ஆயிற்று
முதல் நாளன்று பள்ளிக்குப் போன அதே மனநிலையில்,முதல் கோடைக்குப் பிறகான முதல் வேலைநாளின்போது சென்ற அதே மனநிலையில், பள்ளிக்குப் போன அதே மனநிலையில்பள்ளிக்குப் போகிறேன்முடிந்த அளவு கற்பித்தலைக் குறைத்துகற்றலுக்கு உதவும் கருவியாக என்னையும் என் நண்பர்களையும் இருத்திக்கொள்ள என்னால் ஆனவரை உதவவும்நான் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றது முதல்என்னோடு பணிபுரியும் நண்பர்களை வாரம் ஒரு புத்தகம் வாசிக்க வைத்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் அதுகுறித்து ஒரு ரெவ்யூ வாங்கியதுபோல் இந்த ஆண்டும் தொடர வேண்டும் என்றும்பள்ளிக்கு வரும் பெற்றோர்களை காக்க வைக்காமல் அழைத்து அமரவைத்துப் பேசும் செயலை நான் தொடரவும்குழந்தைகளின் தகப்பனாய் தாத்தனாய் தொடரவும்நண்பர்கள் என்னை வாழ்த்த வேண்டுகிறேன்முகநூல்13.06.2022
Published on June 16, 2022 06:02