சாரு நிவேதிதா's Blog, page 83
January 7, 2024
சங்கமும் கவிதையின் உன்மத்தமும்
மேற்கண்ட தலைப்பில் பேசியதை கொஞ்ச நாளில் விரிவாக ஒரு கட்டுரையாக எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் கட்டுரையாக எழுதினால் எந்த விவாதமும் வராது. பேசினால் வரும். சமீபத்தில் நான் பேசிய இரண்டு உரைகள் பற்றி ஒரு கடிதம்: வணக்கம் சாருபுத்தகத் திருவிழாவில் நீங்கள் இன்று பேசிய உரையைக் கேட்டேன். இனிமேல், “எனக்கு மேடையில் பேச வராது” என்று எங்கும் கூறாதீர்கள். உங்களின் வேறு சில உரைகளையும் கேட்டுள்ளேன். அவற்றுள் இன்றைய பேச்சு ஆகச்சிறந்ததாக இருந்தது. இன்றைய பேச்சில் ... Read more
Published on January 07, 2024 23:14
புத்தக விழா குறிப்புகள் – 4
நேற்று (8.1.2024) விசேஷமான நாள். இரண்டு காரணங்கள். ஒன்று, மாலாடு கிடைத்தது. சாப்பிட்டு பல காலம் இருக்கும். இரண்டாவது, வெளியே பகிர முடியாது. டைட்டானிக் படத்தில் கப்பலின் விளிம்பில் நிற்பார்கள் இல்லையா இருவர்? அது போன்றதொரு அனுபவம். மற்றபடியும் விசேஷமான நாள்தான். ஸீரோ டிகிரி அரங்கில் இருந்த நேரம் பூராவும் கையெழுத்துப் போட்டபடியே இருந்தேன். பலரும் கட்டுக்கட்டாக என் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து கையெழுத்து வாங்கினார்கள். ஒரு புத்தகத்தில் கையெழுத்து வாங்கியவர்கள் ஒன்றிரண்டு பேர்தான். பலரும் பெட்டியோவைத் ... Read more
Published on January 07, 2024 21:25
கேரள இலக்கிய விழா
ஜனவரி 11 முதல் 14 முடிய கோழிக்கோட்டில் நடக்க இருக்கும் கேரள இலக்கிய விழாவில் என்னுடைய செஷன் பற்றிய விவரம்: அமர்வு: ஒன்று காலை பத்து மணி Conversations with Aurangzeb Category: Conversation Speakers Charu Nivedita Shiyas Mohammed இரண்டாவது அமர்வு: காலை பதினோரு மணி. பங்கேற்பாளர்கள் சாரு நிவேதிதா ஜெயமோகன் வசுதேந்த்ரா ஜே. தேவிகா (ஒருங்கிணைப்பாளர்) பொருள்: Translating India: A South Indian Context
Published on January 07, 2024 01:33
உல்லாசம், உல்லாசம்… நாவலுக்கு முன்பதிவு செய்வோர் கவனத்துக்கு…
சில நண்பர்கள் சுயவிலாசம், பெயர், தொலைபேசி இலக்கம் போன்ற எந்த விவரமும் இல்லாமல் பணம் அனுப்புகிறார்கள். ஒரு நண்பர் அப்படித்தான் இருபதாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார். அதில் பதினைந்து ஆயிரத்தை பெட்டியோ என்.எஃப்.டி.க்கு வைத்துக்கொண்டு ஐந்தாயிரத்தை உல்லாசம் நாவலுக்கு வைக்கலாம் என்று பார்த்தால் அனுப்பிய நண்பரின் எந்த விவரமும் தெரியவில்லை. அல்லது, இருபத்தைந்தாயிரமாக இருந்தால் உல்லாசம் நாவலின் இருபத்தைந்தாயிரம் ரூபாய் விலையுள்ள பிரதியை அனுப்பலாம். ஆனால் அதற்குமே முகவரி தேவையாயிற்றே? இதை கொஞ்சம் கவனியுங்கள்…
Published on January 07, 2024 00:53
January 6, 2024
இன்றைய புத்தக விழா
வரும் பத்தாம் தேதி கோழிக்கோடு இலக்கிய விழா செல்கிறேன். பிறகு பதினான்காம் தேதிதான் திரும்புகிறேன். எனவே ஒன்பதாம் தேதி வரைதான் புத்தக விழாவுக்கு வர முடியும். அதன் பிறகு புத்தக விழா முடியும் வரை வர முடியும். புத்தகங்களில் கையெழுத்து வாங்க வேண்டுமெனில் ஸீரோ டிகிரி அரங்கில் என்னை சந்திக்கலாம். 598 C. அரங்கு எலிப்பொந்து மாதிரி இருக்கும். ஆயிரம் புத்தகங்களைப் பதிப்பித்த பதிப்பகத்துக்கு சிங்கிள் ஸ்டால். புத்தக விழா நிர்வாகிகளை கடவுள் பார்த்துக் கொள்வார். வேறு ... Read more
