அங்கன்வாடிகளில் உள்ள LKG மற்றும் UKG வகுப்பெடுப்பதற்கு தாற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்திரவிட்டிருக்கிறதுமாதத்திற்கு 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்றும்
அதுவும் வருடத்திற்கு 11 மாதங்கள்தாம் என்றும் தெரிகிறதுஇது வன்மையன கண்டனத்திற்கு உரியதுஅரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்சங்கங்கள் அரசிற்கு அழுத்தத்தைத் தர வேண்டும்தனியார் பள்ளிகளில் அதுதானே என்பார்கள் சிலர்அதுவும் தவறென்றும்அதற்கெதிராகவும் அழுத்தங்களைத் தரவேண்டும் என்பதே நமது கோரிக்கைஇதைக் கண்டிக்கிற வேளையில்இது தினக்கூலியைவிடக் குறைவாக இருக்கிறது என்றும்துப்புரவுத் தோழர்களின் சம்பளத்தைவிடக் குறைவென்றும் தோழர்கள் பதிவது வருத்தம் அளிக்கிறதுதொகுப்பூதியம் குறைவென்பதும்அது அநியாயமென்பதும்அது களையப்பட வேண்டும் என்பதுதான் அவர்கள் சொல்ல வருவதுஅதை சொல்ல வருகிறபோது தம்மையும் அறியாமல் தவறி விடுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதுதினக்கூலியே குறைவென்பதும்துப்புரவுப் பணியாளர்களின் ஊதியம் குறைவென்பதையும் உணர முடியாதவர்கள் அல்ல நாம்100 நாள் வேலைத் திட்டத்தை முறைப்படுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்அந்தப் பணிக்கான ஊதியமும்ஆண்டு முழுவதும் வேலை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் நாம் உணராதது அல்லகவனமாக கேட்போம்
Published on October 13, 2022 09:17