சாரு நிவேதிதா's Blog, page 82
January 17, 2024
இன்றைய புத்தக விழா
இன்று (18.1.2024) புத்தக விழாவுக்கு மாலை நான்கு மணிக்கு வருவேன். எட்டரை வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். ஸீரோ டிகிரி அரங்கை எளிதில் கண்டுபிடித்து விடலாம். புத்தக விழாவிலேயே எலிப் பொந்து மாதிரி ஒரு அரங்கு இருக்கும். அதுதான் ஸீரோ டிகிரி அரங்கு. இன்னொரு அடையாளம், அரங்கு எதிரிலேயே கக்கூஸ் இருக்கும். அரங்கு எண் 598 C.
Published on January 17, 2024 21:45
மொழிபெயர்ப்பின் சவால்கள் – ஒரு நேர்காணல்
மொழிபெயர்ப்பின் சவால்கள் – ஒரு நேர்காணல்
Published on January 17, 2024 10:22
January 16, 2024
இன்றைய (17.1.2024) புத்தக விழா
இன்றும் நேற்று போலவே நாலரை மணிக்கு வருவேன். ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். stall: 598 C
Published on January 16, 2024 22:37
புத்தக விழா குறிப்புகள் – 6
நேற்றைய மாலை இனிதே கழிந்தது. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரமாதித்யனை சந்தித்தேன். கலி முற்றி விட்டதால் நானும் கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன் என்று சொல்லி என் கவிதைத் தொகுதி ஸ்மாஷன் தாரா நூலையும் பெட்டியோவையும் அவரிடம் அளித்தேன். (ஸ்மாஷன் தாரா என்பது தவறு; ஸ்மஷான் தாரா என்றே வந்திருக்க வேண்டும். அடுத்தடுத்த பதிப்புகளில் (!) அந்தத் தவறை நீக்க வேண்டும்.) இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே மாதிரி இருக்கிறார். ஒரு மாற்றமும் ... Read more
Published on January 16, 2024 22:12
புத்தக விழா குறிப்புகள் – 5
பொங்கல் அன்று (15.1.2024) நாலரை மணி அளவில் ஸீரோ டிகிரி அரங்குக்குப் போனேன். அமைதியாக இருந்தது. காயத்ரி இல்லாததே காரணம் என்று வெளிப்படையாகத் தெரிந்தது. ராம்ஜி சிந்தனையில் இருந்தார். வித்யா தீவிர சிந்தனையில் இருந்தார். பெங்களூரிலிருந்து என் வாசகியும் தோழியுமான ஸ்ரீயும் அவள் கணவர் சதீஷும் வந்திருந்தார்கள். கொஞ்ச நேரம் பொறுத்து ”காயத்ரி இல்லாமல் அரங்கே வெறிச்சோடின மாதிரி தெரிகிறது, அவர் இருந்திருந்தால் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும், செம பாஸிடிவ் எனர்ஜியாக இருக்கும், அவர் இல்லாமல் ... Read more
Published on January 16, 2024 20:31
January 15, 2024
இன்றைய (16.1.2024) புத்தக விழா
இன்று மாலை ஐந்து மணியிலிருந்து புத்தக விழா முடியும் வரை ஸீரோ டிகிரி பதிப்பக அரங்கில் இருப்பேன். Stall No.598 C
Published on January 15, 2024 18:58
குருவும் சிஷ்யர்களும்
எனக்கு பல நண்பர்கள் பொங்கல் வாழ்த்து அனுப்பினார்கள். பதில் அனுப்ப நேரம் இல்லை. உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். எனக்கு வரும் பொங்கல் வாழ்த்தை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை. ஏனென்றால், நான் பல காலமாகவே ஒரு ஞானியின் மனநிலையில் வாழ்ந்து வருவதாக நினைக்கிறேன். குகையில் தவம் செய்யும் ரிஷி என்று வைத்துக் கொள்ளுங்கள். என் அறைதான் என் குகை. என் அறை ஒரு பங்க்கர். லௌகீக வாழ்வின் எந்த ஒரு கொண்டாட்டமும் விழாவும் அல்லது ... Read more
Published on January 15, 2024 04:23
January 10, 2024
நிரூபணம்
என் எழுத்தோடு பரிச்சயம் கொண்டவர்களுக்குத் தெரியும், நான் எழுத ஆரம்பித்த இருபத்தைந்தாம் வயதிலிருந்து ஐம்பதாவது வயது வரை என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பதிப்பகமும் என் நூல்களை வெளியிடத் தயாராக இல்லை. மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட கொள்கை அடிப்படையில் வெளியிட மறுத்து விட்டார்கள். என்ன கொள்கை? அவர்களைப் பொருத்தவரை நான் எழுதுவது குப்பை. ஆனால் அப்படி மறுக்கும் அவர்களே நட்பு கருதி அதை அச்சடித்துக் கொடுத்து உதவினார்கள். ... Read more
Published on January 10, 2024 22:42
January 8, 2024
இன்றைய புத்தக விழா
இன்று மாலை ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கு வருவேன். ஸீரோ டிகிரிக்குக் கொடுக்கப்பட்டுள்ள எலிப்பொந்தில் நாலரையிலிருந்து ஒன்பது மணி வரை இருப்பேன். இதற்குப் பிறகு நான் பதினைந்தாம் தேதியிலிருந்துதான் வருவேன். நாளை கோழிக்கோடு இலக்கிய விழா செல்கிறேன். எஸ்கிலோ பதிப்பக அரங்கில் என் தங்கை மகள் நிவேதிதாவின் இரண்டு ஆங்கில நாவல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டுமே எஸ்கிலோ பதிப்பக வெளியீடுகள். நான் இன்னும் படிக்கவில்லை. எஸ்கிலோ அரங்கு எண் 492. அவளும் இப்படி எழுத்தாளராக ஆவாள் என்று தெரிந்திருந்தால் ... Read more
Published on January 08, 2024 23:31
SHAME!
பபாஸி பற்றி நான் தமிழக முதல்வருக்கு எழுதிய இரண்டு கடிதங்களையும் வாசகர்கள் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போது மழை. ஸீரோ டிகிரி அரங்கிலும் யாவரும் அரங்கிலும் மற்றும் பல அரங்குகளிலும் மழையால் புத்தகங்கள் நனைந்து பல லட்சம் நஷ்டம். இத்தனைக்கும் பெரிய மழையெல்லாம் இல்லை. பபாஸியின் அஜாக்கிரதை மட்டுமே காரணம். இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக நான் இந்த ஆண்டு எனக்கு வரக் கூடிய ராயல்டி பணத்தை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். பின்வரும் பதிவு ... Read more
Published on January 08, 2024 20:37
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

