 27, 2020

விரைவுபடும்

 

16.08.2006

புதன்கிழமை

பிரதமர்தொடக்கம் உள்ளூர் ஊராட்சித் தலைவர் வரைக்கும் கொடியேற்றி விடுதலைநாள் செய்தியை வண்ண வண்ணமாய் வழங்கி இருபத்தி நான்கு மணிநேரம்கூட ஆகியிருக்கவில்லை

அழகர், மகாலிங்கம் என்ற இரண்டு அருந்ததிய இளைஞர்கள்மலக் குழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மலக்குழியிலேயே மூழ்கி செத்துப் போனார்கள்

மதுரைவீரன், மகாலிங்கம், அழகர் மற்றும் தீரன் என்ற நான்கு அருந்த்திய இளைஞர்களும் மலக்குழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்

மதுரைவீரன்மலக்குழிக்குள்இறங்குகிறார்.

கழுத்துவரைமலச்சகதி. மேலே தேங்கி இருந்த நீரை வாளியால் மொண்டு அப்புறப்படுத்துகிறார்

35 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத மலக்குழி

கடுமையானநாற்றம்

பணியைத்தொடர இயலாது என்று கூறுகிறார்கள்

ஒன்றும்ஆகாது என்றும் பேசிய கூலியைவிட 200 ரூபாய் அதிகம் தருவதாகவும் கூறி வேலையைத் தொடருமாறு அந்த வீட்டின் உரிமையாளர் கேட்டுக் கொள்கிறார்

200 ரூபாய் என்பது அந்த இளைஞர்களின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம். எனவே அந்த வேலையை செய்யத் துணிகிறார்கள்

ஒரு கட்டத்தில் மதுரைவீரன் நெடி தாங்காமல் மயங்கி மலக்குழிக்குள்ளேயே விழுகிறார். உடனே அழகரும் மகாலிங்கமும் குழிக்குள் குதித்து மதுரைவீரனை மேலே தூக்கிவிட முயற்சிக்கின்றனர்.. குழிக்கு மேலே நின்றபடி தீரன் மதுரைவீரனை தாங்கி மேலே கிட்த்துகிறார்

மகாலிங்கம் மேலே ஏறிவிடுகிறார். ஆனாலழகர் ஏற முடியாமல் தவிக்கிறார். ஒருகட்ட்த்தில் அவர் மயங்கி மலச் சகதிக்குள் விழுந்து மூழ்கத் தொடங்குகிறார்

அழகரைக் காப்பாற்றுவதற்காக மகாலிங்கம் குழிக்குள் குதிக்கிறார்.. எதிர்பாராதவிதமாக இவரும் மயங்கி சகதிக்குள் மூழ்கத் தொடங்குகிறார்

இதைப் பார்த்த தீரன் மயங்கி விழுகிறார்

எப்படியோ மேலே எடுக்கப்பட்ட மகாலிங்கமும் அழகரும் சிகிச்சை பயனின்றி இறந்து விட்டனர் என்கிற செய்தியை செப்டம்பர் 2006 “தலித் முரசு” சொல்கிறது

வெகுதிரள் அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இந்த செய்தியைத் தவிர்த்து விடுகின்றன

அருப்புக்கோட்டையில் நடந்த அந்த சம்பவம் செங்கோட்டையை உலுக்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையாவது கொந்தளித்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை

ஆனால் ஒரு கேள்வியை மனசாட்சியுள்ள மனித்த் திரளிடம் அது எழுப்பியுள்ளது

ஒரு 200 ரூபாய் அதிகப்படியான கூலிஉயிரையே காவு கேட்க்க் கூடிய ஒரு தொழிலைச் செய்ய நான்கு இளைஞர்களை நிர்ப்பந்திக்குமானாலந்த இளைஞர்கள் சார்ந்துள்ள சமூகத்தின் பொருளாதாரம் எவ்வளவு கீழே இருக்கும்

இன்னொரு கேள்வியும் எழுகிறது,

இதே பொருளாதார நிலையில் உள்ள மேல்சாதியினர் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் இன்னும் 500 ரூபாய் கூட கொடுத்தாலும் இந்த வேலையை செய்வார்களா?

