சொடக்குகிற பொழுதில் மருத்துவமனைகளை

 

இரண்டு நாட்களுக்கு முன்பு பேராவூரணியில் ஒரு பள்ளிக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் தகரக் கொட்டகை நிறுவி பள்ளியை நடத்திவந்த நிலையில்குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோரோடு சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப செய்ததை வைத்திருந்தேன்04.11.2023 அன்றைய தமிழ் இந்துவில் இன்னொரு செய்தி வந்திருக்கிறதுமருதூர் தெற்குப்பட்டி,அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கிராமம்அங்கு உள்ள தொடக்கப் பள்ளியில் 100 குழந்தைகள் படித்து வருகிறார்கள்அந்தப் பள்ளியில் கூரைப் பூச்சும் சுவர்ப் பூச்சும் பெயர்ந்து விழுந்து குழந்தைகளின் மேலும் விழுவதால்பெற்றோர்கள் பாதுகாப்பு கருதி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த சூழலில்மாவட்ட ஆட்சித் தலைவர் திருமிகு ஆனிமேரி ஸ்வர்ணா அவர்கள் 06.11.2023 முதல் வேறு இடத்தை ஏற்பாடு செய்து பள்ளியை நடத்த உத்தரவிட்டுள்ளார்நமக்கு எழும் கேள்வி வயதான கட்டங்களை இடித்துவிட்டு புதிய பள்ளிக் கட்டடங்களை கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்சொடக்குகிற பொழுதில் மருத்துவமனைகளை, விளையாட்டுத் தளங்களை ஏற்பாடு செய்கிற முதல்வர் இதில் பேரதிகமாக கவனம் குவிக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்துஅல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களை அழைத்துதங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில்இடிந்து விழும் நிலையில் உள்ளஅல்லது,குழந்தைகள் அமர்ந்து படிக்க பாதுகாப்பற்ற பள்ளிகளின் விவரங்களைக் கண்டறிய வேண்டும்சரி செய்ய வேண்டும்
04.11.2023
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2023 21:45
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.