சாரு நிவேதிதா's Blog, page 61
August 22, 2024
கனவு இல்லமும் ஒரு நூலகமும்
வீடு மாற்றிக்கொண்டிருக்கிறோம். இதில் பெரிய பிரச்சினையாக இருப்பது என் நூலகம்தான். என்னிடம் சுமாராக பத்தாயிரம் நூல்கள் உள்ளன. இதில் கால்வாசி புத்தகங்கள் உலகில் ஓரிரண்டு இடங்களில்தான் கிடைக்கும். உதாரணமாக அந்தோனின் ஆர்த்தோவின் காதலி Colette Thomas. அவருடைய சுயசரிதை The Testament of the Dead Daughter. அந்தப் புத்தகம் லண்டன் நூலகத்தில்தான் இருந்தது. அதைத் தவிர வேறு எங்குமே இல்லை. பாரிஸின் உலகப் புகழ் பெற்ற நூலகமான பொம்ப்பிதூவிலும் இல்லை. அமெரிக்காவிலும் இல்லை. அதைப் பதிப்பித்த ... Read more
Published on August 22, 2024 03:36
August 21, 2024
26. மார்க்கி தெ ஸாத்: உடலும் ஆன்மாவும்…
”அராஜகமானது, காலரா போல் தொற்றிக்கொள்ளக் கூடியது, கோபப்படுத்தக் கூடியது, அதன் எல்லா அம்சங்களிலும் தீவிரத்தன்மை கொண்டது, இதுவரை ஒருபோதும் பார்த்திராத அளவுக்கு உடல் இன்பத்தைக் கொண்டாடும் கற்பனைகளைக் கொண்டது, வெறிநிலை என்ற அளவுக்குக் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பேசுவது – சுருக்கமாகச் சொன்னால் இதுதான் என் எழுத்து. இதற்காக நீங்கள் என்னைத் திரும்பவும் கொல்லலாம். அல்லது, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், நீங்கள் என்ன செய்தாலும் நான் என்னை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.” சமூகம் ... Read more
Published on August 21, 2024 10:28
August 20, 2024
நன்றி
இன்றோடு தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்ற இந்தத் தொடரை ஆரம்பித்து ஒரு மாதம் முடிகிறது. ஜூலை இருபதாம் தேதி ஆரம்பித்தேன். அநேகமாக தினமும் ஒரு கட்டுரை. சில தினங்களில் இரண்டு மூன்று கட்டுரைகள். இன்றோடு முடியும் என்று எழுதியிருந்தேன். ஆனால் இன்னும் கால்வாசி பாக்கியிருக்கிறது. இன்னும் மார்க்கி தெ ஸாத் முடியவில்லை. க.நா.சு.வின் அசுரகணத்தை எடுக்கவில்லை. அநேகமாக இன்னும் ஒரு மாதம் போகும் போல் இருக்கிறது. இந்தத் தொடருக்கு நீங்கள் கொடுத்த தார்மீக ஆதரவுக்கும் சந்தா, நன்கொடை என்று ... Read more
Published on August 20, 2024 08:15
August 19, 2024
அந்திமழை இளங்கோவனின் அகால மரணம் சொல்லும் செய்தி என்ன? – 2
ஒரு வாரத்துக்கு முன்புதான் அவந்திகா என்னிடம் ஒரு முக்கிய சமாச்சாரத்துக்காக சூடம் வைத்து சத்தியம் வாங்கிக் கொண்டாள். வீடு மாற்றி, புது வீட்டுக்குப் போய் அங்கே எல்லா பொருட்களையும் அந்தந்த இடங்களில் வைத்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் வரை நீ ஒரு கூட்டத்துக்கும், ஒரு ஊருக்கும் போகக் கூடாது. நானுமே அப்படித்தான் முடிவு எடுத்திருந்ததால் உடனடியாக சத்தியம் கொடுத்தேன். சத்தியம் கொடுத்த மறுநாள்தான் அந்திமழை இளங்கோவனின் அகால மரணச் செய்தி வந்தது. அந்திமழை அசோகன்தான் செய்தி ... Read more
Published on August 19, 2024 10:45
August 18, 2024
அந்திமழை இளங்கோவனின் அகால மரணம் சொல்லும் செய்தி என்ன?
