சாரு நிவேதிதா's Blog, page 80
February 1, 2024
பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது
“பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது” ராஜமுத்திரை மார்ச் 22, 2006 பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் ... Read more
Published on February 01, 2024 11:27
January 27, 2024
The Hindu Lit Fest விழாவில் பேசியது
The Hindu Lit Fest விழாவில் பேசியதன் சுருக்கம். இணைப்பு: https://www.thehindu.com/litfest/my-l...
Published on January 27, 2024 06:59
January 26, 2024
நாளை இரவு எட்டு மணி சந்திப்புக்கான லிங்க்
ஏற்கனவே எழுதியபடி அது ஸூம் சந்திப்பு அல்ல. கூகிள் மீட். அதற்கான இணைப்பு கீழே: To join the meeting on Google Meet, click this link: https://meet.google.com/grn-afri-dfr Or open Meet and enter this code: grn-afri-dfr
Published on January 26, 2024 23:19
the relevance of postmodern narrative
நாளை இரவு எட்டு மணிக்கு மேற்கண்ட தலைப்பில் ஸூம் மூலம் பேசுகிறேன். அது ஒரு மலையாள சேனல் என்பதால் ஆங்கிலத்தில் பேசும்படி சொன்னார்கள். அதனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கும்.
Published on January 26, 2024 23:02
ஜெய்ப்பூர் இலக்கிய விழா
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இரண்டு தினங்களுக்கு முன்புதான் அழைப்பு வந்தது. ஆச்சரியம்தான். விழா ஃபெப்ருவரி முதல் தேதி தொடங்குகிறது. அழைப்பு ஜனவரி 25 அன்று வந்தது. என்னுடைய அமர்வு ஃபெப்ருவரி மூன்றாம் தேதி உள்ளது. நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் என்னோடு உரையாடுபவர்கள் Yascha Mounk and Amia Srinivasan. இதில் அமியா சீனிவாசனின் the right to sex என்ற நூலைப் படித்திருக்கிறேன். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வர விரும்பும் ... Read more
Published on January 26, 2024 22:21
January 25, 2024
Conversations with Aurangzeb : ஒரு விமர்சனம்
Conversations with Aurangzeb நாவலுக்கு Youth ki Awaaz என்ற இணைய இதழில் அபினீத் நய்யார் எழுதிய விமர்சனம் கீழே: https://www.youthkiawaaz.com/2024/01/...
Published on January 25, 2024 23:28
அருஞ்சொல்லில் என் பேட்டி
இன்று ஹிந்து இலக்கிய விழாவில் பேசுகிறேன். மாலை ஐந்து மணி. ஹாரிங்டன் சாலையில் இருக்கும் லேடி ஆண்டாள் பள்ளி. ஹிந்து பவிலியன். நான் தான் ஔரங்ஸேப் நாவல் குறித்து சமஸ் எடுத்த பேட்டி அருஞ்சொல்லில் வெளியாகியுள்ளது. ஔரங்கஸேப்பும் எனக்கு ஒரு குருதான்: சாரு பேட்டி | அருஞ்சொல் (arunchol.com)
Published on January 25, 2024 17:52
January 24, 2024
ஹிந்து இலக்கிய விழா
26ஆம் தேதி லேடி ஆண்டாள் பள்ளியில் நடக்கும் ஹிந்து இலக்கிய விழாவில் மாலை ஐந்து மணிக்கு நந்தினி கிருஷ்ணனுடன் உரையாடுகிறேன். ஒரே நேரத்தில் இரண்டு அரங்குகளில் இரண்டு நிகழ்வுகள் இருக்கும். என் உரையாடல் ஹிந்து பெவிலியனில் நடக்கும். குழம்பி விட வேண்டாம். வருவதாக இருந்தால் பதிவு செய்யுங்கள். அரங்கம் ஐநூறு பேருக்கானது என்று கேள்விப்பட்டேன். வாருங்கள். பதிவு செய்வதற்கான படிவம் கீழே: https://www.thehindu.com/litfest/lfl-...
Published on January 24, 2024 06:52
January 23, 2024
அந்நியனுடன் ஓர் உரையாடல்
அருஞ்சொல் இணைய இதழில் வெளிவந்த என் நேர்காணல் இப்போது நூல் வடிவில் வந்துள்ளது. இது கிட்டத்தட்ட என்னுடைய சுயசரிதை என்று சொல்லலாம். அருஞ்சொல் ஆசிரியர் சமஸ் அந்த அளவுக்கு இந்த நேர்காணலை ஒரு சுயசரிதம் அளவுக்கு எடுத்துக்கொண்டு வந்தார். அருஞ்சொல்லில் வந்த நேர்காணலை இந்த நூலில் வெகுவாக செப்பனிட்டிருக்கிறேன். முடிந்தால் வாங்கிப் படியுங்கள். http://tinyurl.com/Anniyunadun-Oru-Ur...
Published on January 23, 2024 05:19
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

