ஆன்லைன் சூதாட்டக் காவுகள்

 ஆன்லைன் சூதாட்டத்திற்கு கல்லூரிக் குழந்தைகள் தொடங்கி பள்ளிக்கூடத்து சிறு குழந்தைகள் வரைக்கும் அடிமையாகிப் போயிருக்கிறார்கள்

சமயபுரத்து கோயில் வாசலில் கண்ணடக்கம் விற்றுப் பிழைக்கும் ஏழைத்தாய்மார்களின் பிள்ளைகள்கூட இதில் சரிந்துபோனதைக் கண்டு உடைந்துபோனவன் நான்இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி ஒரு வெளிநாட்டு வங்கியில் வேலைபார்க்கும் ஒரு அதிகாரியின் குடும்பத்தையே காவு வாங்கியதை ஒட்டிய ஒரு விவாதத்தை சன் தொலைக்காட்சியின் இன்றைய( 03.01.2022) ”கேள்விக் களம்” கொடுத்ததுஆன்லைன் ரம்மி விளையாட்டு எவ்வளவு மோசமானது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான்.மணிகண்டன் என்பவர் ஒரு அயல்நாட்டு தனியார் வங்கியில் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தவர்மனவி இரண்டு குழந்தைகள் என்று அழகான குடும்பம்ஏதோ ஒரு புள்ளியில் ஆன்லைன் ரம்மியில் கரைகிறார் மணிகண்டன்ஆன்லைன் ரம்மியை நடத்தும் நிறுவனங்கள் நம்மை விளையாடிக்கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள் என்கிறார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு சிவபாலன்நாம் விளையாடிக் கொண்டே இருப்பதற்கு அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதையும் அவர் புரிகிற மொழியில் விளக்கினார்இருவர் விளையாட ஆரம்பிப்பதாகக் கொள்வோம்தொடர்ந்து நாம் தோற்றுக் கொண்டே இருக்கிறோம் எனில் காசு தீர்ந்ததும் நாம் நகர்ந்து விடுவோம்கமிஷன் நிறுவனதிற்குப் போகும் ஜெயித்த தொகை ஜெயித்தவனுக்குப் போகும் நானும் நீங்களும் ஆளுக்கு 10000 ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து உட்காருகிறோம்500 ரூபாய் பந்தயம்எனில், நான் ஐநூறு ரூபாயை கட்டுவேன்நீங்கள் ஐநூறு ரூபாயைக் கட்டுவீர்கள்நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள்அநாம் கட்டிய ஆயிரத்தில் 800 உங்களுக்கு வந்துவிடும்மிச்சம் 200 ரூபாய் நிறுவனத்திற்கு கமிஷனாகப் போகும்ஆக,ஆளுக்கு 10000 ரூபாயோடு அதாவது 20,000 ரூபாயோடு உட்கார்ந்தோம்முதலாவது ஆட்ட முடிவில் வென்ற உங்களிடம் 10,300 இருக்கும்தோற்ற என்னிடம் 9,500 இருக்கும் நிறுவனத்தின் கையில் 200 ரூபாய் போயிருக்கும்இரண்டாவது ஆட்டத்தில் நான் வெற்றி பெறுவதாக வைத்துக் கொள்வோம்இப்போது என்னிடம் 9,800 ரூபாயும் உங்களிடம் 9,800 ரூபாயும் இருக்கும்நிறுவனத்திடம் 400 ரூபாய் இருக்கும்ஆட்டம் விறுவிறுப்பாய் நகர்கிறது40 முறை ஆடுகிறோம்ஆளுக்கு இருபதுமுறை வெற்றி பெறுகிறோம் என்றால்80 x 200 = 16,000 ரூபாய் நிறுவனத்திற்கான கமிஷன்40 ஆட்டம் நான், 40 ஆட்டம் நீங்கள் சமமாக வெற்ரி பெற்றிருப்போம்நான் கொண்டு வந்த 10,000 ரூபாயில் 2,000 என்னிடம் இருக்கும்நீங்கள் கொண்டுவந்த 10,000 ரூபாயில் 2,000 உங்களிடம் இருக்கும்விளையாடியது நாம்சமாமாக வென்றிருக்கிறோம்நாம் விளையாட விளையாட அவன் எவ்வளவு சம்பாரிக்கிறான் பாருங்கள்நமக்குள் ஒரு போதை வருகிறது விளையாடாமல் இருக்க முடியவில்லைகையில் இருப்பதை எல்லாம் இழந்துஒருகோடி ரூபாய் கடன் வாங்கி அதை வைத்து விளையாடிதோற்றெல்லாம் இல்லைவிளையாடியதலாயே அனைத்தையும் இழந்து கடனை அடைக்க முடியாமல் மனைவியையும் பிள்ளைகளையும் கொன்றுதானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் மணிகண்டன்அரசு இதிலிருந்து இளைஞர்களை மீட்பதற்கு யோசிக்க வேண்டும் #சாமங்கவிந்து 50 நிமிடங்கள்04.01.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2022 05:17
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.