சாரு நிவேதிதா's Blog, page 64

July 31, 2024

15. மொழி எனும் மந்திரம்

சித்தர்கள் பற்றிப் படித்திருக்கிறீர்களா?  தகரத்தைத் தங்கமாக்கும் விஞ்ஞானமெல்லாம் அவர்களிடம் இருந்திருக்கிறது.  உணவு உண்ணாமலேயே பல காலம் இருப்பார்கள்.  உடலை பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கும் சித்தர்களும் உண்டு.  போகர் உருவாக்கிய நவபாஷாணத்தை நாம் அறிவோம்.  ஒன்பது வகை பாஷாணத்தை வேதியியல், இயற்பியல் முறைப்படி கட்டினால் கிடைப்பது நவபாஷாணம்.  விறகு மற்றும் ஒன்பது வகை வறட்டி மூலம் நவ பாஷாணங்களையும் திரவமாக்கி, பிறகு ஒன்பது முறை வடிகட்டி திடமாக்குவார்கள். புடம் போடுதல் என்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  வறட்டியின் அளவுக்கேற்ப ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2024 06:54

July 30, 2024

14. என் கத்தி கடவுளையும் கூறு போடும்…

அராத்துவின் விளக்கம் படித்தேன்.  உறங்கச் செல்வதற்கு முன் அதற்கு ஒரு பதில்.  ஆரம்பத்தில் நான் சொன்னது போல, இந்த விவாதத்தினால் வாசகர்களுக்குப் பயன் உண்டாகுமே தவிர அராத்துவுக்கு இதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.  அவரைப் பொருத்தவரை இது வெட்டிவேலையாகவே இருக்கும்.  ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டேன்.  எனக்கு, மொழி உடல்.  உள்ளடக்கம் ஆன்மா.  ஆன்மா மட்டும் இருந்தால் அது ஆவி.  இரண்டுமே எனக்கு முக்கியம்.  இதற்கிடையில் நான் உடலை ஆராதிப்பவன் வேறு.  ஒரு அழகிப் போட்டிக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2024 10:36

13. சரஸ்வதி சொன்ன விபரீத கதை

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் வரலாற்றைப் புறக்கணித்து விட்டார்கள்.  உலகில் எங்கும் இப்படி நடந்ததில்லை.  கிரேக்கத்தில் சாக்ரடீஸ் பற்றியும், அவருக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்பு பிறந்த லெஸ்பியன் கவி Sappho பற்றியும் துல்லியமாக எழுதி வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதற்கு சிலைகள் இருக்கின்றன.  மேலை நாடுகள் முழுவதுமே கவிஞர்கள், ஓவியர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், அரசர்கள் போன்றோர் பற்றிய எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. இந்தியாவில் கிடைப்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள்தாம்.  திருவள்ளுவர் மணமானவரா, துறவியா, ஹிந்துவா, சமணரா, எப்போது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2024 07:57

14. வருந்துகிறேன்…

13-ஆம் எண்ணுள்ள கும்நாமியின் கடிதத்தை நான் வெளியிட்டிருக்கக் கூடாது. ஏதோ ஒரு வேகத்தில் வெளியிட்டு விட்டேன். அந்தக் கடிதத்தில் அராத்து மீதான வெறும் வசைதான் இருக்கிறது. அதை வெளியிட்டது என் கவனக் குறைவு என்றே கருதுகிறேன். இந்தக் கட்டுரைகள் எல்லாம் தொகுக்கப்படும்போது அந்தக் கடிதம் நூலில் இடம் பெறாது. அராத்து இது குறித்து என்னிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்தார். உடனே அதை எடுத்து விடுகிறேன் என்றேன். ஏனென்றால், அது என் கவனக் குறைவால் நடந்து விட்டது. ஆனால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2024 01:33

July 29, 2024

13. கும்நாமியின் வெறியாட்டம்

இப்படி ஒரு நீண்ட மெஸேஜ் வாட்ஸப்பில் வந்தது. யார் என்று தெரியும். ஆனால் அவரே அடையாளப்படுத்திக் கொள்ளாதபோது நாம் எதற்குக் கேட்க வேண்டும் என்று விட்டு விட்டேன். கும்நாம் என்றால் பெயரற்றவன் என்று பொருள். இப்போது கும்நாமியின் நீண்ட கடிதம். கடிதத்தில் சு.ரா.வின் “கெட்ட” வார்த்தைகள் தாராளமாகப் புழங்கும். முகம் சுளிப்பவர்கள் இதைப் படிக்க வேண்டாம். இனி கடிதம்: சாரு சார், ஆறாம் கட்டுரையைப் படித்து அரண்டுவிட்டேன். அதற்கு முந்தைய கட்டுரையை வாசித்தபோது எனக்கு ஏற்பட்டது மருட்சி. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2024 22:11

