நாளைக்கு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுகிறார் மாண்பமை பிரதமர்அவருக்கு எமது பாராட்டுக்கள்இதை எதிர்க்கட்சிகள் சரியாகப் பயன்படுத்தி மத்திய அரசிற்கு வழிகாட்ட முய்ற்சிக்க வேண்டும்”இது மருத்துவம் சார்ந்த விஷயம். அரசியல் அல்ல. எனவே தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டமாட்டோம்”என்கிறீர்கள் மாண்பமை முதல்வர் அவர்களே,தமிழ்நாட்டிற்கும் ஹைட்ராக்சி க்ளோரோ குயின் தேவைப் படுகிறது.இதன் பற்றாக்குறைகூட தமிழ் நாட்டில் உயிழப்பை அதிகரிக்கச் செய்யலாம்மத்திய அரசோ மருந்தினை அமெரிக்காவிற்கு அனுப்ப இருக்கிறதுஇதனால் தமிழ் நாட்டிலும் அந்த மாத்திரைக்கான தட்டுப்பாடு வரலாம்இந்தப் பற்றாக்குறை மோசமான அரசியலால் வருவதுதானேஒடிசாவிற்கு 800 கோடியும் தமிழ் நாட்டிற்கு 510 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் அக்மார்க் அரசியல்தான் முதல்வர் அவர்களேஎனவே அவசியமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்
07.04.2020
Published on April 19, 2020 19:41