சாரு நிவேதிதா's Blog, page 72
May 2, 2024
சென்னை வாழ்க்கை
இந்தியாவிலேயே சென்னைதான் மனிதர்கள் வாழவே முடியாத நகரமாக மாறியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா என்று தெரியாது. நான் முப்பத்தைந்து ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன். முப்பத்தைந்து ஆண்டுகளாக இப்படித்தான் கதை. நான் எழுதப் போவது சென்னைவாசிகளுக்கும் சென்னைக்குக் குடியேறிய எழுத்தாள சிகாமணிகளுக்கும் பிடிக்காது. ஏனென்றால், அப்படி வந்த எழுத்தாளர்கள் ஏதோ சென்னையை ஒரு சொர்க்கலோகம் மாதிரி எழுதித் தள்ளுகிறார்கள். மைலாப்பூரில் ஒரு பிராமணர் (ஐயர்) முடிதிருத்தும் கடை வைத்திருக்கிறார். கர்னாடக இசை ஒலிக்கும். முகப்பில் மஹா பெரியவரின் பெரிய படம். ... Read more
Published on May 02, 2024 09:05
La ultima niebla
மேற்கண்ட ஸ்பானிஷ் தலைப்பின் நேரடி அர்த்தம் The Ultimate Fog. சீலே தேசத்தைச் சேர்ந்த Maria Luisa Bombal 1934இல் எழுதி வெளிவந்த இந்தக் கதையை சில ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் சற்று விரிவாக்கி The House of Mist என்ற தலைப்பில் வெளியிட்டார் போம்பல். விரிவாக்கிய பதிப்பை நான் படிக்கவில்லை. முப்பது பக்கங்களே கொண்ட இந்தக் கதையைப் போல் ஒரு கதையை நான் படித்ததில்லை. தமிழில் சி.சு. செல்லப்பா எழுதிய ஜீவனாம்சம் கதையை மட்டுமே லா ... Read more
Published on May 02, 2024 00:11
May 1, 2024
நான்தான் ஒளரங்ஸேப் பற்றி நேசமித்ரன்
நான்தான் ஒளரங்ஸேப் பற்றி நேசமித்ரன்.
Published on May 01, 2024 23:34
மைலாப்பூரில் கூழ் கிடைக்குமா?
ஃபேஸ்புக்கில் சீனி ஒரு மதிய வேளையில் கூழ் குடித்தது பற்றி எழுதியிருந்தார். என்ன ஆச்சரியம், நான் ஒரு நான்கு தினங்களாக கூழ் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். நான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் இருபது வயது வரை கோதுமை, கேழ்வரகு பற்றி எதுவுமே தெரியாது. பார்த்தது கூட இல்லை. கம்பு பற்றி கேள்வியே பட்டதில்லை. இருபது வயதுக்கு மேல்தான் காட்பாடி பக்கம் வந்த போது அங்கே கேழ்வரகு கூழ் குடிக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு நான் கூழுக்கு அடிமையாகி ... Read more
Published on May 01, 2024 04:13
பாராட்டும் திட்டும்
டியர் சாரு, ”நீங்கள் திட்டினால் திட்டு வாங்குபவர் அரிவாளால் தன் நெஞ்சைப் பிளந்து இதயத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு கதறுவார்கள்” என்று ஒருமுறை அராத்து நம்முடைய கலந்துரையாடலின்போது சொன்னார். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லாமல் மிகவும் மென்மையாகி விட்டீர்கள் என்றும் கூடவே சேர்த்துக்கொண்டார். ஆனால் இன்னொரு விஷயத்தை நான் கவனித்திருக்கிறேன். நீங்கள் யாரையாவது பாராட்டினால் அவருக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. சாமியாரிலிருந்து ஆரம்பித்து ”இப்போது” வரை அதுதான் நடக்கிறது. இந்த விதியிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே ஒருவர் ... Read more
Published on May 01, 2024 02:59
April 30, 2024
வாசகர் வட்டம்
சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று இன்று யாரும் இல்லை. இப்போதைய பிரிவு, ஜனரஞ்சக எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள். அவ்வளவுதான். ஜனரஞ்சக எழுத்தாளருக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இலக்கியவாதிகளையும் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் இப்போது அனுமதிக்கின்றன. லா.ச.ரா. மட்டும் வாழ்நாள் முழுக்கவும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் மட்டுமே எழுதியவர். அவருக்கு ஜனரஞ்சகம் இடம் கொடுத்தது. அசோகமித்திரன் ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும் கணையாழி, தீபம் போன்ற இடைநிலைப் பத்திரிகைகளிலும் எழுதியவர். அவரையும் சிறுபத்திரிகை வட்டத்தில் குறுக்க முடியாது. சுந்தர ராமசாமி அப்படி இல்லை. தீவிர ... Read more
