சாரு நிவேதிதா's Blog, page 63

August 6, 2024

21. பின்னோக்கிப் பார்க்கிறேன்…

1978இலிருந்து நான் தில்லியில் பார்த்த திரைப்படங்கள்தான் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பெரும்பான்மையான படைப்பாளிகளை நான் மூர்க்கமாக நிராகரிப்பதற்குக் காரணமாக அமைந்தன. நான் நிராகரித்தவர்களுள் முக்கியமானவர் தி.ஜானகிராமன். அந்தத் திரைப்படங்கள் எனக்குப் பார்க்கக் கிடைத்ததனாலேயே ”நான் ஜெர்மன் சினிமாவினால் உருவாக்கப்பட்டேன்” என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். பொதுவாகச் சொன்னால், ஐரோப்பிய சினிமா. அதிலும் பெர்க்மன் போன்றவர்கள் அல்ல. பெர்க்மன் மானுட குலத்தின் ஆன்மீக வெறுமையைத் தன் கருப்பொருளாக எடுத்தவர். ஆனால் பசோலினி போன்றவர்களும், ஜெர்மானிய பெண் இயக்குனர்களும்தான் மனிதனின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2024 10:49

August 5, 2024

20. It is about transgressive sex…

பத்தொன்பதாம் அத்தியாயத்தின் இறுதியை நினைவு கூர்ந்து கொண்டு இப்போது மீதிக் கதையைப் படியுங்கள்.  Truth or Dame game என்று எழுத்துப் பிழையோடு வந்து விட்டது.  ஆட்டத்தின் பெயர் Truth or Dare என்பதை நீங்கள் அறிவீர்கள். இரண்டாவது ஆட்டத்தில் தியோ வெல்கிறான்.  இஸபெல் தோற்கிறாள்.  இப்போது நீ மேத்யூவுடன் எனக்கு முன்னே உடலுறவு கொள்ள வேண்டும் என்கிறான் தியோ.  என்னதான் படத்தின் கதையை எழுதினாலும் நீங்கள் பார்த்தால்தான் படத்தின் இயல்புத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.  படத்தில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 05, 2024 05:10

ஒரு கதை அல்ல, ஒரு நூறு லக்ஷ்மி கதைகள்…

முதல் அட்மின் “மிகவும் வருந்துகிறேன், இனிமேல் இப்படி நடக்காது” என்று எனக்கு எழுதியிருந்தாள். நல்லவேளை, ”முதல் அட்மின் என்றால் யார் என்று உலகத்துக்கே தெரியும், முச்சந்தியில் வைத்து என்னை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்” என்று என்னைக் குற்றம் சாட்டவில்லை. இல்லாவிட்டால் அதற்கு வேறு ஆயிரம் மன்னிப்புக் கேட்டு, முந்நூறு (காதல்!) கவிதைகள் எழுதித் தொலைக்க வேண்டும். முதல் அட்மின் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்பதால்தான் அதை நான் தைரியமாக எழுதினேன். முதல் அட்மின் “இனிமேல் அப்படி நடக்காது” ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 05, 2024 03:40

August 4, 2024

பைசா பெறாத விஷயம் – ஒரு சோகக் கதை

நேற்றுதானே மகிழ்ச்சி பற்றி எழுதினேன்? எழுதி முடித்த கணத்திலிருந்து ஒரே மன உளைச்சல். எல்லாம் இந்த இன்ஸ்டாவினால் வந்தது. கதையை ப்ளாகில் வெளியிட்ட கையோடு என் அட்மினை அழைத்து கதையை இன்ஸ்டாவில் பகிர்ந்து விடு என்றேன். அட்மின் பயங்கர பிஸியான ஆள். அதனால் அவளுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது போடட்டும் என்று அந்த விஷயத்தை அப்போதே மறந்து விட்டேன். ஒரு மணி நேரத்தில் “எந்தக் கதையை? இந்தக் கதையையா?” என்று மகிழ்ச்சி கதையின் லிங்க் வந்தது. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2024 22:56

மகிழ்ச்சி என்றால் என்ன? – ஒரு நீதிக்கதை

(ஏற்கனவே பதிவிட்ட கதையில் பல பகுதிகள் சேர்க்கப்பட்ட புதிய வடிவம்.) இப்போது எழுதப் போகும் விஷயத்தை உங்கள் மனதில் நிரந்தரமாக இருத்திக் கொள்ளுங்கள்.  இதைப் பின்பற்றினால் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.  பின்பற்றுவது சுலபம்.  ஆனாலும் பலருக்கு ஏன் இது பின்பற்ற முடியாதபடி இருக்கிறது என்று எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை.  ஆனால் மற்றவர்களால் பின்பற்ற முடியாதபடி இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்தச் சம்பவத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  சலித்துக் கொள்ளாதீர்கள்.  ஏற்கனவே எழுதியபோது அதை நான் என்னுடைய சகிப்புத் தன்மை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2024 00:30

