என்னைக் கட்டிக்கிறதா இருந்தா செய்கிறேன் தோழர்
06.12.1952 இல் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களுக்கும் அம்பாள் அம்மாவிற்கும் திருமணம் நடக்கிறது
அவர்கள் இருவரும் இல்லறத்தில் இணைந்ததே ஒரு சுவையான கதை
அம்பாள் அம்மாவிற்கு மூன்று அக்காக்கள், ஒரு அண்ணன்
மூன்று அக்காக்களும் கட்சித் தோழர்களையே திருமணம் செய்து கொள்கிறார்கள்
இரண்டாவது அல்லது மூன்றாவது சகோதரி யமுனா
அவர் தோழர் K.M அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்
ஒருவர் மும்பையில் இருக்கிறார்
அம்மாவும் தன் சகோதரி வீட்டில் மும்பையில் கொஞ்ச காலம் தங்குகிறார்
அப்போது மும்பை தலைமறைவு அலுவலகத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டிய அவசியம் பிஆருக்கு வருகிறது
அப்போது அம்மா அறிமுகம் ஆகிறார்
இப்போது அம்மாவிற்கு சென்னையில் பணி கிடைத்து சென்னைக்கு வருகிறார்
தோழர் எதிர்க்கட்சித் தலைவராகிறார்
ஆகவே
நிறைய கடிதங்கள், கோரிக்கைகள்
அவர்களுக்கு பதில் எழுத வேண்டும்
அரசுக்கு அவை சம்பந்தமாக எழுத வேண்டும்
அவற்றை ஆவணப் படுத்த வேண்டும்
தமிழும் ஆங்கிலமும் நன்கு தெரிந்த அம்பாள் அம்மாவை தோழர் உதவக் கேட்கிறார்
அம்மா சொல்கிறார்
செய்கிறேன் தோழர்
என்னைக் கட்டிக்கிறதா இருந்தா செய்கிறேன் தோழர்
இந்தக் காட்சியை விஷுவலாக நினைத்துப் பார்க்கிறேன்
அய்ய்யோ
மேடைகளில் தோழருக்கும் அம்மாவிற்கும் திருமணம் நடந்ததாகவோ
அல்லது
தோழர் அம்மாவை திருமணம் செய்து கொண்டதாகவோதான் பெரும்பாலும் பேசுகிறார்கள்
தவறு,
உண்மை என்னவெனில்,
06.12.1952 அன்று அம்மா தோழர் பி.ராமமூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார்
அம்மாக்களின் பிள்ளை நான்
அம்மாவிற்கு முத்தம்
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)