சாரு நிவேதிதா's Blog, page 71
May 15, 2024
மொழிபெயர்ப்பின் கலையும் அரசியலும்
மொழிபெயர்ப்பு பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். நானும் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மொழிபெயர்ப்புத் தொகுதி இன்றைய மொழிபெயர்ப்பாளர்களின் முன்மாதிரி நூலாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும். இதை யாரும் சொல்லாததால் நானே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. என் பெருமைக்காக அல்ல. மொழிபெயர்ப்பாளர்களின் நன்மைக்காக. தருண் தேஜ்பாலின் The Valley of Masks நாவலை நானும் தாமரைச்செல்வியும் காயத்ரியும் மொழிபெயர்த்தோம். அதுவுமே மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி நூல்தான். மொழிபெயர்ப்பு எப்படி வந்திருக்கிறது என்று தருண் என்னைக் கேட்டபோது ... Read more
Published on May 15, 2024 23:52
பெங்களூர் IIHS சந்திப்பு
இந்த முறை பெங்களூர் சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது. சில சொந்த ஏமாற்றங்கள் இருந்தாலும். வியாழக்கிழமை (ஒன்பதாம் தேதி மே மாதம்) காலை பதினோரு மணிக்கு வேளச்சேரியில் உள்ள ஏ2பி போய்ச் சேர்ந்தேன். வேளச்சேரியில் சீனி சேர்ந்து கொள்வார். சீனியின் காரில் சீனி கார் ஓட்ட பெங்களூர் போக வேண்டும் என்பது திட்டம். வழியில் காஞ்சீபுரத்தில் ராஜா சேர்ந்து கொள்வார். ஏ2பியில் காஃபி குடித்துக்கொண்டிருந்த போது ராஜேஷ் வந்தார். அங்கேயே கொஞ்சம் கை முறுக்கு வாங்கிக்கொண்டேன். சீனி ... Read more
Published on May 15, 2024 06:24
May 14, 2024
எனக்குப் பிடித்த புதிய எழுத்தாளர்
இந்தத் தளத்தில் எனக்குப் பிடித்த அந்த எழுத்தாளரின் ஐந்து சிறுகதைகள் உள்ளன. படித்துப் பாருங்கள். https://www.gayathrir.com/
Published on May 14, 2024 22:55
You are the reason…
நான் எழுதிய முதல் கதையான முள் ஒரு காதல் கதை. மோகமுள் தமிழ் இலக்கியத்தின் உன்னதமான காதல் கதை. உலக மொழிகளில் சொன்னால் அன்னா கரினினா, மதாம் பொவாரி ஆகிய இரண்டும். நவீன தமிழ் இலக்கியத்தில் எக்ஸைல். அந்த நாவல் அதில் உள்ள காதலுக்காகக் கொண்டாடப்படாவிட்டாலும் வேறு பல காரணங்களுக்காகக் கொண்டாடப்பட்டது. ஆனாலும் நான் அதை அன்னா கரினினா, மதாம் பொவாரி, மோகமுள் ஆகிய மூன்றையும் மனதில் கொண்டே அவற்றின் நவீன வடிவமாகவே எழுதினேன். ஆனால் காதலே ... Read more
Published on May 14, 2024 03:02
May 8, 2024
பெங்களூர் சந்திப்பு (தொடர்ச்சி)
நாளை (9 மே) காலை பதினோரு மணிக்கு பெங்களூர் கிளம்புகிறேன். நாளை இரவும் பத்தாம் தேதி இரவும் என்னை சந்திக்கலாம். பதினொன்றாம் தேதி இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மெண்ட்ஸின் இரவு விருந்தில் கலந்து கொள்வதால் இரவு பத்து மணிக்கு மேல்தான் என் நேரம் என் கையில் இருக்கும். ஆனால் பன்னிரண்டாம் தேதி மதியம் உரையாடல் இருப்பதால் பதினோரு இரவு நீண்ட நேரம் கண் விழித்திருக்க இயலாது. இதற்கிடையில் மருத்துவர் பாஸ்கரனின் பிறந்த நாளும் பதினொன்றாம் தேதிதான் ... Read more
Published on May 08, 2024 03:44
May 7, 2024
பெங்களூர் சந்திப்பு
