சாரு நிவேதிதா's Blog, page 86

December 23, 2023

எழுத்தாளனைக் கொண்டாடுதல் (3)

சென்ற ஆண்டு சென்னை அண்ணா நூலகத்தில் என் உரையைக் கேட்பதற்காக சிவசங்கர் என்ற மாணவர் மதுரையிலிருந்து கிளம்பி வந்தார். இப்போது அவரிடமுருந்து இப்படி ஒரு கடிதம்: ஜனவரி மாதத்தில் கேரளாவில் நடைபெற இருக்கும் ‘இலக்கியத் திருவிழாவில்’ பங்கேற்பதற்கு சிறு சேமிப்பையும், சின்னதான கடனும் வாங்கி பதிவு செய்துகொண்டேன். உங்களுக்கு நேரம் கிடைத்தால் நாம் அங்கு சந்திப்போம், சாரு. ஜனவரி 11 முதல் 14 வரை கோழிக்கோட்டில் நடக்க இருக்கும் கேரள இலக்கிய விழாவில் நான் பதின்மூன்றாம் தேதி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2023 21:56

நீரழிவு நோய் பற்றி…

நீரழிவு நோய் குறித்தும் அதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை பற்றியும் இன்று என் நண்பர் டாக்டர் பாஸ்கரன் ஹிந்து தமிழில் எழுதியிருக்கிறார். படித்துப் பயனடையுங்கள்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2023 04:35

நேற்று நடந்த ஒரு அதிசயம்…

நேற்று நடந்த அதிசயத்துக்குக் காரணம் வினித் தான்.  அவர் இல்லாதிருந்தால் அந்த அதிசயம் என் வாழ்வில் நடந்திராது.  விரிவாகச் சொல்ல வேண்டும்.  ஏற்கனவே நான் சென்னையில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு வி.ஐ.பி. பாஸ் கிடைத்தும் ஒரே ஒரு படத்துக்குத்தான் போக முடிந்தது, புத்தகப் பிழை திருத்தம் வேலையின் காரணமாக அதற்கு மேல் திரைப்பட விழாவுக்குப் போக முடியாத வருத்த்த்தில் இருந்தேன்.  அந்த நேரத்தில் மியூசிக் அகாடமியில் நடக்கும் அபிஷேக் ரகுராம் கச்சேரிக்கு வருகிறீர்களா என்று கேட்டார் வினித்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2023 04:25

எழுத்தாளனைக் கொண்டாடுதல் (2)

காயத்ரி சொன்ன இன்னொரு கருத்தையும் மறுக்க வேண்டியிருக்கிறது. தமிழில் ஒன்பது கோடி மக்கள் தொகைக்கு ஆயிரம் பேர் தீவிர இலக்கியம் படிக்கிறார்கள் என்றால், இதே விகிதாச்சாரம்தான் ஓர்ஹான் பாமுக்குக்கும் இருக்கும் என்பது காயத்ரி சொன்னது. இதை வேறு பலரும் சொல்லியிருக்கிறார்கள். தருண் தேஜ்பாலும் ஒருமுறை இதையே சொன்னார். உலக ஜனத்தொகை 800 கோடியில் நூறு கோடி ஆங்கிலம் பேசுகிறார்கள். அதில் ஒரு லட்சம் பேருக்கு ஓர்ஹான் பாமுக்கைத் தெரியுமா? ஆச்சரியகரமாக கணக்கு ஒத்துப் போகிறது. எந்நூறு கோடியில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2023 02:36

எழுத்தாளனைக் கொண்டாடுதல்

தமிழ்ச் சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடவில்லை என்ற கருத்தை வைத்து சுமாராக ஐநூறு புலம்பல் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.  அந்தப் புலம்பல் கட்டுரைகளாலேயே நண்பர்களிடமிருந்து நிறைய திட்டும் வாங்கியிருக்கிறேன்.  ஒரு நண்பர் பிரிந்தே போய்விட்டார்.  இனிமேல் அப்படி எழுத மாட்டேன்.  காலம் மாறி விட்டது.  எல்லா எழுத்தாளர்களையும் அந்தந்த எழுத்தாளர்களின் வாசகர்கள் பிரமாதமாகக் கொண்டாடுகிறார்கள்.  சமீபத்தில் எனக்கு ரகுபதி என்ற வாசகர் அறிமுகம் ஆனார்.  இருபது ஆண்டுகளாக தீவிர இலக்கிய வாசகர்.  அவர் மனைவி தேவிகாவுக்கு இப்போதுதான் என் எழுத்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2023 02:10

