விரைவுபடும்

 

16.08.2006

புதன்கிழமை

பிரதமர்தொடக்கம் உள்ளூர் ஊராட்சித் தலைவர் வரைக்கும் கொடியேற்றி விடுதலைநாள் செய்தியை வண்ண வண்ணமாய் வழங்கி இருபத்தி நான்கு மணிநேரம்கூட ஆகியிருக்கவில்லை

அழகர், மகாலிங்கம் என்ற இரண்டு அருந்ததிய இளைஞர்கள்மலக் குழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மலக்குழியிலேயே மூழ்கி செத்துப் போனார்கள்

மதுரைவீரன், மகாலிங்கம், அழகர் மற்றும் தீரன் என்ற நான்கு அருந்த்திய இளைஞர்களும் மலக்குழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்

மதுரைவீரன்மலக்குழிக்குள்இறங்குகிறார்.

கழுத்துவரைமலச்சகதி. மேலே தேங்கி இருந்த நீரை வாளியால் மொண்டு அப்புறப்படுத்துகிறார்

35 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத மலக்குழி

கடுமையானநாற்றம்

பணியைத்தொடர இயலாது என்று கூறுகிறார்கள்

ஒன்றும்ஆகாது என்றும் பேசிய கூலியைவிட 200 ரூபாய் அதிகம் தருவதாகவும் கூறி வேலையைத் தொடருமாறு அந்த வீட்டின் உரிமையாளர் கேட்டுக் கொள்கிறார்

200 ரூபாய் என்பது அந்த இளைஞர்களின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம். எனவே அந்த வேலையை செய்யத் துணிகிறார்கள்

ஒரு கட்டத்தில் மதுரைவீரன் நெடி தாங்காமல் மயங்கி மலக்குழிக்குள்ளேயே விழுகிறார். உடனே அழகரும் மகாலிங்கமும் குழிக்குள் குதித்து மதுரைவீரனை மேலே தூக்கிவிட முயற்சிக்கின்றனர்.. குழிக்கு மேலே நின்றபடி தீரன் மதுரைவீரனை தாங்கி மேலே கிட்த்துகிறார்

மகாலிங்கம் மேலே ஏறிவிடுகிறார். ஆனாலழகர் ஏற முடியாமல் தவிக்கிறார். ஒருகட்ட்த்தில் அவர் மயங்கி மலச் சகதிக்குள் விழுந்து மூழ்கத் தொடங்குகிறார்

அழகரைக் காப்பாற்றுவதற்காக மகாலிங்கம் குழிக்குள் குதிக்கிறார்.. எதிர்பாராதவிதமாக இவரும் மயங்கி சகதிக்குள் மூழ்கத் தொடங்குகிறார்

இதைப் பார்த்த தீரன் மயங்கி விழுகிறார்

எப்படியோ மேலே எடுக்கப்பட்ட மகாலிங்கமும் அழகரும் சிகிச்சை பயனின்றி இறந்து விட்டனர் என்கிற செய்தியை செப்டம்பர் 2006 “தலித் முரசு” சொல்கிறது

வெகுதிரள் அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இந்த செய்தியைத் தவிர்த்து விடுகின்றன

அருப்புக்கோட்டையில் நடந்த அந்த சம்பவம் செங்கோட்டையை உலுக்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையாவது கொந்தளித்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை

ஆனால் ஒரு கேள்வியை மனசாட்சியுள்ள மனித்த் திரளிடம் அது எழுப்பியுள்ளது

ஒரு 200 ரூபாய் அதிகப்படியான கூலிஉயிரையே காவு கேட்க்க் கூடிய ஒரு தொழிலைச் செய்ய நான்கு இளைஞர்களை நிர்ப்பந்திக்குமானாலந்த இளைஞர்கள் சார்ந்துள்ள சமூகத்தின் பொருளாதாரம் எவ்வளவு கீழே இருக்கும்

இன்னொரு கேள்வியும் எழுகிறது,

இதே பொருளாதார நிலையில் உள்ள மேல்சாதியினர் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் இன்னும் 500 ரூபாய் கூட கொடுத்தாலும் இந்த வேலையை செய்வார்களா?

