பெட்டியோ நாவல் அச்சுப் புத்தகமாக வராது, என்.எஃப்.டி.யில் மட்டுமே வெளிவரும் என்று முன்பு சொல்லியிருந்தேன். இப்போது அச்சுப் புத்தகமாக வருகிறது. இது என்னுடைய நம்பகத்தன்மையைக் கெடுக்கும் என்று காயத்ரியும் சீனியும் தெரிவித்தார்கள். அச்சுப் புத்தகமாக வர வேண்டாம் என்பது இருவரின் கருத்து. எப்போதும் சீனி சொல்வதையே கேட்கும் நான் சில சமயங்களில் அவர் பேச்சையும் மற்றும் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். அம்மாதிரி ஒரு நிலை இப்போது. நான் என்.எஃப்.டி.யில் நூறு பேர் வாங்குவார்கள் என்று நினைத்தேன். ...
Read more
Published on December 21, 2023 06:19