சாரு நிவேதிதா's Blog, page 76
March 25, 2024
T.M. Krishna’s fake intellectualism
About a month or so back, a friend of mine played me a recording of a Carnatic concert. The singer’s voice, the fluidity of his performance, and the intensity reminded me of musicians from previous generations. I asked, “Who is this? I’ve never heard him before. He must be incredibly gifted.” Smiling, my friend showed ... Read more
Published on March 25, 2024 10:29
March 23, 2024
வாசகர் சந்திப்பு : பெங்களூர்
ஏப்ரல் 5, 6, 7, 8 தேதிகளில் பெங்களூரில் நம்முடைய வாசகர் சந்திப்பு நடைபெற உள்ளது. சில காரணங்களால் மார்ச்சிலேயே நடக்க இருந்த சந்திப்பு இப்போது ஏப்ரலுக்குத் தள்ளிப் போயிருக்கிறது. இந்த முறை எந்த மாற்றமும் இராது. நிச்சயம் மேற்கண்ட தேதிகளில் பெங்களூரில் இருப்பேன். வர விரும்பும் நண்பர்கள் வரலாம். வழக்கம் போல் கோரமங்கலாவில் தங்குவேன்.
Published on March 23, 2024 05:09
March 22, 2024
டி.எம். கிருஷ்ணா – 2
இன்னும் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன. ரஞ்சனி, காயத்ரி இருவரும் பெரியார் பற்றிக் கூறிய விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன். பாப் பாடகர் பாப் டிலனுக்கு 2016இல் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தது. அதேபோல் டி.எம். கிருஷ்ணாவுக்கும் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் இந்தியாவையும், ஹிந்து மதத்தையும் திட்டுபவர்களுக்கும் அவதூறு செய்பவர்களுக்கும் பெரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. இதை என் விஷயத்திலேயே கவனித்து விட்டுத்தான் சொல்கிறேன். ... Read more
Published on March 22, 2024 02:48
March 21, 2024
டி.எம். கிருஷ்ணா
ஒரு மாதத்துக்கு முன்னால் ஒருநாள் வினித் ஒரு ஆடியோ பதிவைப் போட்டுக் காண்பித்தார். கர்னாடக இசை. அந்தப் பாடகரின் குரலும் பாவமும் தீவிரமும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களிடம் மட்டுமே காணக் கூடியதாக இருந்தது. யாரப்பா இது, இதுவரை நான் இவரைக் கேட்டதில்லையே, பூரணமான இறையருள் பெற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்றேன். சிரித்துக் கொண்டே அவருடைய இன்னொரு காணொலியைக் காண்பித்தார் வினித். இருபது வயது இளைஞன் ஒருவன் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் துலங்க அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தான். பார்ப்பதற்கு ... Read more
Published on March 21, 2024 23:46
March 18, 2024
My Life My Text – 3
The Asian Review-வில் வெளியாகும் My Life My Text தொடரின் மூன்றாவது கட்டுரை கீழே: https://asian-reviews.com/2024/03/17/...
Published on March 18, 2024 09:31
மாயமான் வேட்டை – ஆங்கிலத்தில்
சாருவின் மாயமான் வேட்டை சிறுகதை Hunt for the Illusory Deer என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. இணைப்பு: https://fountainink.in/fiction/hunt-f...
Published on March 18, 2024 05:29
March 15, 2024
Itipiso Bhagawa
“அண்மையில் பெட்டியோ நாவல் படிக்கும் போது இந்தப் பாடலை கேட்டேன். இதுவரை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கில்லை. Pure Bliss.” என் வாரிசுகளில் ஒருவனாகிய வளன் அரசு ஃபேஸ்புக்கில் மேற்கண்ட வாக்கியத்தை எழுதியிருக்கிறான். வளன் ஒரு பாதிரியாராக இருந்தாலும் எல்லா மதங்களையும் எல்லா தீர்க்கதரிசிகளையும் மதிப்பவன். என் வாரிசாகிய ஒருவன் அப்படித்தானே இருக்க முடியும்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுதானே என் மதம்? வளன் அரசுவின் யூதாஸ் நாவலை நீங்கள் வாசித்துப் பார்க்க வேண்டும். ... Read more
Published on March 15, 2024 00:02
March 8, 2024
ஓர் உரையாடல்
இந்த உரையாடல் மற்றவற்றை விட நன்றாக வந்திருப்பதாகத் தெரிகிறது. கேட்டுப் பாருங்கள். அரை மணி நேரம். https://www.swellcast.com/harpercolli...
Published on March 08, 2024 03:02
March 7, 2024
சுதந்திர காலம்
வரும் சனிக்கிழமை மதியத்திலிருந்து ஒரு பத்து தினங்கள் எனக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அவந்திகா மும்பை செல்கிறாள். சுதந்திர காலத்தில் நான் அதிகம் எழுத மாட்டேன் என்பதுதான் ஒரே வருத்தம். என்னால் சிறையில்தான் அதிகம் எழுத முடிகிறது என்பதை அவதானம் செய்து வைத்திருக்கிறேன். சுதந்திர காலத்தில் இசை கேட்பேன். நான் வாழும் தாலிபான் சிறையில் இசைக்குத் தடை. வைன் அருந்துவேன். சிறையில் வைனுக்கும் தடை. நண்பர்களுடன் ஃபோனில் பேசுவேன். சிறையில் ஃபோனுக்குத் தடை இல்லை. ஆனால் நான் யாருடனெல்லாம் ... Read more
Published on March 07, 2024 05:57
March 6, 2024
தமிழ்ச் சமூகம் என்ற simulacrum
Simulacrum என்ற கோட்பாடு ஃப்ரெஞ்ச் பின்நவீனத்துவத் தத்துவவாதியான Jean Baudrillard (உச்சரிப்பு: ஜான் பொத்ரியா) மூலமாகப் பிரபலம் ஆயிற்று. சிருஷ்டிகரத்துவத்தைப் போலவே எனக்குத் தத்துவமும் முக்கியம். நீட்ஷே, ஜார்ஜ் பத்தாய், ரொலாந் பார்த், மிஷல் ஃபூக்கோ என்ற தத்துவவாதிகள் இல்லையேல் என் எழுத்து இல்லை. நானும் சுந்தர ராமசாமியின் எழுத்தில் மயங்கிக் கிடந்திருப்பேன். தத்துவம் என்பது எனக்கு உடலும் உயிரும் போல. சிருஷ்டி பாதி, தத்துவம் பாதி. இந்தப் பிரபஞ்சத்தையும் இதில் வாழும் உயிர்களின் ஓட்டத்தையும் புரிந்து ... Read more
Published on March 06, 2024 21:30
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

