உங்களை சுடச் சொன்ன பாரியண்டேசை உலகம் மறந்துவிட்டது சே
அன்பின் சேகுவேரா,
வணக்கமும் முத்தமும்அக்டோபர் 08, 1967உங்களது உடைமைகள் குறித்து பொலிவியா ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்குகிறதுசில தகவல்களையும் வெளியிடுகிறார்கள்உங்களோடு இருந்தவர்கள் உறைகிறார்கள்ஆமாம்,அவை அவ்வளவு துல்லியமானவைபிடிபட்டுவிட்டீர்கள்உயிரோடு இருக்கிறீர்களா? இல்லையா? என்பதுதான் கேள்விபிடிபட்ட கணவாயிலேயே நீங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக கசியவிடப்படுகிறதுபொலிவியாவைக் குறித்தும்பொலிவிய அதிபர் பாரியண்டோஸ் குறித்தும் நன்கு அறிந்தவர்களுக்கு ஒரு விஷயம் தீர்க்கமாகத் தெரிந்ததுஒன்று நீங்கள் பிடிபட்ட கணவாயிலேயே கொல்லப் பட்டிருக்க வேண்டும்அல்லது விசாரனைக்கு முன்பே நீங்கள் உறுதியாகக் கொல்லப்படுவீர்கள்அமாம்அமெரிக்காவே உங்களை உயிரோடு பனாமாவிற்கு கொண்டுபோக ஆசைப்பட்டதாக தகவல்கள் உண்டுபொலிவியாவில் வைத்து விசாரித்தாலும்விசாரனையை உங்கள் பக்கம் நகர்த்துவீர்கள்போக,பொலிவியாவில் மரண தண்டனை கிடையாதுநீங்கள் உயிரோடு இருப்பது மக்களை எப்போது வேண்டுமானலும் கிளர்ந்தெளச் செய்யும் என்பதைபாரியண்டோஸ் நன்கு உணர்ந்திருந்தான்ஆகவேபாரியண்டோஸ் உங்களைக் கொன்றுவிடுமாறு உத்தரவிடஅந்த உத்தரவு ரெக்டெரான் என்பவனுக்கு அனுப்பப் படுகிறதுஅவன் அதை செய்வதற்காகஉங்களை அடைத்துவைத்திருந்த பள்ளிக்கு வருகிறான்பாருங்கள் சே,பிடிபட்ட உங்களை அடைத்து வைப்பதற்காக பள்ளியை சிறையாக்கி இருக்கிறார்கள்சிறைகளை பள்ளியாக்க நினைத்த மனிதனை அடைத்து வைக்க பள்ளியை சிறையாக மாற்றினார்கள்பள்ளியில் இருந்த உங்களுக்கு உணவு அளிப்பதற்கு அனுமதி கேட்கிறார் யூலியா கார்டினோஸ் என்கிற ஆசிரியைஆச்சரியம்,அனுமதி கிடைக்கிறதுஎன்ன செய்யப் போகிறார்கள் என்னை? என்று கேட்கிறீர்கள்தனக்குத் தெரியாதென்றும்கடவுள் உங்களைக் காப்பாற்றட்டட்டும் என்றும் அழுதுகொண்டே கூறியபடி அவர் ஓடிவிடுகிறார்கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் உங்களைக் காப்பாற்றி இருப்பார்தானே சே“tri continental" பத்திரிக்கைக்கு நீங்கள் ஒரு முறை பேட்டி தருகிறீர்கள்கடைநிலையில் இருக்கக்கூடிய உலக மக்களின் விடுதலையே லட்சியம் என்கிறீர்கள்நம்முடைய ஒவ்வொரு செயலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரலாக இருக்க வேண்டும் என்றீர்கள் அதில்எவ்வளவு வித்தியாசம்எல்லோரும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் தர வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோதுஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயலேஅதற்கு எதிரான குரல் என்று சரியாக சொன்னவர் நீங்கள்அதே பேட்டியில்நமது குரலை ஒரே ஒரு காது கேட்டாலும் போதும்ஒரே ஒரு கை துப்பாக்கியை ஏந்தினாலும் போதும் என்றும் கூறினீர்கள்துப்பாக்கி ஏந்த கைகளைத் தேடிய நீங்கள்தான்எதிரியே தூண்டினாலும் தேவைப்பட்டால் ஒழிய ஆயுதத்தை எடுக்கக் கூடாது என்றும் சரியாகக் கூறினீர்கள்உங்களிடமிருந்த டைரி ஒன்றைக் கைப்பற்றி பாரியண்டோசிடம் கொடுக்கிறார்கள்அதை அவர் CIA விற்கு கொடுக்கிறார்அது எப்படியோ கிடைத்து நூலாகவும் வருகிறதுஅய்யோ சே,07.10.1967 அன்றுகூட எழுதியிருக்கிறீர்கள்அதில்வீரமிருந்தாலும் தவறான தந்திரங்களை அவை மக்களை பலிவாங்கும் என்பதால் அவற்றை கையெடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தீர்கள்இதற்குள் ரெக்டெரான் உங்களைச் சுட வந்துவிட்டான்முடியாது தடுமாறுகிறான்போதையேற்றுகிறான்நீங்களே அவனை உங்களை சுடச் சொல்லி உற்சாகப்படுத்தியதாகவும் உறுதியில்லாத தகவல்கள் கூறுகின்றனநீங்கள் இறந்ததும்அசட்டு துணிச்சல்காரர் நீங்கள் என்றும்இனி லத்தின் அமெரிக்காவில் ஏதும் செய்ய இயலாது என்றும் கூறினார்கள்ஆனாலும் பாருங்கள் லத்தீன் அமெரிக்கா சிவந்துகொண்டே இருக்கிறதுஅந்த மக்கள் ஜனநாயகத்திலும் பக்குவப்பட்டு வருகிறார்கள்உலகம் முழுக்கஏன் அமெரிக்காவிலும்பிள்ளைகள் உங்கள் படம் இட்ட பனியன்களை அணிகிறார்கள்உங்களை சுடச் சொன்ன பாரியண்டேசை உலகம் மறந்துவிட்டதுஅவன் உத்தரவால் கொல்லப்பட்ட உங்களை உலகம் அது உள்ளவரைக் கொண்டாடும்வீர வணக்கம் சேஅன்புடன்,இரா.எட்வின்09.10.2022#சாமங்கவிய இரண்டுமணி பதினான்கு நிமிடங்கள்09.10.2022
Published on October 13, 2022 09:23
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)