செய்வார்கள் எனில் இதை முழுக்க முழுக்க பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்

இல்லை எனில் இது பொருளாதாரம் நிர்ப்பந்திக்கும் ஜாதிப் பிரச்சினை

சத்தியமாய் என்ன கூலி கொடுத்தாலும் மேலாய் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த வேலையை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்

எனவே இது பொருளாதாரத்தால் நிர்ப்பந்திக்கப்படுகிற ஜாதிப் பிரச்சினை

இது ஒருபுறமிருக்க, இட ஒதுக்கீடு ஏதோ தலித் மக்களுக்கு ஏதோ ஏராளத்திற்கும் வழங்கி அவர்களது வாழ்க்கை வளப்பட்டுக் கிடப்பது போலவும்,

அதனால் இவர்களது வாய்ப்பு பறிக்கப்பட்டு தங்களது வாழ்க்கை இருண்டு கிடப்பதாகவும் மேட்டுக்குடித் தெருக்களில் இருந்து கூச்சல் கிளம்புகிறது

இட ஒதுக்கீட்டின் பயனாக வேலை வாய்ப்பினைப் பெற்ற தலித்துகளில் 90 விழுக்காடு பேருக்கு நான்காம் நிலை வேலைவாய்ப்பே கிடைத்துள்ளது என்பதையும்

இடஒதுக்கீடே இல்லாது போயினும் இந்த வேலைகள் இவர்களுக்கே வந்து சேரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணாம் இந்த வேலைகளை உயர்சாதியினர் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்

நெல்லை மாவட்டம் தெற்குப்பட்டி சமூகநலத்துறை அமைச்சர் பூங்கோதை அவர்களின் தொகுதியில் உள்ள ஒரு கிராம்ம்

அந்த ஊரில் உள்ள அங்கன்வாடியில் அருந்ததியர் வீட்டுக் குழந்தைகளை சேர்ப்பதில்லை என்கிற செய்தி உண்டு. திட்டமிட்டு இவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதையே இது சொல்கிறது

விடுதலைப் பெற்று இத்தனைப் பத்தாண்டுகளுக்குப் பிறகும் , இத்தனைச் சட்டங்களுக்குப் பிறகும் மனிதன் கையால் மைத மலத்தை அள்ளுகிறான் என்பதே கொடுமை. அதற்கும் பல இடங்களில் உரிய கூலி இல்லை என்பது கொடுமையினும் கொடுமை

மாற்று வேலைகளை உருவாக்குவது, இந்த வேலைகளைல் இருந்து இவர்களை மீட்பது என்கிற வேலைத் திட்டங்களை நிர்ப்பந்திக்க்க் கூடிய சக்தி இவர்களிடம் இருக்கிறதா?

சாத்தியமே என்கிற நம்பிக்கையை சமீபத்திய நிகழ்வுக்லள் நமக்குத் தருகின்றன

 

நான் சமீபத்தில் கலந்துகொண்ட பேரணிகளுள் உன்னதமானதும் அதிகப் பொருள் செறிந்த்தும் சத்திய ஆவேசம் நிரம்பி வழிந்த்துமாக நான் கருதுவது 12.06.2007 அன்று அருந்த்தியர்கள் வாழ்வுரிமைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நட்த்தியப் பேரணிதான்

”மூக்கைப் பிடிக்கத் தின்றுவிட்டு சிலர் செய்யும் அசுத்தங்களை மூக்கைப் பிடிக்காமலே சுத்தம் செய்யும் த்குப்புறவுத் தொழிலாளிகளது வாழ்க்கை…” என்று உ.வாசுகி அவர்கள் உரையாற்றத் தொடங்கியபோது பேரணியின் நிறைவிட்த்தை எங்கள் வரிசை அடைந்த்து

“அவனைப்போல இவனைப்போல ஏன் எண்ட்ஷக் கொம்பனையும்போலசகலவிதமான உரிமைகளோடும் வாழப் பிறந்தவர்கள் நீங்கள். இந்த மண்ணின் ஜனக்கள் நீங்களொன்றும் அனாதைகளல்ல, உங்களது வாழ்வுரிமைக்காகத் தோள் கொடுக்க, போராட, தியாகிக்க நாங்கள் இருக்கிறோம் “

என்ற மார்க்சிஸ்டுகளின் வெளிப்பாடாகவே அந்தப் பேரணியைப் பார்க்க முடிந்தது

அதற்காப் போராடும் அமைப்புகளை ஒன்று திரட்டி அரவணைத்த மார்க்சிஸ்ட் கட்சியை மகிழ்வோடு பற்றிக் கொள்ளத் தோன்றுகிறது

