எங்கள் தாய் எந்த வண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு என்ன பழுப்பர்களே
இசை அமைப்பாளார் AR ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் வாழ்த்துகளோடு இதை மீண்டும் வைக்கிறேன்
*************************************************எனக்கென்னவோ இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் மொழி அரசியலை நன்கு அறிந்தவராகவும்சனாதனம், மொழி, மற்றும் ஜனநாயகத்தை தின்று செரிக்க சங் பரிவாரம் முயலும் ஒவ்வொருப் பொழுதும் மிகச் சரியாகவும் அச்சம் இன்றியும்எதிர்வினையாற்றுபவராகவும் தெரிகிறார்அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும் என்றும்இந்தியாவின் ஒற்றைமொழியாக இந்தியை கொண்டுவர வேண்டும் என்றும்ஆதிக்கக் குரலெடுத்ததும்கீழ்க்காணும் படத்தை ரஹ்மான் தனது ட்விட்டரில் வைக்கபற்றிக் கொண்டதுஉடனே,தமிழ்த்தாய் எவ்வளவு அழகானவள்அவளை இவ்வளவு கருப்பாகவும் கொடூரமாகவும் வரைவது வக்கிரம் அல்லவா என்று கொதிக்கிறார்கள்?
இவ்வளாவு உக்கிரமாய் கொதிக்கிறார்களே, யார் இவர்கள் என்று பார்த்தால்
தமிழை நீஷ பாஷை என்பவர்கள் அவர்கள்தமிழ் எம் தாய்,அவள் கருப்பாய் இருந்தாலும்கொடூரமாய் இருந்தாலும் எம் தாய்கறுப்பு காக்கையை எங்களின் மூதாதையராகப் பார்ப்பவர்கள் நாங்கள்காகத்தை ஊரின் தோட்டியாக பார்ப்பவர்கள் நீங்கள்எங்கள் தாய் எந்த வண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு என்ன பழுப்பர்களேஇந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் என்கிறார் ரஹ்மான்இது மொழி அரசியலில் புதுக் குரல்அய்யோ அய்யோதமிழா, இணைப்பு மொழியா என்று கதறுகிறார்கள்ஏன் கூடாது என்கிறேன்அத்தோடு நிறுத்தவில்லை அவர்கறுப்பாக இருப்பவர்களை தொகுப்பாளர்களாக,நடிகர்களாக வாய்ப்பு கொடுங்கள்நம் மக்களுக்கு நமது நிறம் பிடிக்கும் என்கிறார்”திண்டேர் நள்ளி கானத் தண்டர்பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டிமுழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழிபெருந்தோ ணெகிழ்த்த செல்லற்குவிருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”என்கிறார் காக்கைப்பாடினியார்காதலியைப் பிரிந்து நெடுநாள் கழித்து வருகிறான் காதலன்.
தான் வரும்வரை தன் காதலியை தன் காதலியை ஆற்றுப்படுத்திக் காத்தமைக்காக நன்றி சொல்கிறான்தான் எதுவும் செய்யவில்லை என்றும்,அவ்வப்போது கரைந்து நீ வரப்போவதாய் காக்கைதான் அவளை ஆற்றுப்படுத்தியது என்றும் தோழி சொல்கிறார்காக்கையை “ஊரின் தோட்டி” என்று தீட்டாய்ப் பார்த்த இலக்கியங்களை நாங்கள் நிராகரிப்போம்காக்கை கருப்பு,கரைந்து எமது உறவினரின் வருகையைக் கூறி எம்மை ஆற்றுப்படுத்தும் எமது கரிய தோழர்அதனால்தான்விடியல் வரும் என்று கரைந்துகொண்டிருக்கும் எமது பத்திரிக்கைக்கு “காக்கை” என்று பெயர் வைத்தோம்நன்றி ரஹ்மான்
Published on January 07, 2024 01:37
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

![இரா. எட்வின் [R.Edwin]](https://s.gr-assets.com/assets/nophoto/user/u_111x148-9394ebedbb3c6c218f64be9549657029.png)