செய்வார்கள் எனில் இதை முழுக்க முழுக்க பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்

இல்லை எனில் இது பொருளாதாரம் நிர்ப்பந்திக்கும் ஜாதிப் பிரச்சினை

சத்தியமாய் என்ன கூலி கொடுத்தாலும் மேலாய் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த வேலையை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்

எனவே இது பொருளாதாரத்தால் நிர்ப்பந்திக்கப்படுகிற ஜாதிப் பிரச்சினை

இது ஒருபுறமிருக்க, இட ஒதுக்கீடு ஏதோ தலித் மக்களுக்கு ஏதோ ஏராளத்திற்கும் வழங்கி அவர்களது வாழ்க்கை வளப்பட்டுக் கிடப்பது போலவும்,

அதனால் இவர்களது வாய்ப்பு பறிக்கப்பட்டு தங்களது வாழ்க்கை இருண்டு கிடப்பதாகவும் மேட்டுக்குடித் தெருக்களில் இருந்து கூச்சல் கிளம்புகிறது

இட ஒதுக்கீட்டின் பயனாக வேலை வாய்ப்பினைப் பெற்ற தலித்துகளில் 90 விழுக்காடு பேருக்கு நான்காம் நிலை வேலைவாய்ப்பே கிடைத்துள்ளது என்பதையும்

இடஒதுக்கீடே இல்லாது போயினும் இந்த வேலைகள் இவர்களுக்கே வந்து சேரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணாம் இந்த வேலைகளை உயர்சாதியினர் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்

நெல்லை மாவட்டம் தெற்குப்பட்டி சமூகநலத்துறை அமைச்சர் பூங்கோதை அவர்களின் தொகுதியில் உள்ள ஒரு கிராம்ம்

அந்த ஊரில் உள்ள அங்கன்வாடியில் அருந்ததியர் வீட்டுக் குழந்தைகளை சேர்ப்பதில்லை என்கிற செய்தி உண்டு. திட்டமிட்டு இவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதையே இது சொல்கிறது

விடுதலைப் பெற்று இத்தனைப் பத்தாண்டுகளுக்குப் பிறகும் , இத்தனைச் சட்டங்களுக்குப் பிறகும் மனிதன் கையால் மைத மலத்தை அள்ளுகிறான் என்பதே கொடுமை. அதற்கும் பல இடங்களில் உரிய கூலி இல்லை என்பது கொடுமையினும் கொடுமை

மாற்று வேலைகளை உருவாக்குவது, இந்த வேலைகளைல் இருந்து இவர்களை மீட்பது என்கிற வேலைத் திட்டங்களை நிர்ப்பந்திக்க்க் கூடிய சக்தி இவர்களிடம் இருக்கிறதா?

சாத்தியமே என்கிற நம்பிக்கையை சமீபத்திய நிகழ்வுக்லள் நமக்குத் தருகின்றன

 

நான் சமீபத்தில் கலந்துகொண்ட பேரணிகளுள் உன்னதமானதும் அதிகப் பொருள் செறிந்த்தும் சத்திய ஆவேசம் நிரம்பி வழிந்த்துமாக நான் கருதுவது 12.06.2007 அன்று அருந்த்தியர்கள் வாழ்வுரிமைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நட்த்தியப் பேரணிதான்

”மூக்கைப் பிடிக்கத் தின்றுவிட்டு சிலர் செய்யும் அசுத்தங்களை மூக்கைப் பிடிக்காமலே சுத்தம் செய்யும் த்குப்புறவுத் தொழிலாளிகளது வாழ்க்கை…” என்று உ.வாசுகி அவர்கள் உரையாற்றத் தொடங்கியபோது பேரணியின் நிறைவிட்த்தை எங்கள் வரிசை அடைந்த்து

“அவனைப்போல இவனைப்போல ஏன் எண்ட்ஷக் கொம்பனையும்போலசகலவிதமான உரிமைகளோடும் வாழப் பிறந்தவர்கள் நீங்கள். இந்த மண்ணின் ஜனக்கள் நீங்களொன்றும் அனாதைகளல்ல, உங்களது வாழ்வுரிமைக்காகத் தோள் கொடுக்க, போராட, தியாகிக்க நாங்கள் இருக்கிறோம் “

என்ற மார்க்சிஸ்டுகளின் வெளிப்பாடாகவே அந்தப் பேரணியைப் பார்க்க முடிந்தது

அதற்காப் போராடும் அமைப்புகளை ஒன்று திரட்டி அரவணைத்த மார்க்சிஸ்ட் கட்சியை மகிழ்வோடு பற்றிக் கொள்ளத் தோன்றுகிறது

மரத்துப்போன மக்கள் எந்த மெட்டுக்குள்ளும் அடங்க மறுக்கும் தங்கள் விடுதலை கீத்த்துடன் வீதியை அளந்த்து நம்பிக்கையைத் தருகிறது

அடங்க மறுக்கும் அவர்களின் விடுதலைத் தேடலும் செங்கொடி இயக்கத்தின் தியாகமும் வியூகமும் அவர்களின் விடுதலையை நிச்சயம் விரைவுபடுத்தும்

இதை உறுதிப்படுத்துவதாக பேரணியின் ஊடாகவே தலைவர்களை முதல்வர் கலைஞர் அழைத்திருப்பது நம்பிக்கையை வலுவாக்குகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2020 21:04
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.