Published on January 06, 2024 23:26
புத்தக விழா குறிப்புகள் – 3
இன்று ஃபேஸ்புக்கைத் திறந்தால்தான் தெரிகிறது, நேற்று எப்பேர்ப்பட்ட துரோகச் செயல் நடந்திருக்கிறது என்று. ராம்ஜி எனக்காக சுஸ்வாதிலிருந்து முறுக்கு, மைசூர் பாகு, மாலாடு என்ற தெய்வீகப் பண்டங்களை வாங்கி, புத்தக விழாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். அந்த விஷயமே இன்று ஃபேஸ்புக்கில் காயத்ரியின் பதிவைப் பார்த்தபோதுதான் தெரிந்தது. நான் கொஞ்சம் தாமதாகப் போனேன். அங்கே கைமுறுக்கு இருந்தது. மைசூர் பாகு, மாலாடு விஷயங்கள் அடியேன் அறியேன். முறுக்கு மட்டும் சாப்பிட்டேன். மற்ற ரெண்டும் முன்பே முடிந்து விட்டிருக்கிறது போல. ... Read more
Published on January 06, 2024 21:16
ஹார்ட்டின்களின் சூதாட்டம் – சாரு உரை
நேசமித்ரனின் ஹார்ட்டின்களின் சூதாட்டம் மற்றும் டால்பின்களின் உரையாடல் நூல்கள் குறித்த சாருவின் உரை. நன்றி, shruti.tv
Published on January 06, 2024 04:15
January 5, 2024
கேரள இலக்கிய விழா : ஒரு சிறிய மாற்றம்
பன்னிரண்டாம் தேதி கோழிக்கோடு வந்து பதின்மூன்றாம் தேதி இரண்டு அமர்வுகளில் கலந்து கொண்டு பதினான்காம் தேதி மாலை சென்னை திரும்பும் திட்டத்தில் சிறிய மாற்றம். பத்தாம் தேதியே கோழிக்கோடு கிளம்புகிறேன். பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று ஆகிய நான்கு இரவுகள் கோழிக்கோட்டில் இருப்பேன். பதினான்கு மாலை சென்னை கிளம்புகிறேன். கோழிக்கோட்டில் மலபார் கேட்டில் உள்ள லெமன் ட்ரீ ஓட்டலில் தங்கியிருப்பேன். இது பத்து, பதினொன்று இரண்டு தினங்கள் மட்டுமே. பன்னிரண்டாம் தேதியிலிருந்து கேரள இலக்கிய விழாவினர் தரும் ... Read more
Published on January 05, 2024 00:40
கவிதையும் உன்மத்தமும்: நேசமித்ரனின் கவிதைகளை முன்வைத்து…
இதற்கு முன்பு வெளியிட்ட அழைப்பிதழை ரத்து செய்து விட்டேன். மனுஷ்ய புத்திரனும் பேசுகிறார். புதிய அழைப்பிதழைப் பாருங்கள். நாளை காலை பதினோரு மணிக்கு புத்தக விழா சிற்றரங்குக்கு வந்து விடுங்கள். நாளை என்னுடைய பேச்சில் மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பை சொல்லப் போகிறேன். அதன் காரணமாக என் உரை கவிதை குறித்த என் உரைகளில் மிக முக்கியமானதாக இருக்கும். அந்தக் கண்டுபிடிப்பு விவாதத்துக்குரியதாகவும், ஏன், சர்ச்சைக்குரியதாகக்கூட இருக்கலாம். ஆனால் என்னுடைய கண்டுபிடிப்பு அது. பழைய ஆட்களுக்கு அது ... Read more
Published on January 05, 2024 00:14
January 4, 2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு… (இரண்டாவது கடிதம்)
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு… அடியேனின் இரண்டாவது கடிதம். தங்களுடைய அதீதமான வேலை நெருக்கடிகளுக்கு இடையே இரண்டாவது கடிதமும் எழுதித் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். இந்தக் கடிதத்தை நான் எழுதினாலும் பல நூறு பதிப்பகங்களின் குமுறலையே நான் பிரதிபலிக்கிறேன். காரணம், எப்போதுமே நான் ஒருவனே பூனைக்கு மணி கட்டுபவனாக இருந்து வருகிறேன். சென்னை புத்தக விழாவுக்காக அரசு புத்தக விழா நிர்வாகத்துக்கு (பப்பாஸி) ஆண்டு தோறும் எழுபத்தைந்து லட்சம் ரூபாய் தருகிறது. இந்தப் பணத்துக்கு என்ன செலவு ... Read more
Published on January 04, 2024 21:17
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

