சாரு நிவேதிதா's Blog, page 84
January 4, 2024
உல்லாசம், உல்லாசம்… முன்பதிவுத் திட்டம் (சில விளக்கங்கள்)
உல்லாசம், உல்லாசம்… நாவலின் முன்பதிவுத் திட்டத்திற்காக சில நண்பர்கள் இருபதாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்கள். என் தொலைபேசி எண் அவர்களுக்குத் தெரியும் என்பதால் ஜிபே மூலம் அனுப்புவது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால் ரேஸர்பேயில் பத்தாயிரம் ரூபாய் வரைதான் அளவு வைத்திருக்கிறார்கள். அது சம்பந்தமாக என் நண்பர்கள் ரேஸர்பேயிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அது முடிந்ததும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இப்போதைக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அனுப்பும் நண்பர்கள் ரேஸர்பேயைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு மேல் என்றால், எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். ... Read more
Published on January 04, 2024 18:39
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு…
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். மிகுந்த கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை. சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது. சில உதாரணங்கள் தருகிறேன். ஐந்தாறு ஆண்டுகளாக செயல்பட்டு, ஆயிரம் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பகத்துக்கு புத்தக விழா நிர்வாகத்தினால் ஒரு ஸ்டால் தரப்படுகிறது. ஆரம்பித்து ஒரே ஆண்டு ஆகி, ஐம்பது புத்தகங்களே பதிப்பித்திருக்கும் பதிப்பகத்துக்கு ... Read more
Published on January 04, 2024 09:52
சக எழுத்தாளருக்கு ஒரு கடிதம்…
சென்ற ஆண்டு என்னை body shame செய்து வெகுவாக அழவிட்ட என் சக எழுத்தாளருக்கு, இந்த ஆண்டும் புத்தக விழாவில் அதே ஸ்டாலில் நாம் சந்திக்க இருக்கிறோம். அது எனக்கு மிகுந்த அச்சத்தையும் அவல உணர்வையும் கசப்பையும் உண்டாக்குகிறது. உங்களுக்கு ஞாபகம் இருக்கும். நான் அணிந்திருந்த கருப்புக் கண்ணாடியைப் பார்த்து விட்டு, “என்ன கேடராக்டா சாரு?” என்றீர்கள். எனக்குக் கொட்டையில் அடி வாங்கியதுபோல் இருந்தது. யாராவது உடல் பயிற்சி செய்து இளைத்திருந்தால் “என்ன இளைத்து விட்டீர்கள், ஷுகரா?” ... Read more
Published on January 04, 2024 01:59
January 3, 2024
ஷ்ருதி டிவி கபிலனுக்கு ஒரு தார்மீக ஆதரவு
கடந்த பல ஆண்டுகளாக ஷ்ருதி டிவி கபிலன் செய்து வரும் இலக்கியப் பணி யாவரும் அறிந்ததே. ஆனாலும் அவர் செய்து வரும் பணிக்கு நிதி ஆதாரம் இல்லை. இப்போதுதான் ஆங்காங்கே சில நண்பர்கள் இதை உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. பின்வரும் செய்தி என் வாசகர் வட்ட நண்பர்களிடமிருந்து கிடைத்தது. ”இலக்கியச் சேவை என்றால் எழுதுவது என்ற பொதுவான எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், உண்மையில் இலக்கியச் சேவை என்பது எழுதுவது மட்டும் அல்ல; இலக்கியம் சார்ந்து பணி ... Read more
Published on January 03, 2024 22:36
உல்லாசம், உல்லாசம்… முன்பதிவுத் திட்டம்
இதுவரை பன்னிரண்டு பேர் பணம் செலுத்தி, தங்கள் முகவரியை அளித்து முன்பதிவு செய்திருக்கிறார்கள். ரெஸர்பே மூலமும் பணம் செலுத்தலாம். அதற்கான சுட்டி: https://rzp.io/l/ullasamullasam1000 https://rzp.io/l/UllasamUllasam2000 https://rzp.io/l/UllasamUllasam5000 https://rzp.io/l/UllasamUllasam10000 https://rzp.io/l/UllasamUllasam25000 https://rzp.io/l/UllasamUllasam50000 https://rzp.io/l/UllasamUllasam100000 உல்லாசம் உல்லாசம் நாவல் இதுவரை நான் எழுதியவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். அநேகமாக அதில் உள்ள சம்பவங்களை யாராலும் நம்ப இயலாது. Anarchism & eroticism இரண்டும் கலந்த நாவல். இந்த இரண்டுமே நம் வாழ்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் எல்லாமே நாம் ஃப்ரெஞ்ச் ... Read more
Published on January 03, 2024 08:49
புத்தக விழா குறிப்புகள்
நாளை வியாழக்கிழமை (4.1.2024) புத்தக விழாவுக்கு மாலை நாலரை மணி அளவில் வருவேன். இன்னும் பெட்டியோ வரவில்லை. சனிக்கிழமை அன்று வரலாம் என்று நினைக்கிறேன். கெட்டி அட்டை என்பதால் தாமதமாகிறது. அந்நியனுடன் ஓர் உரையாடல் நூலும் வரும். சென்ற ஆண்டு எழுதிய அன்பு: ஒரு பின் நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு என்ற நாவலையும் அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கலகக்காரனின் உடல் நாடகத்தையும் நீங்கள் இதுவரை வாங்காதிருந்தால் வாங்கலாம்.
