சாரு நிவேதிதா's Blog, page 79
February 17, 2024
இனிமேல் மம்முட்டி படங்களுக்கு மட்டும் வசனம் எழுத முடிவெடுத்திருக்கிறேன்…
ஊரே கொண்டாடுகிறதே என்று பிரம்மயுகம் படத்துக்குப் போனேன். ஏற்கனவே இப்படி ஊரே கொண்டாடுகிறதே என்று மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தைப் பார்த்து பதினைந்து நிமிடத்திலேயே நிறுத்தி விட்டேன். அப்படி ஒரு துர்சம்பவம் நடந்தும் பிரம்மயுகத்துக்குப் போனது என்னுடைய முட்டாள்தனம்தான். அப்படியும் சொல்ல முடியாது. என் நெருங்கிய நண்பர் ட்டி.டி. ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருப்பதால் அது எப்படி இருக்கிறது என்று பார்ப்பதும் என் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் மட்டும் நிறைவேறி விட்டது. அடுத்து ... Read more
Published on February 17, 2024 06:22
ஹிண்டூ இலக்கிய விழாவில் பேசியது
ஹிண்டூ இலக்கிய விழாவில் பேசியது.
Published on February 17, 2024 00:53
February 16, 2024
My Life, My Text (Episode 01)
ஆங்கிலத்தில் நான் எழுதிய முதல் எழுத்து. இது கட்டுரை அல்ல. கதையும் அல்ல. சுயசரிதை. என் எழுத்தைத் தமிழில் பல காலமாகப் படித்து வந்திருக்கும் நண்பர்கள் இந்த முதல் அத்தியாயத்தைப் படித்ததும் என்னிடம் ஒரே விதமான கருத்தைக் கூறினார்கள். என் எழுத்தை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும்போது அது என்னதான் அட்டகாசமான மொழிபெயர்ப்பாக இருந்தாலும் அதில் நான் கம்மியாகவே தெரிகிறேனாம். ”சாருவின் அட்டகாசம், சாருவின் துள்ளல், சாருவின் கொண்டாட்டம், குசும்பு, நையாண்டி, எள்ளல் எல்லாமே அதில் காணாமல் போய் ... Read more
Published on February 16, 2024 04:25
February 15, 2024
கவிஞர் ஆசையின் உலக சாதனைக்கு வாழ்த்துக்கள்
கவிஞர் ஆசை கடந்த 105 மணி நேரத்தில் 174 கவிதைகளை எழுதி முடித்திருக்கிறார். சில கவிதைகளைப் படித்தேன். பரவசத்தின் உச்சம். களிவெறியின் உச்சம். பித்தநிலையின் உச்சம். அவர் திரும்பவும் லௌகீக உலகுக்கு வந்து விட பிரார்த்திக்கிறேன். இன்னொரு விஷயமும் உண்டு. இதையே வேறு ஏதாவது ஒரு மொழியில் யாராவது ஒரு கவிஞன் செய்திருந்தால் அது உலக அளவில் செய்தியாகி இருக்கும். தமிழர்கள் ஒரு ஃபிலிஸ்டைன் சமூகமாக வாழ்கிறார்கள். இங்குள்ள இளவட்டமோ நரகலை வண்டுகள் உருட்டிச் செல்லும் அல்லவா, ... Read more
Published on February 15, 2024 03:41
February 13, 2024
சலுகை விலையில் புத்தகங்கள்
ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் நாளையும் (14 ஃபெப்) நாளை மறுநாளும் முப்பது சதவிகிதத் தள்ளுபடியின் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். பயன்படுத்திக் கொள்ளுங்கள். விவரங்களுக்கு: Zero Degree Publishing – Book Publishing Company – Zero Degree Publishing 1
Published on February 13, 2024 08:07
ஒரு வரலாற்றுத் தருணம்
சென்னையில் நடந்த ஹிந்து இலக்கிய விழா, கோழிக்கோடு இலக்கிய விழா, ஜெய்ப்பூர் இலக்கிய விழா, திருவனந்தபுரத்தில் நடந்த மாத்ருபூமி இலக்கிய விழா நான்கும் முடிந்து விட்டது. நாளை சென்னை வந்து விடுவேன். விழாக்கள் பற்றி சில தினங்களில் எழுதுகிறேன். என்னைப் பற்றிய ஆவணப்படம் தெ அவ்ட்ஸைடர் முடிந்து ஒரு ஆண்டு ஆகிறது. ஆனாலும் அதில் இரண்டு விஷயங்களைச் சேர்க்க வேண்டும். ஒன்று, சீலே. இரண்டு, பாரிஸ். அதன் பொருட்டு வரும் மார்ச் இறுதியில் நானும், நண்பர்கள் குமரேசன், ... Read more
Published on February 13, 2024 03:15
February 9, 2024
Conversations With Aurangzeb – டெலிக்ராஃப் இதழில் விமர்சனம்
Conversations With Aurangzeb நாவலுக்கு டெலிக்ராஃப் இதழில் விமர்சனம் வெளியாகியுள்ளது. https://www.telegraphindia.com/cultur...
Published on February 09, 2024 05:15
February 7, 2024
The Asian Review-வில் நேர்காணல்
The Asian Review-வில் நேர்காணல். இணைப்பு கீழே. https://asian-reviews.com/2024/02/08/...
Published on February 07, 2024 22:28
February 6, 2024
Conversations with Aurangzeb – ஓரு விமர்சனம்
Jainand Gurjar அவரது தளத்தில் Conversations with Aurangzeb நாவலுக்கு எழுதிய விமர்சனம் கீழே:
Published on February 06, 2024 22:16
February 2, 2024
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

