சாரு நிவேதிதா's Blog, page 81

January 20, 2024

குற்றமும் தண்டனையும் (ஒரு நீதிக்கதை)

தஞ்சாவூர் கவிராயர் எழுதிய ஒரு கதையை என்னால் எந்த ஜென்மத்திலும் மறக்க இயலாது.  அவர் வீட்டில் ஒரு கல்யாணமுருங்கை மரம்.  அந்த மரத்தின் இலைகள் தன் வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் காரில் விழுந்து பெரிய இம்சையாக இருக்கிறது, அதை வெட்டுங்கள் என்று அண்டை வீட்டுக்காரர் இம்சை தருகிறார்.  ஒரு கட்டத்தில் அண்டை வீட்டுக்காரரின் இம்சை தாங்க முடியாமல் போகவே தஞ்சாவூர் கவிராயர் அரிவாளை எடுத்துக்கொண்டு போய் தான் பிரியம் பிரியமாக வளர்த்த கல்யாணமுருங்கை மரத்தை வெட்ட அரிவாளை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2024 21:56

புத்தக விழா கடைசி நாள்

இன்றும் நேற்று போலவே மாலை நான்கு மணிக்கு புத்தக விழாவுக்கு வருவேன். நான்கு மணியிலிருந்து ஒன்பது மணி வரை ஸீரோ டிகிரி அரங்கில் (598 C) இருப்பேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2024 20:36

ஹிந்துவில் நேர்காணல்

தெ ஹிந்து தினசரியில் என்னையும் நந்தினியையும் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். வரும் 26, 27 தேதிகளில் நடக்கும் ஹிந்து இலக்கிய விழாவின் ஒரு பகுதியாக இந்தப் பேட்டி வெளிவந்தது. https://www.thehindu.com/litfest/the-...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2024 19:53

புத்தக விழா குறிப்புகள் – 8 (ஒரு சின்ன கணக்கு)

ஒரு கடிதம் வந்தது. ”600 ரூ. விலையுள்ள புத்தகத்துக்கு ஒரு வாசகர் உங்களுக்கு 5000 ரூ. கொடுத்தால் அதை வாங்கிக் பாக்கெட்டில் போட்டுக் கொள்வதா? நியாயமா?” ஒரு சின்ன கணக்கு போடுங்கள். 600 ரூ. புத்தகத்துக்கு எனக்கு ராயல்டி 60 ரூ. 500 புத்தகம் விற்றால் 30000 ரூ. ராயல்டி. ஆனால் பெட்டியோ என்ற அந்த நாவலை எழுத எனக்கு ஆன செலவு மூணு லட்சம் ரூபாய். அடுத்த இலங்கைப் பயணத்துக்கு ஐந்து லட்சம் ஆகியிருக்கும். கேகே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2024 01:24

January 19, 2024

புத்தக விழா குறிப்புகள் – 7

நேற்று (19.1.2024) அவ்வளவாக கூட்டம் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமனே அமர்ந்திருந்தேன். பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லை. வித்யா, ராம்ஜி, காயத்ரி மூவரும் இட்லி வடை காஃபி சாப்பிட வெளியே சென்றிருந்தார்கள். அவர்கள் சென்ற சமயத்தில் நான் வேப் அடிக்க அரங்குக்கு அருகில் இருக்கும் கழிப்பறை பக்கம் சென்றிருந்தேன். வந்து பார்த்தால் யாரும் இல்லை. அரை மணி நேரம் சென்றது. பாடி ஷேமிங் செய்வதற்குத் தகுந்தாற்போல் பல விஷயங்கள் என்னிடம் இருந்தன. அதையாவது செய்து உற்சாகப்படுத்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2024 22:44

புத்தக விழா – கடைசி இரண்டு நாட்கள்

இன்றும் (20.1.2024) நாளையும் கடைசி இரண்டு நாட்கள். இன்று மாலை நான்கு மணியிலிருந்து எட்டரை வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். அரங்கு எண் 598 C.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2024 22:09