Published on January 03, 2024 07:39
January 2, 2024
புரிந்து கொள்ளுங்கள்…
நான் வீட்டில் இருக்கும்போது யாரிடமும் தொலைபேசியில் பேசுவதில்லை. பேசினால் வீட்டில் பெரிய ரணகளம் ஆகி விடுகிறது. இருந்தாலும் இந்தச் சூழலையும் மீறி மூன்று மாதத்துக்கு ஒருமுறை தவிர்க்க முடியாமல் பேசி பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறேன். அப்படி ஒரு சம்பவம் நேற்று நடந்தது. ஒரு நண்பரிடம் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு நான் அழைக்கப்படாதது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அழைக்கப்பட்டிருந்தால் ஔரங்ஸேப் நாவலுக்கு ஒரு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கும். தன் வேலை எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் அருகே வந்து நின்றுகொண்டு நான் பேசுவதையெல்லாம் ... Read more
Published on January 02, 2024 21:52
கேரள இலக்கிய விழா – 1
நண்பர்கள் பலரும் கோழிக்கோடு வருவதற்கு டிக்கட் போட்டு விட்டார்கள். என் அமர்வு 13ஆம் தேதி காலை பத்து மணிக்கும் அதே நாள் மதியம் இரண்டு மணிக்கும் உள்ளது. காலை அமர்வு ஔரங்ஸேப் பற்றி. மதிய அமர்வு மொழிபெயர்ப்பு பற்றியது. நான் கோழிக்கோட்டுக்கு பன்னிரண்டாம் தேதி இரவு எட்டு மணி அளவில் வந்து சேருவேன். பதினோராம் தேதியே சென்றிருக்க வேண்டும். தேதியில் கொஞ்சம் குழப்பி விட்டேன். எனவே இரண்டு இரவுகள்தான் அங்கே தங்குவேன். பன்னிரண்டு, பதின்மூன்று. பன்னிரண்டாம் தேதி ... Read more
Published on January 02, 2024 08:20
புத்தக விழா குறிப்புகள் – 1
நாளை (3.1.2024) புத்தக விழா தொடங்குகிறது. நான் நான்காம் தேதியிலிருந்து பதினோராம் தேதி வரை தினமும் மாலை ஐந்து மணிக்கு வந்து விடுவேன். அரங்கு மூடும் வரை இருப்பேன். ஆகவே, நான்காம் தேதி மாலை ஸீரோ டிகிரி அரங்கில் சந்திப்போம். பெட்டியோ நாவலும், அந்நியனுடன் ஓர் உரையாடல் நேர்காணலும் வெளிவருகிறது. இரண்டுமே முக்கியமான நூல்கள். வாருங்கள். ஸீரோ டிகிரி அரங்கு எண்: 598 C
Published on January 02, 2024 06:58
தேவதேவன் விழா
பெங்களூரில் ஐந்து தினங்கள் இருந்தேன். வழக்கத்தை விட அதிக கொண்டாட்டம். ஆனால் புத்தகத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி படு தோல்வி. ஒருவர்கூட கையெழுத்து வாங்கவில்லை. ப்ளாஸம்ஸ், ஆட்டா கலாட்டா, புக்வாம் ஆகிய மூன்று கடைகளில் தலா அரை மணி நேரம் அமர்ந்திருந்தேன். என்னை சந்திக்க கரூரிலிருந்தும் ஹொசூரிலிருந்தும் கோவையிலிருந்தும் நண்பர்களும் வாசகர்களும் வந்திருந்தார்களே ஒழிய மேற்படி புத்தகக்கடைகளில் யாருமே கையெழுத்து வாங்கவில்லை. அதில் ஆச்சரியமும் இல்லை. காரணம், நான் என்ன பெருமாள் முருகனா? சல்மான் ருஷ்டியா? அல்லது, லோக்கல் ... Read more
Published on January 02, 2024 06:27
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