மரத்துப்போன மக்கள் எந்த மெட்டுக்குள்ளும் அடங்க மறுக்கும் தங்கள் விடுதலை கீத்த்துடன் வீதியை அளந்த்து நம்பிக்கையைத் தருகிறது

அடங்க மறுக்கும் அவர்களின் விடுதலைத் தேடலும் செங்கொடி இயக்கத்தின் தியாகமும் வியூகமும் அவர்களின் விடுதலையை நிச்சயம் விரைவுபடுத்தும்

இதை உறுதிப்படுத்துவதாக பேரணியின் ஊடாகவே தலைவர்களை முதல்வர் கலைஞர் அழைத்திருப்பது நம்பிக்கையை வலுவாக்குகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2020 21:04

July 24, 2020

அவரை இயக்குவது பலம் மிக்கவர்கள் என்பது கடந்து நம் எதிரிகள்



வழக்கு பதிவு சரி

ஏன் கைது செய்யவில்லை?

அவரை இயக்குவது பலம் மிக்கவர்கள் என்பது கடந்து நம் எதிரிகள்

எனவே அனைத்துக் எதிர்க் கட்சியினரும் ஒன்றினைந்து அவரது கைதைக் கோரி களமாட வேண்டும்

வழக்கு நீர்த்துப் போகாமல் முன்னெடுக்க வேண்டும்

24.07.2020
மதியம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2020 04:26

திரு குருமூர்த்தி சொல்லும் 60 பார்ப்பன எம்எல்ஏக்கள் என்பதும்

திரு SV சேகர் ஏதோ உளறிக் கொண்டிருப்பதாக நம்மில் பலர் கருதுகிறோம்“ஹிந்து மதத்தின் உயரிய பீடமான பிராமணர்களை”என்று அவர் சொன்னதுமிக மிக கவனமாக அவர்கள் யோசித்து ஆழமான பரிசீலனைக்குப்பின்அவர்மூலமாக வந்தவைஅது மதநம்பிக்கையுள்ள இந்துக்கள் பரிசீலிக்க வேண்டியதுநான் மதமற்று தெய்வ நம்பிக்கையற்று வாழலாம்எனது கவர் படம் பாருங்கள்அது என் அம்மாயிகாளியம்மாள்எனக்கு இரண்டு அம்மாக்கள்பெத்தவர் எலிசபெத்பார்த்ததில்லை அவரைரெண்டாவது அம்மா முனியம்மாஎப்பவும் நெற்றியில் நீறு அல்லது பட்டைதம்பி இந்து பெண்ணை மணந்தான்இறைநம்பிக்கையில்லாத நானும் கிறித்தவரான விட்டுவும் அப்பா அம்மாவாக அவன் கருதுவதாலும் ஊர் மக்களின் அன்பிற்கும் கட்டுப்பட்டும் அனைத்து சடங்குகளிலும் நின்று நான் விரும்பவே விரும்பாத பாத வணக்கத்தை ஏற்றவன்தங்கை இந்து குடும்பம்பழுத்த கிறிஸ்தவரான அப்பா இறந்தபோதுஅவர்மீது இருந்த அன்பின் நிமித்தம் தெரு அண்ணன்களும் மாமாக்வளும் சித்தப்பன் பெரியப்பாக்களும் கேட்டதற்கிணங்க இந்துமுறைப்படி இந்துக்களுக்கான இடுகாட்டில் அடக்கம் செய்தோம்தெருக்கார சொந்தங்கள் குளித்து பட்டைபோட்டு தண்ணீர் சுமந்துவந்தபோது அந்த அன்புகண்டு அழுதவன்கருமாதியின் போது அப்பாவை மாமா என்று அழைத்த எங்கள் தெரு இந்துக்கள் மாமா மச்சினன் சீர் செய்தனர்இவர்கள் எல்லோரும் இந்துக்கள்இவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று திரு சேகர் சொல்கிறார்இது அவரது சொந்தக் கருத்தென்று யாரும் சொல்லவில்லைஎனவே இது அவர் மூலமாக வெளிவந்த அவர்களது கருத்துதான்இதை மீண்டும் நிறுவுகிற முயற்சியைத் தொடங்குகிறார்கள்இந்துக்கள் இதை எதிர்க்க வேண்டும்அவர்களுக்கு இந்த ஆபத்தைக் கொண்டுபோக வேண்டும்அதே நேரத்தில் இந்த பார்ப்பன கொக்கரிப்புக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் உள்ளனர்இதற்கு எதிரான களத்திலும் தீவிரமாக உள்ளனர்அவர்களை அன்போடும் மரியாதையோடும் அரவணைத்து கரமிணைக்க வேண்டும்அப்புறம்ரஜினி நினைத்தால் பத்துநாளில் முதல்வராகலாம் என்பதையும் போகிற போக்கில் கொள்ளக் கூடாதுஅது பல்ஸ் பார்ப்பதற்கான ஏற்பாடுரஜினியை முதல்வராக்கி தேரதலை எதிரகொள்வது பிஜேபியின் ஹிடன் அஜென்டாவாக இருக்கலாம்அதற்கு மறுத்தால் 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வரலாம்கவர்னர் ஆட்சியோடு தேர்தலை சந்திக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள்குருமூர்த்தி சொல்லும் 60 பார்ப்பன எம்எல்ஏக்கள் என்பதும்திரு முருகன் சொல்லும் 15 பிஜேபி எம்எல்ஏக்கள் என்பதும்உளறல் அல்லஅவர்களது இலக்குகவனமாகவும் கூர்மையாகவும் செயல்பட வேண்டிய நேரம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2020 04:23