பெங்களூர் Indian Institute of Human Settlements வளாகத்தில் வரும் பன்னிரண்டாம் தேதி மதியம் 12.15 மணிக்கு கார்ஸியா மார்க்கேஸ் பற்றிய உரையாடலில் கலந்து கொள்கிறேன். வர நினைக்கும் நண்பர்கள் முன்பதிவு செய்து கொண்டு வரலாம். அழைப்பிதழை முந்தின பதிவுகளில் கொடுத்திருக்கிறேன். மே 11ஆம் தேதி கீழ்க்கண்ட முகவரியில் மருத்துவர் பாஸ்கரன் அவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பும் அன்பர்களைப் பார்க்க இருக்கிறார். என்னுடைய பெங்களூர் சந்திப்புக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்த மருத்துவரை நான் தான் ஒருநாள் முன்கூட்டியே ... Read more
Published on May 07, 2024 03:11
May 6, 2024
பசி
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது எனக்குப் பிடிக்காது. கொஞ்சமும் பிடிக்காது. ஆனால் பிராணிகளைப் பிடிக்கும். வீட்டில் வளர்ப்பதுதான் பிடிக்காது. அதற்காகத் தெருவில் விட வேண்டும் என்று சொல்லவில்லை. எந்த தேசத்தில் பிராணிகள் தெருவில் திரிகின்றனவோ அந்த நாடு இந்த உலக வரைபடத்திலேயே இருப்பதற்கு லாயக்கில்லாதது என்று நினைக்கிறேன். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. துருக்கியின் தெருக்களில் எங்கு பார்த்தாலும் பூனைகள் திரியும். ஆனால் அவை பசித்திருப்பதில்லை. துருக்கி சமூகமே அந்தப் பூனைகளை வளர்க்கிறது. அப்படியிருந்தால் பிரச்சினை இல்லை. ... Read more
Published on May 06, 2024 03:56
May 5, 2024
மெதூஸாவின் மதுக்கோப்பை
அன்புள்ள சாரு,நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மறுவாசிப்புக்கு “மெதூஸாவின் மதுக்கோப்பை”யை எடுத்தேன். நான் அடுத்த வாரம் ப்ரான்ஸ் செல்லவிருப்பதாலோ என்னவோ ! ஆனால் தற்செயல் தான். இந்தப் புத்தகத்தைப் பொறுத்த மட்டில் இலக்கியம் பேச வேண்டுமானால் நிறைய இருக்கிறது, அதற்கு இடமும் நேரமும் இல்லை. மேலும் முன்னுரையில் நீங்கள் தெளிவாகக் கூறிவிட்டீர்கள் “நான் படித்த ஃப்ரெஞ்ச் இலக்கியம் ஃப்ரெஞ்ச் தத்துவம் பார்த்த ஃப்ரெஞ்ச் சினிமா என்ற எல்லா அனுபவத்தையும் ஒன்று திரட்டி ஒரு புத்தகமாகக் கொண்டு வரலாம் என்று ... Read more
Published on May 05, 2024 23:12
May 3, 2024
செருப்படி : அராத்து
சாருவின் சமீபத்திய கட்டுரையைப் படித்தேன். ஏற்கனவே பலமுறை அவர் செருப்பால் அடித்ததுதான். மீண்டும் அனைத்து செருப்படிகளையும் ஒன்றாக்கி காம்போவாக அளித்து , சாரி அடித்து இருக்கிறார். ஜெயிலில் , திடீரென்று கொத்துக் கொத்தாகக் கூப்பிட்டு அடிப்பார்கள். என்னா ஏது என யாரேனும் விசாரித்தால், ரொம்ப துளிர் விட்டுப்போச்சி, அப்பப்ப அடிச்சி தொவச்சி வச்சாதான் சரிப்பட்டு வரும் என்பார்கள். அதுபோல எல்லாம் சாரு செய்வதில்லை. அவ்வப்போது சீரான இடைவெளியில் யாரேனும் வந்து சென்ஸிபிளிட்டி இல்லாமல் சீண்டி தானும் செருப்படி ... Read more
Published on May 03, 2024 08:41
எழுத்தாளன் என்றால் எடுபிடியா?
எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அது என் நண்பகள் பலருக்கும் புரிவதில்லை. ”உங்கள் நாவலை ஒரு லட்சம் கொடுத்து வாங்குகிறார்கள், பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். அப்படியும் நீங்கள் இப்படிச் சொல்லலாமா?” என்பது அவர்கள் கேள்வி. அப்படி வாங்குபவர்கள் என் வாசகர்கள். தமிழ்ச் சமூகம் அல்ல. தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களைத் தங்கள் எடுபிடிகளாக நினைக்கிறது. பிரபு தேவா என்ற சினிமாக்காரருக்காக ஐயாயிரம் குழந்தைகளை இந்தக் கொடூரமான வெய்யிலில் நிறுத்தி வதைத்திருக்கிறார்கள். ... Read more
Published on May 03, 2024 05:08
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