12. ரஸியா, ஹோ ந ஜானா ரே…

ராகம் மாரு பிஹக்.  ரஸியா, ஹோ ந ஜானா ரே என்ற இந்தப் பாடலை பலரும் பாடியிருக்கிறார்கள்.  அதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது வெங்கடேஷ் குமார்.  இன்றைய ஹிந்துஸ்தானி இசையில் அவரையே நான் முதன்மை ஸ்தானத்தில் வைப்பேன்.  தினமும் காலை ஏழிலிருந்து எட்டு எனக்கு நடை நேரம்.  இன்று அந்த நேரத்தில் தொலைபேசியில் பேசுவதற்கு யாரும் கிடைக்காததால் வெங்கடேஷ் குமாரின் ரஸியாவைக் கேட்டேன்.  ஹர்ஷ் போரஸ் படேல் இயற்றியது.  இவர் யார் என்று என்னால் கண்டு பிடிக்க ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2024 04:09

July 28, 2024

11. பின்நவீனத்துவ சரஸ்வதி

நீங்கள் பெட்டியோ நாவலைப் படித்திருக்கிறீர்களா இல்லையா எனத் தெரியாது. அதன் பக்கங்களை நான் கனவிலிருந்தே எழுதினேன். ஸீரோ டிகிரியைப் போல. அதிலிருந்து சில பகுதிகளை கீழே தருகிறேன். ஆம், அப்படி ஒரு துய்ப்பை என் வாழ்நாளில் அடைய முடியுமெனத் தோன்றவில்லை.  தமாலியுடனான சரீர சேர்க்கை அப்படித்தான் இருந்தது. மரணம் எப்பேர்ப்பட்ட ருசியுடையதென்று தெரியுமா உனக்கு?  அதை ருசித்தால் நாம் இல்லாமல் ஆகி விடுகிறோம்.  சரீர சேர்க்கை என்பது மரணத்தைத் தொட்டுத் தொட்டு ஓடி வரும் நாடகம்.  ஆனால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2024 08:32

10. Hand of God

ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் ராம்ஜி, காயத்ரி, நான் மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது போகிற போக்கில் என்று சொல்வோமே அம்மாதிரி த்வனியில் “உடனே லா.ச.ரா.வை மொழிபெயர்த்து விடுவோம்” என்றாள் காயத்ரி.  ஆங்கில மொழிபெயர்ப்பு.  அதைக் கேட்டவுடன் நான் ஏதோ சாமி வந்தது போல் ஒரு வெறியாட்டம் ஆடினேன்.  அந்த வெறியாட்டத்தின் சுருக்கம்: ”என்னது, லாசராவை மொழிபெயர்ப்பதா?  கடவுளின் வார்த்தைகளை அப்படி போகிற போக்கில் மொழிபெயர்த்து விட முடியுமா?  லாசராவை மொழிபெயர்க்க ஒருத்தன் இந்த உலகில் பிறந்திருக்கிறானா?” குரூரத்தின் அழகியலை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2024 05:29

July 26, 2024

9. ஒரு குருக்களின் கதை

ஆண்டன் செகாவ் பற்றி, தஸ்தயேவ்ஸ்கி பற்றி, மாப்பஸான் பற்றி, ப்யூகோவ்ஸ்கி பற்றி, மற்றும் பல மேற்கத்திய இலக்கிய மேதைகள் பற்றியெல்லாம் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ரோமாஞ்சனம் பெருகப் பேசும்போதெல்லாம் எனக்கு அசூயையாக இருக்கும்,   நம்மிடையே இருக்கும் மாமேதகள் பற்றி யார் ஐயா பேசுவது என்று.  பேசாவிட்டாலும் பரவாயில்லை, அந்த மாமேதைகள் மீது மூத்திரமும் அடித்தால் அந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?  அதிலும் என் மாணவரே அப்படிச் செய்யும்போது மனம் பதறுகிறது.  இது அராத்து: “லா.ச.ரா வின் அபிதா ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2024 22:39

8. இலக்கியம் என்ன செய்கிறது?

நேற்று (26.4.2024) கிட்டத்தட்ட நாள் பூராவும் நானும் அவந்திகாவும் தென் சென்னை முழுக்கவும் வீடு தேடி அலைந்தோம். நண்பர்களிடம் சொல்லியிருந்தால் கார் அனுப்பியிருப்பார்கள். எப்போது கிளம்புவோம் என்று தெரியாததால் கார் வேண்டாம், ஆட்டோவிலேயே போகலாம் என்று சொல்லி விட்டாள் அவந்திகா. வீட்டில் கார்த்திக்கின் கார் இருக்கிறது, டிரைவர் இருந்தால் அதில் போயிருக்கலாம். பகுதி நேர டிரைவர் கிடைத்தாலும் என்னால் பெட்ரோல் போட்டு மாளாது என்பதால் அது பற்றி யோசிக்கவே முடியவில்லை. ஆட்டோவிலேயே நாள் பூராவும் சுற்றினோம். வீட்டுக்குத் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2024 18:59

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.