July 22, 2020

July 20, 2020

இந்தியாவை விற்பதற்கான ஆதரவாளர் என்று

தொலைக் காட்சி வழி உரையாடலை மத்திய அரசு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கிறதுஅதில் ஒரு பகுதி வெற்றியும் பெற்றிருக்கிறதுஅதற்காக இதற்கு முன்புவரை ஏதோ நியாயமான உரையாடலை ஊடகங்கள் வழங்கி வந்ததாகக் கொள்ளத் தேவை இல்லைஒருநாள் வலதுசாரி ஆதரவாளார் என்று ஒருவர் வருவார்அவரே மறுநாள் சங்கரமட ஆதரவாளர் என்று வருவார்அவரே மறுநாள் அல்லது அதே நாளில் இன்னொரு நேரத்தில் இன்னொரு தொலைக் காட்சியில் பாஜக காரராக விவாதத்தில் கலந்து கொள்வார்இன்னும் இந்தியாவை விற்பதற்கான ஆதரவாளர் என்று ஒருவரும் வந்ததில்லை என்று நினைக்கிறேன்ஒருக்கால் அதுவும் நிகழ்ந்து இருக்கக்கூடும்ஐந்து பேர் விவாதத்திற்கு என்று கொண்டால்நிச்சயம் மூன்றுபேர் சமயங்களில் நான்குபேர் அவர்களாகவே இருப்பார்கள்அவர்கள் பேசுவதைவிட கத்துவதே பெரும்பான்மை நேரங்களில் நிகழும்Aazhi Senthil Nathan சொன்னதுமாதிரி நமது கருத்தாளர்கள் பெரும்பாலும்”தற்காப்பு ஆட்டத்தைத்தான்” ஆட வாய்த்ததுஆனால் அதை நம் நண்பர்கள் மிகச் சரியாக செய்தனர்வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை அம்பலப்படுத்தவும் செய்தனர்இதையே அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லைஅதற்கு நியாயமான காரணம் உண்டுஅவர்களது பிரதிநிதிகள் நிறைய பேசினாலும்நமது மக்கள் குறைவாகவே பேசினாலும்அதிலும் குறுக்கீடுகள் இருந்தாலும்நமது நண்பர்கள் மக்களிடம் போய் சேர்ந்தார்கள்அவர்கள் அம்பலப்பட்டு நின்றார்கள்பாஜகவின் மிகப்பெரிய கனவு“தமிழ்நாடு”இந்த அளவிலான விவாதங்கள்கூட தங்களுக்கு ஆபத்தானவை என்று மிகச் சரியாக உணர்ந்தார்கள்அவர்களுக்கான குரலைத் தவிர மற்றவற்றை மௌனப்படுத்திவிட முடிவெடுக்கிறார்கள்விவாதிக்கும் நண்பர்களுக்கும் தொல்லை தந்திருக்கலாம்அடுத்து அதையும் அவர்கள் தரக்கூடும்வழக்குகள் பாயலாம்சிரமப்படுத்தலாம்அதற்கு முன்னதாக மக்கள் நலனில் ஆதரவு நிலையோடு இருந்த நெறியாளர்களை நெருங்கி இருக்கிறார்கள்தோழர் அருணன் பேசும்போது,ஆழியின் மொழியுரிமை விவாதத்தின்போதுபுன்னகைத்த நெறியாளர்களையும் அவர்கள் கணக்கெடுத்திருக்கக் கூடும்அதற்கான சாணக்கிய ஆளுமைகள் தமிழகத்தில் இல்லையா என்ன?பட்டியல் ரெடிஅவர்கள் நம்புவது இதைத்தான்ஏற்கனவே உள்ள மூவரோடு நெறியாளரும் சேர்ந்து நண்பர்களை அழுத்த வேண்டும்நாம் போகாத நிலை வந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சியேஆனால் அவர்கள் நினைப்பது நடக்காதுகாரணம் இப்போதைக்கு விவாதங்களை மக்கள் பார்ப்பதே நம் நண்பர்களின் செய்தியை, விவாதத்தைக் கேட்பதற்காகத்தான்இவர்களும் இல்லை எனில்மக்களுக்கு அது போரடிக்கும்சரி முடிப்போம்,ஊடக உரையாடலுக்கான வாய்ப்பு நமக்கு குறைந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்நியாயமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை எப்படி எதிர்கொள்வது என்று தீர்மானிக்க வேண்டும்”யூட்யூப்” உள்ளிட்ட ஊடகங்களைக் கையெடுக்க வேண்டும்சிறு சிறு துண்டுப் பிரசுரங்கள்தெருமுனைக் கூட்டங்கள் என்றுமக்களோடு உரையாட ஏராளமான வழிகள் உள்ளனநம்பிக்கையோடு நகர்வோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2020 09:54