Published on April 30, 2024 23:38
April 29, 2024
தவம்
என்னிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் ஆயிரமாயிரம் விஷயங்கள் உண்டு. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்குதிரைக்காக ஏராளமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் ஒன்று, கடல் கன்னி என்ற கதை. கிட்டத்தட்ட குறுநாவல் அளவு வரும். ரொஹெலியோ சினான் (Rogelio Sinán) என்ற எழுத்தாளரின் கதை. பனாமாவைச் சேர்ந்தவர். இவர் பெயரெல்லாம் யாருக்கும் தெரியாது. எனக்கு எப்படித் தெரிந்தது? அந்தக் காலகட்டத்தில் கூபாவிலிருந்து க்ரான்மா என்ற வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. Tabloid. அதுவரை ... Read more
Published on April 29, 2024 23:37
லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும்…
My Life, My Text என்ற தலைப்பில் கனடாவிலிருந்து வெளிவரும் Asian Review இணைய இதழில் என் சுயசரிதத்தை எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது அதன் ஆறாவது அத்தியாயம் வெளிவந்திருக்கிறது. இந்தத் தொடருக்காக இதுவரை உலக மொழிகளில் எழுதப்பட்டுள்ள முக்கியமான சுயசரிதங்களைப் படித்து விட்டேன். ஒன்றே ஒன்றுதான் பாக்கியிருக்கிறது. ஆலன் ராப்-க்ரியே எழுதிய Ghosts in the Mirror. இன்னும் சில தினங்களில் கிடைத்து விடும். காத்திருக்கிறேன். அதற்கிடையில் கார்ஸியா மார்க்கேஸ் பற்றிய கலந்துரையாடலுக்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். ... Read more
Published on April 29, 2024 09:49
வாசிப்பு
வாசகர் வட்டத்தில் ராஜா என்று ஒரு நண்பர். என்னுடைய புத்தகங்களில் சித்தரிக்கப்படும் இடங்கள் ஒன்று விடாமல் நேரில் சென்று பார்த்து விடும் பழக்கம் உள்ளவர். ஔரங்ஸேப் நாவலில் நான் அப்படி பல ஊர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். எல்லாம் சூஃபி ஞானிகள் வாழ்ந்து அடங்கிய ஊர்கள். அந்த ஊர்களுக்கெல்லாம் போய் வந்திருக்கிறார் ராஜா. கூட வருவதற்கு நண்பர்கள் இல்லாமலேயே போய் வந்து விடுவார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது நாகூர் கொசத்தெருவில் நான் வாழ்ந்த வீட்டுக்குப் போய் வருவார். ... Read more
Published on April 29, 2024 07:59
April 28, 2024
க.நா.சு.வின் பொக்கிஷங்கள்
மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு,வணக்கம். ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ முதல் தொகுதியை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அந்நூலின் கடைசியில் உள்ள க.நா.சு. பற்றிய கட்டுரை இப்படி முடிகிறது:க.நா.சு.விடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏராளமாக இருக்கிறது. எனவே நாம் இப்போது அவசரமாகச் செய்ய வேண்டிய பணி அவர் எழுதியுள்ளவற்றில் இதுவரை பிரசுரமானது, பிரசுரமாகாதது எல்லாவற்றையும் உடனடியாகத் தொகுத்துப் பிரசுரம் செய்வதுதான். இல்லையேல் ஒரு மகத்தான பொக்கிஷத்தை இழந்துவிடுவோம்.(பழுப்பு நிறப் பக்கங்கள் – முதல் தொகுதி)சமீபத்திய ஆண்டுகளில் உங்கள் எதிர்பார்ப்பு ... Read more
Published on April 28, 2024 21:58
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

