சூத்திர விடுதலைக்கான முன் நிபந்தனை
தலித்தைவிட சூத்திரன் உசத்தியானவன் என்று சூத்திரர்கள் பலர் கருதுவதும்
ஏதோ தாம் பெரிய அவதாரம் என்பதுபோல் கருதி கிடைக்கிற தலித்துகளைத் தாக்குவதுமாக நகர்வது தொடர் கதையாக இருக்கிறதுஆவுடையார்கோவிலுக்கு அடுத்துள்ள குணத்திரான்பட்டியைச் சேர்ந்த இளைஞன் மதன்பொறியியலில் பட்டையம் பெற்றவன்கோவையில் கார் ஓட்டுனராகப் பணி புரிகிறார் பொங்கலுக்காக விடுப்பில் வந்திருக்கிறார்24.01.2021 அன்று மாலை தனது நண்பர்களோடு பட்டமங்கலத்தில் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்அவரை தண்ணிகொண்டான் மங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ப்ரதீப், மெய்கண்டன் உள்ளிட்ட இளைஞர்கள் மதனை ஜாதியை சொல்லித் திட்டியும் தாக்கியும் உள்ளனர்ஒருவழியாகத் தப்பித்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்ரு வீடு திரும்பும்போதுமீண்டும் வழி மறித்து தாக்கியுள்ளனர்ஒருகட்டத்தில் நா வறண்ட நிலையில் தண்ணீர் கேட்ட மதனது வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்போதையில் இருந்த அவர்கள் மயங்கியபோதுதான் மதனால் அங்கிருந்து தப்பிக்க முடிகிறதுஎன்கிற செய்தியை தம்பி ஸ்டாலின் தி தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்தலித் என்றால் பரிகசிக்கவும் தாக்கவுமான லைசென்சை இவர்களுக்கு எவன் தந்தது?அவ்வளவு உயர்வானவர்களா இடை சாதியினர்?இவர்களே இன்னும் தங்களுக்கான விடுதலைக்காக குரல் கொடுப்பவர்கள்தானே?எனில், இவர்களுக்கும் மேல் யாரோ இருக்கிறார்கள்தானே?இன்னும் சொல்லப்போனால் இப்படியான ஒரு அடுக்கு ஏற்பாடே அவர்களுக்கு எதிராக எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பார்ப்பனர்கள் செய்ததுதானேஅடுத்தவனை அடிமையாகக் கருதும் இடைசாதிக் காரன் எப்படி தனது விடுதலைக்காக குரல் கொடுக்க முடியும்இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காத அளவிற்கு கடுமையான தண்டனை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டும்எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்சூத்திர விடுதலைக்கான முன் நிபந்தனை தலித் விடுதலை
Published on January 30, 2021 23:22
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)