July 19, 2020

004

ரொம்பக் கனக்கிறதுவயிறு முட்ட பசி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2020 10:53

கவிதை 003

இருட்டும் இருட்டும்
இருட்டில் கலந்து
இருட்டில் பிறந்த
இருட்டு நான்இருட்டைத் தின்று
இருட்டைக் குடித்து
இருட்டைக் கக்கி
இருட்டைப் பேளஇருட்டால் துடைத்து
இருட்டால் எடுத்து
இருட்டில் எறிவாள்
என் தாய் இருட்டுஇருட்டை உடுத்தி
இருட்டை சுமந்து
இருட்டை மிதித்து
இருட்டை இழுத்து
இருட்டைப் பிடித்தபடி
இருட்டைக் கடக்க முயலும்
இருட்டு நான்இருட்டில்
இருட்டோடு நாங்கள்
நடந்துகொண்டே இருப்பது
எங்கள் பேரப்பிள்ளைகளுக்கான
வெளிச்சத்திற்காகசன்ன வெளிச்சத்திற்கே
கண்கள் கூசும் எங்களைக்
கிண்டல் செய்யாதீர்தலைமுறை தலைமுறையாய்
எங்களுக்கான வெளிச்சத்தையும் சேர்த்தே
தின்று வளர்ந்தவர்கள் நீங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2020 09:51

May 5, 2020

மாமா, செத்துட்டியா?”

தூங்கிக்கொண்டிருந்தவனின் காலைத் தட்டி எழுப்புகிறார் லேஷந்த்நல்ல தூக்கம்“ஏந்தம்பி?”“எங்க அப்பா துப்பாக்கி வாங்கித் தந்தாங்க”“அதுக்கு என்னடா?”“எந்திரி, நான் உன்ன சுடறேன்”“தூக்கமா இருக்கு தம்பி”“எந்திரி மாமா, சுடறேன். செத்து விழுவில்ல. அப்படியே தூங்கு. எந்திரி மாமா”சுடறான்செத்து விழுந்தேனா?விழுந்து செத்தேனா?என்ன நடந்தது என்று தெரியவில்லை.சிரித்துக் கொண்டே கேட்கிறார்,“மாமா, செத்துட்டியா?”“செத்துட்டேன்”“குட் பாய்”
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2020 09:37

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.