காவல்துறையின் இந்த காவி சாய்ந்த போக்கை
அன்பின் முதல்வருக்கு,
வணக்கம்.நான் அத்தனை முறையும் உதயசூரியனுக்கே வாக்களித்த ஒரு இடதுசாரிதேர்தலுக்கு முன்பிருந்த உங்கள் மீதிருந்த அன்பு தேர்தலுக்குபின் பேரன்பானதுஉங்கள் மீதான மரியாதையும் பலமடங்கு கூடியுள்ளதுஉங்கள் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்கள் உடல்நலன் மீதான கவலையைத் தருகிறதுஆனாலும்,உங்களது உழைப்பு விழலுக்கு இழைத்த நீராகிப் போகுமோ என்கிற அச்சத்தில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்பத்திரிக்கையாளர் திரு S.P. லட்சுமணன் அவர்கள் திமுக சார்பாளர் எல்லாம் அல்லஇன்னும் சரியாக சொல்வதெனில் வக்காளத்து எல்லாம் வாங்குகிற நபரெல்லாம் இல்லை என்றாலும்அதிமுகவை எப்போதும் ஈர நெஞ்சோடு பார்ப்பவர்அது செய்கிற தவறுகளையெல்லாம் சொன்னாலும் அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர் உங்களைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போது70 வயதை நெருங்கும் ஒருவர் ஆறுமாத காலமாக இப்படி அலைவதைக் கண்டு வியப்பாக இருப்பதாகவும்அத்தனை பயணங்களையும் பயனுள்ளவையாக நீங்கள் மாற்றி வருவதையும் பெருமையோடு குறிப்பிடுகிறார்அத்தனையும் உண்மை29.12.2021 அன்று தஞ்சை வருகிறீர்கள்இலக்கான ஒரு லட்சத்தி ஆறாயிரம் ஏக்கரைத் தாண்டி ஒரு லட்சத்தி அறுபத்தி ஆறாயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை சொல்கிறீர்கள்நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள சுமை தூக்குபவர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்டு நிறைய செய்கிறீர்கள்வணங்குகிறேன்30.12.2021 அன்று முன்னிரவு வரை திருச்சியில் இருக்கிறீர்கள்சென்னையில் பேய்மழைவிடிந்து எழுந்தால் அதிகாலை 5 மணிக்கே சென்னையில் மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்கிறீர்கள்ஆச்சரியமாயிருக்கிறதுஅறிவிப்புகளை அரசானைகளாக மாற்றும் வேகத்தை லட்சுமணன் அப்படி மெச்சுகிறார்வாசகனை ரசிகனாக்கும் வித்தை உங்களுக்கு இயல்பாகவே இருக்கிறதுஇரண்டு சம்பவங்களை உங்களது கவனத்திற்கு கொண்டுவர ஆசைப்படுகிறேன்17.12.2021 அன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தோழர் சுபவீ அவர்கள் உரையாற்றுகிறார்அதை எதிர்த்து பல்கலைக்கழக வாசலில் மேடைபோட்டு திரு H,ராஜா ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்அதற்கு காவல்துறை அனுமதி வழங்குகிறதுகோவையில் உள்ள ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா பயிற்சி தருகிறதுஅதை எதிர்த்து தோழர் கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கைது செய்யப்படுகிறார்இதை எதிர்த்து அய்யா வீரமணி அவர்கள்கூட 01.01.2022 அன்றைய “விடுதலை” யில் ஒரு கண்டன அறிக்கையை வெளியிடுகிறார்நீங்கள் சனாதனத்திற்கு எதிராகக் களமாடுபவர் என்பதில் ஆசிரியருக்கும் அய்யம் இல்லைஎனக்கும் அய்யம் இல்லைஆனால்இது மாதிரி சம்பவங்கள் நீங்கள் எவ்வளவுதான் அவர்களுக்கு எதிராக களமாடினாலும் சனாதனத்தை வளர்க்கவே உதவும்கோவை உங்களது கவனத்தில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்ஆனாலும்காவல்துறையின் இந்த காவி சாய்ந்த போக்கை நீங்கள் கண்டு சரி செய்ய வேண்டும்இது,வாக்களிக்க ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை உதயசூரியனுக்கு மட்டுமே வாக்களிக்கும் வாய்ப்பினைப் பெற்ற ஒரு இடதுசாரியின்கையேந்திய விண்ணப்பம்அருள்கூர்ந்து கவனியுங்கள்அருள்கூர்ந்து உடல்நலத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்நன்றிஅன்புடன்,இரா,எட்வின்#சாமங்கவிய 07 நிமிடங்கள்01.01.2022
Published on January 01, 2022 20:47
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)