August 3, 2024

19. காமமும் கலையும்…

”காமத்தைக் கருப்பொருளாகக் கொண்ட திரைப்படங்களில் சிறந்ததாக தெ ட்ரீமர்ஸ் படத்தைச் சொல்லலாம்” என்ற என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.  லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸ் திரைப்படத்தைத் திரும்பவும் ஒருமுறை பார்த்த பிறகு இந்த மாற்றம் கொண்டேன்.  இப்போது நாம் விவாதிக்கப் போகும் திரைப்படங்களை நீங்கள் குடும்பத்தோடு பார்க்க இயலாது. லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸ், தெ ட்ரீமர்ஸ் இரண்டுமே பெர்னார்தோ பெர்த்தொலூச்சியின் திரைப்படங்கள்.  இந்த இரண்டும் முறையே 1972இலும் 2003இலும் எடுக்கப்பட்டவை.  இங்கே இந்த காலகட்டம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2024 09:15

August 2, 2024

18. கலையும் வாழ்க்கையும்…

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் யாரும் சந்தா/நன்கொடை அனுப்பவில்லை. ஒரே ஒரு நண்பரைத் தவிர. ஒருவேளை திருவண்ணாமலை பயிலரங்குக்கு அனுப்பியதால் மீண்டுமா என சோர்வடைந்து இருக்கலாம்.  எப்போது முடியுமோ அப்போது அனுப்பி வையுங்கள்.  ஒன்றை மட்டும் வலியுறுத்திச் சொல்லி விடுகிறேன்.  நீங்கள் எனக்கு அனுப்பும் பணம் என் பயணங்களுக்கு மட்டுமே பயன்படும்.  என் பயணங்களின் அத்தாட்சியாக நிலவு தேயாத தேசம் நூலும், சீலே பற்றி நான் எழுதியுள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களும் நிற்கின்றன.    அந்த நண்பர் ரேஸர் பே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 02, 2024 00:55

July 31, 2024

17. கலைஞனும் பைத்தியக்காரனும்…

சாரு – மௌனி – எஸ்.ரா – கவித்துவ ஸ்டாக்கிங் சாரு மௌனி பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். சூட்டோடு சூடாக மௌனி பற்றி எஸ்.ரா எழுதியிருந்ததையும் பகிர்ந்திருந்தார். இரண்டையும் அடுத்தடுத்து படித்ததும் குபுக் என சிரிப்பு வந்து விட்டது. இந்த இடத்தில் நான் குபீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்பதை யாரேனும் 100 வருடம் கழித்து கண்டுபிடித்து இலக்கியக் கட்டுரை எழுதலாம் ! என்னடா இது சாருவே நமக்கு லட்டு லட்டாக மேட்டர் தருகிறாரே எனத் தோன்றியது. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2024 19:36

16. சத்தியத்தின் திறவுகோல்

ஒரு முறை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் வைத்து தெஹல்கா பத்திரிகையாளர் என்னிடம் ரேபிட் ஃபயர் பேட்டி எடுத்தார்.  முதல் கேள்வி.  எழுத்து என்றால் என்ன?  மது அருந்தாமல் நான் நிதானமாக இருக்கும்போது இப்படியெல்லாம் மடக்கினால் சுருண்டு விழுந்து விடுவேன்.  ஆனால் அந்தச் சமயம் பின்நவீனத்துவ சரஸ்வதி என் பக்கம் வந்து நின்று என் செவியில் மேஜிக் என்று ஓதினாள்.  நானும் ஒரு க்ஷணமும் யோசியாமல் மேஜிக் என்றேன். யோசித்துப் பார்த்தால் பி. சரஸ்வதி என் செவியில் ஓதியது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2024 10:05

16. மௌனியைப் புரிந்து கொண்ட என் சகா

எஸ். ராமகிருஷ்ணன் அவரது கதா விலாசம் புத்தகத்தில் மௌனி பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதியிருக்கிறார். மௌனி பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே ஆகச் சிறந்ததாக இதைக் கருதுகிறேன். நீங்களும் அவசியம் இதைப் படிக்க வேண்டும். அதன் இணைப்பு இது: அழியாச் சுடர்கள்: மௌனி- ஒரு புதிய அலை-எஸ்.ராமகிருஷ்ணன் (azhiyasudargal.blogspot.com)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2024 07:12

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.