உன்மத்த ஸ்பரிசம் – ஸ்ரீ

உன்மத்த ஸ்பரிசம் – ஸ்ரீ முடிவற்ற நீள் பாதையில் போவதும் வருவதுமாக இருந்திருக்கிறேன் காலத்தைத் தொலைத்தபடி சினந்து சுயமிழந்த சந்தர்ப்பங்களில் இசையெனும் கருங்கடலின் ஓங்காரத்தில் பித்துப் பிடித்து மூழ்கித் தொலைந்திருந்த வேளைகளில் கடந்த நூற்றுப் பதினாறு நிமிடங்களாக இசையில் தொலைந்து கொண்டிருக்கவும் இல்லை சீற்றத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கவும் இல்லை உன்னோடு பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவுடன் கால்கள் நிற்கவில்லை வலியில் கெஞ்சவும் இல்லை நிற்பதற்கான எந்தவொரு சமிக்ஞையும் இல்லை அம்மீச்சிறு உன்மத்த கணத்தை அடைவதற்காக தன்வயமற்றுப் போயிருந்திருக்கிறேன் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2024 03:06

January 18, 2024

ஹிந்து இலக்கிய விழா – பதிவு செய்தல்

நேற்று ஹிந்து இலக்கிய விழாவுக்கு என் வாசகர்கள் வர வேண்டிய அவசியம் பற்றி எழுதியிருந்தேன். கோழிக்கோட்டில் கேரள இலக்கிய விழாவில் என்னுடைய அமர்வு முடிந்ததும் கையெழுத்துப் போடும் நிகழ்வு ஆரம்பமாகியது. ஒவ்வொரு எழுத்தாளர் பேசி முடித்ததும் அந்த சடங்கு நடக்கும். எனக்குப் பக்கத்தில் வில்லியம் டால்ரிம்பிள். அவருக்கு முன்னே நூறு பேர் கொண்ட ஒரு நீண்ட வரிசை. எனக்கு முன்னால் ஒரே ஒரு பெண். அதுவும் கோழிக்கோட்டில் வசிக்கும் என் தங்கை மகள் நிவேதிதா. நான் கேரளத்தில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2024 20:35

26 ஜனவரி: ஹிந்து இலக்கிய விழா

இன்று ஒரு இளம் நண்பனைச் சந்தித்தேன். மருத்துவ மாணவன். 26ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் ஹிந்து இலக்கிய விழாவில் நான் பேசுகிறேன், வந்து விடுங்கள் என்றேன். அப்படியா, எனக்குத் தெரியாதே என்றார். அப்படியானால் நீங்கள் என் இணையதளத்தைப் படிப்பதில்லையா என்று கேட்டேன். இல்லை என்றார். காரணத்தைப் பிறகு சொல்கிறேன் என்றார். எனக்குக் காரணம் தேவையில்லை. என் இணையதளத்தை தினமும் படிக்க ஐந்து நிமிடம் ஆகும். நான் இலவசமாக இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன். மாதம் பத்து பேர்தான் சந்தா ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2024 09:19

பயன் பெறுங்கள்…

இன்று புத்தக விழாவின் மூத்திர சந்தில் அமைந்துள்ள ஸீரோ டிகிரி அரங்கில் அமர்ந்திருந்தபோது என் சக எழுத்தாளர் ஒருவர் ஒரு நண்பரிடம் தனக்கு முப்பது ஆண்டுகளாக சர்க்கரை வியாதி இருப்பதாகவும், அதனோடுதான் தான் வாழ்ந்து வருவதாகவும் சொன்னபோது மிகவும் வருத்தம் அடைந்தேன். நான் இங்கே என்னுடைய இந்த இணையதளத்தில் சர்க்கரை வியாதி உள்ள எல்லோரையும் கூவிக் கூவி அழைத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பர் சித்த மருத்துவர் பாஸ்கரன் ஒவ்வொரு சர்க்கரை வியாதிக்காரரையும் சவால்விட்டு குணப்படுத்திக்கொண்டிருக்கிறார். சர்க்கரை வியாதி முற்றி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2024 08:00

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.