சாரு நிவேதிதா's Blog, page 68
June 11, 2024
உலக சினிமா இலக்கணமும் அழகியலும் – 12 (சில முக்கிய அறிவிப்புகள்)
பயிலரங்கம் காலை பத்து மணிக்குப் பதிலாக ஒன்பதரைக்கே தொடங்கும். இயக்குனர் ராஜ்குமாரும் அராத்துவும் பயிலரங்கைப் பற்றி அறிமுகம் செய்து பேசுவார்கள். ஒரு மேடையில் பேசுவதும் பயிலரங்கம் நடத்துவதும் ஒன்று அல்ல என்று தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறது. எப்படி என்று விளங்கிக் கொள்வோம். 1970களின் முற்பகுதியில் வந்த ஒரு திரைப்படம். அந்தத் திரைப்படம் சினிமா மொழியில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்தியாவின் திரைப்படக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் அந்தப் படம் இல்லை. இந்தியாவில் அந்த இயக்குனர் பற்றிப் ... Read more
Published on June 11, 2024 23:58
கேரளத்தில் சாலைவழிப் பயணம்
சென்னையிலிருந்து பதினைந்தாம் தேதி கிளம்பி பெங்களூர் சென்று அங்கே ஒருநாள் இரவு. அயன் ஹில். பதினாறு கிளம்பி கூர்க். பதினேழு மைசூரிலிருந்து கேரளம். கேரளத்தில் மலைகளும் நதிகளும் சூழ்ந்த ஒரு குக்கிராமத்தில் நான்கு நாள் தங்கல். நாங்கள் நான்கு பேர். மைசூரில் ஒரு நண்பரிடம் கார் உள்ளது. வர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதலாம். உங்களிடம் கார் இருந்தால் இன்னும் வசதி. மைசூர் நண்பர் உங்களிடம் கார் இல்லாமல் இருந்தால்தான் தன் காரை எடுப்பார். இல்லாவிட்டால் எங்கள் ... Read more
Published on June 11, 2024 23:07
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 11
இதுவரை 90 பேர் திருவண்ணாமலை பயிலரங்குக்குப் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இதில் 20 பேர் இன்னும் கட்டணத் தொகை அனுப்பவில்லை. அந்த இருபது பேரும் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த என் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் அனைவரும் இருபது தேதிக்குள் பணம் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு நான் 50,000 ரூ. கொடுக்க வேண்டும் என்ற தகவல் வந்தது. தகவல் வந்த அடுத்த நிமிடமே ஜிபே மூலம் பணத்தை அனுப்பி விட்டேன். ... Read more
Published on June 11, 2024 03:53
June 10, 2024
சாரு குறித்து Scroll-இல் கட்டுரை
சாரு குறித்து Scroll இணையதளத்தில் ‘How Tamil author Charu Nivedita has created a cult following for his books (and his persona)’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். https://scroll.in/article/1064555/how...
Published on June 10, 2024 05:55
Frankly Yours – ஒரு நேர்காணல்
சாருவின் நேர்காணல் Frankly Yours என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. நண்பர்கள் பார்க்கவும். பாகம் 1: பாகம் 2:
Published on June 10, 2024 04:50
June 7, 2024
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 10
டியர் சாரு, நலமா? என்னைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். என் பெயர் கபீர். ஐடி துறையில் வேலை பார்த்துக்கொண்டே சினிமாவும் இயக்கி வருகிறேன். இது வரை மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளேன். அதில் கடைசியாக எடுத்த திரைப்படம் 90,000 வியூஸ் வரை சென்றுள்ளது. இப்போது சிறுகதைகளும் எழுதத் தொடங்கியுள்ளேன். எனக்கு உங்களை அறிமுகப்படுத்தியவர் என் தந்தை. நான் கடந்த நான்கு வருடங்களாக புத்தக வாசிப்பில் ஈடுபட்டு வருகிறேன். அவர் ஒரு நாள் என்னை அழைத்து நீ நல்ல ... Read more
Published on June 07, 2024 08:31
June 6, 2024
சிறந்த மாணவர்
நான் எதையாவது படிக்கச் சொன்னால் இருபத்து நான்கு மணி நேரத்தில் படித்து முடித்து விடும் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். ஸ்ரீ, அப்துல் (பாண்டி), மஹாதேவன். இப்போது இந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பவர் சரவணன் சிவன்ராஜா. இவர்களிடம் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நால்வருமே முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். நால்வரில் மூன்று பேர் திருமணம் ஆகாதவர்கள். அப்படிப் பார்த்தால் திருமணம்தான் வாசிப்புக்குத் தடையாக இருக்கிறதோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஸ்ரீ அதையும் சமாளித்து விட்டாள். பிரார்த்தனையைப் பின் தொடர்ந்து… ... Read more
Published on June 06, 2024 23:37
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் (9) – கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு ஒரு சிறிய பயிற்சி
ஜூன் 30 அன்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கின் முக்கியமான நோக்கம் என்ன? இதன் மூலம் நான் சாதிக்க நினைப்பது என்ன? இதுவரை 75 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இதில் 50 பேர் பணமும் செலுத்து விட்டார்கள். (மற்ற நண்பர்கள் கவனிக்கவும்.) இன்னும் ஒரு 75 பேர் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன். மொத்தம் 150. இதற்கிடையில் சீனி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அரங்கத்தின் கொள்ளளவு எத்தனை? எத்தனை பேர் வரலாம்? ... Read more
Published on June 06, 2024 09:19
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 8
ஜூன் 30 அன்று காலை பத்து மணிக்கு பயிலரங்கம் ஆரம்பித்து விடும். நான் ஜூன் 29ஆம் தேதி மாலை திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி அருகில் உள்ள ஒரு பண்ணை இல்லத்தில் தங்குவேன். அன்று இரவு யாரையும் சந்திக்க மாட்டேன். மறுநாள் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் பேச வேண்டும். நான் நேரம் தவறாமையை மிகப் பிடிவாதத்துடன் கடைப்பிடிப்பவன். இந்திய நேரம் என்பதெல்லாம் என்னிடம் செல்லுபடி ஆகாது. பத்து என்றால் பத்து மணிக்கே தொடங்கி விடுவேன். மிஷல் ... Read more
Published on June 06, 2024 01:13
June 5, 2024
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – ஒரு முக்கிய அறிவிப்பு
ஜூன் 30 அன்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை நடக்க இருக்கும் உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் நடக்க இருக்கும் பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை அறிவிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 2000 ரூ. குறைந்த பட்ச நன்கொடை. கல்லூரி மாணவர்களுக்கு 1000 ரூ. இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கல்லூரி மாணவர்களை அழைக்கிறேன். இந்தக் கட்டணமும் செலுத்த முடியாதவர்கள் எனக்கு ... Read more
Published on June 05, 2024 08:23
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