December 21, 2023

முதல்முறையாக…

முதல்முறையாகக் குழம்புகிறேன். நான்கு பேர் – சீனி, வினித், மற்றும் இரண்டு நண்பர்கள் – உல்லாசம், உல்லாசம்… நாவல் தேறாது என்று சொல்லிவிட்டார்கள். அதாவது, ஒரு பிரமாதமான கதைக்களன் கொண்ட நாவலை நான் பலஹீனமாக எழுதி வீணடித்து விட்டேன். சம்பவங்கள் யாரையும் சரியானபடி போய்ச் சேரவில்லை. சம்பவங்கள் வெறும் சம்பவங்களாகவே இருக்கின்றன. ஆனால், நாவலைப் படித்த வேறு சில நண்பர்கள் இது பெட்டியோவைவிட கனமான நாவல் என்கிறார்கள். அவர்கள் உலக இலக்கியம் பயின்றவர்கள். ஒருவர் எனக்குப் பிடித்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2023 06:41

பெட்டியோ – என்.எஃப்.டி. & அச்சுப் புத்தகம்: ஒரு விளக்கம்

பெட்டியோ நாவல் அச்சுப் புத்தகமாக வராது, என்.எஃப்.டி.யில் மட்டுமே வெளிவரும் என்று முன்பு சொல்லியிருந்தேன். இப்போது அச்சுப் புத்தகமாக வருகிறது. இது என்னுடைய நம்பகத்தன்மையைக் கெடுக்கும் என்று காயத்ரியும் சீனியும் தெரிவித்தார்கள். அச்சுப் புத்தகமாக வர வேண்டாம் என்பது இருவரின் கருத்து. எப்போதும் சீனி சொல்வதையே கேட்கும் நான் சில சமயங்களில் அவர் பேச்சையும் மற்றும் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். அம்மாதிரி ஒரு நிலை இப்போது. நான் என்.எஃப்.டி.யில் நூறு பேர் வாங்குவார்கள் என்று நினைத்தேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2023 06:19

December 20, 2023

படித்ததில் பிடித்தது

ஆசை (writerasai.blogspot.com)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2023 07:51

ஆறு ஆண்டுகளுக்கு முன்…

2017இல் என் மகன் கார்த்திக்குக்குத் திருமணம் நடந்தது. திருமணம் மும்பையில். வரவேற்பு சென்னையில். திருமணத்துக்குக் காலையில் போய் விட்டு இரவு திரும்பி விட்டேன். வீட்டில் நாய்கள் தனியாக இருந்தன. சென்னை வரவேற்புக்கு எழுத்தாளர் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். அப்போது எடுத்த புகைப்படம். புகைப்படம்: பிரபு காளிதாஸ் ஜெயமோகனிடம் இப்போது இரண்டு முக்கிய மாற்றங்கள். மீசையை எடுத்து விட்டார். வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்த கட்டம் போட்ட சட்டையை அதிகம் அணிவதில்லை.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2023 07:11

December 19, 2023

மூன்று சந்திப்புகள்

1.சிறுமியாக இருக்கும்போது இந்தப் பெண் பாடிக் கேட்டிருக்கிறேன். உலகப் புகழ் பெறுவாள் என்று யூகித்தேன். பத்தாண்டுகள் கடந்து விட்டன. இப்போது பிரபலமான பாடகி. க்ருதி விட்டல். நாளை காலை ஆறு மணிக்கு கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் தெற்கு மாடவீதியில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவிலில் பாடுகிறார் க்ருதி விட்டல். நான் அங்கே 5.55க்கு இருப்பேன். நிகழ்ச்சி முடிந்து தெற்கு மாடவீதியின் தொடக்கத்தில் உள்ள (தெப்பக்குளத்துக்கு நேர் எதிரில்) சங்கீதா உணவகத்தில் காலை உணவை முடிக்கலாம். மைலாப்பூரிலேயே நல்ல இட்லி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2023 21:46

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.