சாரு நிவேதிதா's Blog, page 77
March 6, 2024
தமிழ்ச் சமூகம் என்ற simulacrum
Simulacrum என்ற கோட்பாடு ஃப்ரெஞ்ச் பின்நவீனத்துவத் தத்துவவாதியான Jean Baudrillard (உச்சரிப்பு: ஜான் பொத்ரியா) மூலமாகப் பிரபலம் ஆயிற்று. சிருஷ்டிகரத்துவத்தைப் போலவே எனக்குத் தத்துவமும் முக்கியம். நீட்ஷே, ஜார்ஜ் பத்தாய், ரொலாந் பார்த், மிஷல் ஃபூக்கோ என்ற தத்துவவாதிகள் இல்லையேல் என் எழுத்து இல்லை. நானும் சுந்தர ராமசாமியின் எழுத்தில் மயங்கிக் கிடந்திருப்பேன். தத்துவம் என்பது எனக்கு உடலும் உயிரும் போல. சிருஷ்டி பாதி, தத்துவம் பாதி. இந்தப் பிரபஞ்சத்தையும் இதில் வாழும் உயிர்களின் ஓட்டத்தையும் புரிந்து ... Read more
Published on March 06, 2024 21:30
எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்? – 2
இதே தலைப்பில் உள்ள முந்தைய கட்டுரையைப் படித்து விட்டு இதைத் தொடரவும். முந்தைய கட்டுரை: எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்? – Charu Nivedita (charuonline.com) அந்தக் கட்டுரையில் சொல்ல மறந்த இன்னொரு விஷயம் இது: சென்ற வாரமோ என்னவோ நான் சீலே செல்வது பற்றியும், அதற்குத் தேவையான பணம் பற்றியும் எழுதியிருந்தேன். ஒருவர் கூட – ஆம், ஒருவர் கூட – ஒரு ரூபாய் கூட அனுப்பவில்லை. ஆனால் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சீலே ... Read more
Published on March 06, 2024 01:59
March 5, 2024
எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்?
இது ஒரு நீண்ட கதை. கதை என்ன கதை? என் வாழ்க்கையில் நடப்பதுதான் கதை. பொறுமையாகப் படியுங்கள். இதில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டதுதான். ஆனாலும் இங்கே அது எல்லாமே ஒரு தொகுப்பாகக் கோர்க்கப்பட்டிருக்கும். இதில் இப்போது சொல்லப் போகும் சம்பவங்கள் இனி வரப் போகும் கதையிலோ நாவலிலோ வந்தால், இது சாரு ஏற்கனவே அவர் ப்ளாகில் எழுதியதுதானே என்று சொல்லாதீர்கள். ப்ளாகில் நான்தானே எழுதுகிறேன், என் ஆவியா எழுதுகிறது? அதனால் ப்ளாகில் எழுதியதுதான் புத்தகமாகவும் ... Read more
Published on March 05, 2024 23:22
March 4, 2024
என்னையும் என் எழுத்தையும் புரிந்து கொள்ள ஒரு எளிய வழி…
சமீபத்தில் என் நண்பர் ஒரு புத்தகத்தைப் படிக்கச் சொன்னார். Loving and Hating Charles Bhukowski: A Memoir. எழுதியவர் ப்யூகோவ்ஸ்கியின் காதலி லிண்டா கிங். இந்தப் புத்தகத்தை நான் படிப்பதை விட என் வாசகர்களும் என் புதிய வாசகர்களும் படிப்பதுதான் சிறந்தது. ஏனென்றால், இந்தப் புத்தகம் மாதிரிதானே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்? இந்தப் புத்தகத்தில் ப்யூக் லிண்டாவுக்கு எழுதிய ஒரு கவிதை உள்ளது. அந்தக் கவிதையை உங்களுக்குத் தருகிறேன். ... Read more
Published on March 04, 2024 22:08
ஒளரங்ஸேப்பும் யூட்யூபும் – கண்காணிப்பின் அரசியல்
The Federal இதழில் சாருவின் கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். https://thefederal.com/category/featu...
Published on March 04, 2024 00:41
March 2, 2024
தில்லி பல்கலைக்கழகத்தின் கார்வா(ங்) குழுவுடன் ஒரு உரையாடல்
தில்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை மாணவர்கள் கார்வா(ங்) என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் பல சிந்தனையாளர்களுடன், எழுத்தாளர்களுடன், சினிமாத்துறையில் சாதனை புரிந்தவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அந்த அமைப்பில் உரையாடியவர்கள் ஷபானா ஆஸ்மி, சஷி தாரூர். கார்வா(ங்) அமைப்பின் முக்கியஸ்தர் ஈஷான் ஷர்மா என்ற வரலாற்றுத்துறை மாணவர். அவரும் நானும் என்னுடைய நாவல் Conversations with Aurangzeb: A Novel பற்றி போன வாரம் ஸூம் மூலம் ஒரு மணி நேரம் உரையாடினோம். அதற்கான இணைப்பை கீழே ... Read more
Published on March 02, 2024 21:05
My Life My Text – பாகம் 2
The Asian Review இதழில் My Life My Text தொடரின் இரண்டாம் கட்டுரை வெளியாகியுள்ளது. https://asian-reviews.com/2024/03/02/...
Published on March 02, 2024 20:18
March 1, 2024
கூல் சுரேஷும் மைக்கேல் ஜாக்ஸனும்…
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் உள்ள இண்டியா இண்டர்நேஷனல் செண்டர். அல்மோஸ்ட் ஐலண்ட் இலக்கிய நிறுவனம் நடத்தும் கருத்தரங்கு. வங்கக் கவிஞர் ஜாய் கோஸ்வாமி வங்காள மொழியில் பேசுகிறார். அவர் பேசப் பேச அவர் பக்கத்தில் இருக்கும் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். மொழிபெயர்த்தவர் மேற்கு வங்கத்தில் கலெக்டராகப் பணி புரிகிறார் என்று பிறகு தெரிந்தது. அந்த மொழிபெயர்ப்பாளர் எதையேனும் விட்டுவிட்டால் அதை எடுத்துக் கொடுக்க ஜாய் கோஸ்வாமி அருகிலேயே இன்னொருவர் அமர்ந்திருக்கிறார். ஜாயுடன் இன்னும் இருவர் வந்திருக்கிறார்கள். ... Read more
Published on March 01, 2024 02:23
February 29, 2024
அற்புதம்
அஷோக் கோபால் தெ ப்ரிண்ட் பத்திரிகையில் என்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அரூ பத்திரிகையில் அராத்து என்னைப் பற்றி எழுதியிருந்ததுதான் இதுவரை என்னைப் பற்றி வந்த கட்டுரைகளில் ஆகச் சிறந்தது என்று பல நண்பர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். என் கருத்தும் அதுவே. ஆனால் என்னை கடந்த ஒரு மாதமாக மட்டுமே அறிந்த ஒரு ஆங்கில எழுத்தாளர் என்னைப் பற்றி இத்தனை விரிவாக எழுதியிருந்தது கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன். நம்பவே முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ... Read more
Published on February 29, 2024 06:58
February 28, 2024
இன்றைய உரையாடல் பகல் இரண்டு மணி
இன்று (ஃபெப்ருவரி 29) பகல் இரண்டு மணிக்கு நடக்க இருக்கும் உரையாடல் லிங்க் கீழே: https://www.swellcast.com/t/SU5dwMhGZ...
Published on February 28, 2024 23:01
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