என் மைத்துனர் – அவந்திகாவின் தமையன் – தன் இரண்டு தங்கைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். அவர் மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டார். மைத்துனர் மறுமணம் செய்து கொள்ளாமல் தன் ஒரே மகளை வளர்த்தார். இப்போது அவர் வயது அறுபத்தைந்து. அறுபது வயதிலும் இருபது வயது இளைஞனைப் போல் ஓடியாடிக்கொண்டிருப்பார். மது, மாது, சூது, புகை என்று எந்தப் பழக்கமும் இல்லை. வீடு, வீட்டிலிருந்து அலுவலகம், அலுவலகத்திலிருந்து வீடு. இதுதான் அவர் வாழ்க்கை. நண்பர்களுடன் ... Read more
Published on August 18, 2024 10:37
கடவுளிடம் கேட்க எதுவுமில்லை…
ஒருவழியாக வீடு கிடைத்து விட்டது. அடையார் காந்தி நகர். அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் அருகில். நான் இப்போது கோவிலுக்குச் செல்வதில்லை. அந்த நேரத்தில் கூட எழுதலாம் என்ற ஒரே காரணம்தான். கோவிலுக்கு எதற்காகச் செல்கிறோம்? இறை சக்தியிடம் வேண்டிக் கொள்வதற்காக. பிரார்த்தனை செய்து கொள்வதற்காக. எனக்குத்தான் வேண்டிக் கொள்ள எதுவுமே இல்லையே? ம்ஹும். எனக்கு புக்கர் பரிசு வேண்டும்தான். அதுகூட எதற்கு என்றால் என் எழுத்து ஆங்கில இலக்கிய உலகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால்தான். ... Read more
Published on August 18, 2024 08:50
August 16, 2024
A Story of a Berserk Mind
முன்குறிப்பு: இந்தக் கதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வீடு என்ற நாவலில் வரும் ஒரு அத்தியாயம். வீடு என்பது தற்போதைய தலைப்புதான். நாவல் வெளிவரும்போது தலைப்பை மாற்றி விடலாம் என்று இருக்கிறேன். இந்தக் கதை என் உறவினர் பலரையும் புண்படுத்தும். மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். அவர்கள் என்னை எப்படிப் பழிவாங்க நினைக்கிறார்களோ அப்படிப் பழிவாங்குவது அவர்களின் உரிமையும் சுதந்திரமும் ஆகும். அதில் நான் குறுக்கிட முடியாது. சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கலாம். மான நஷ்ட வழக்குத் தொடுக்கலாம். ... Read more
Published on August 16, 2024 08:27
A Story of a Berserk Mind
Berserk என்ற மனநிலை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். நடுரோட்டில் நின்று கொண்டு கையிலிருக்கும் கத்தியால் எதிரே வருவோரையெல்லாம் குத்துபவன் பெர்செர்க் மனநிலையில் இருப்பவன் எனலாம். அம்மாதிரி மனநிலையில் நின்று ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும்? அதைத்தான் காலையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கதைக்காக என் குடும்பம் குலையலாம். பல உறவுகள் என்னிடமிருந்து நிரந்தரமாக விலகிப் போகலாம். என் மீது வழக்குத் தொடுக்கப்படலாம். என் உயிருக்கே கூட பங்கம் வரலாம். அப்படிப்பட்ட ரத்தவிளாறுக் கதை அது. கதையில் முதல் ... Read more
Published on August 16, 2024 03:32
August 15, 2024
25. மார்க்கி தெ ஸாத்: Philosophy in the Bedroom
எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு என்பதே என் எண்ணம். ஆனாலும் இலக்கிய சமாச்சாரங்கள் எதுவும் மறப்பதில்லை. அதில் மட்டும் அபார ஞாபகமுண்டு. மற்ற லௌகீக விஷயங்கள் எல்லாமே நினைவிலிருந்து காணாமல் போய் விடும். சுமார் முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மார்க்கி தெ ஸாத்-இன் ஃபிலாஸஃபி இன் தெ பெட்ரூம் நாவலை வாசித்த போது மார்க்கி, உலகில் தன் அன்னையின் யோனியை ஊசி நூலால் தைக்கக் கூடிய பெண்களுக்கு இந்த நாவலை சமர்ப்பணம் செய்வதாக எழுதியிருந்ததும், ... Read more
Published on August 15, 2024 10:33
August 14, 2024
அழையா விருந்தாளி – 3
இந்த அழையா விருந்தாளியே ஒரு புத்தகமாகப் போகும் போல் இருக்கிறது. எனக்கும் இக்கடிதங்களை குப்பையில் போடுவதற்கு விருப்பம் வர மாட்டேன் என்கிறது. ஏனென்றால், இதெல்லாம் இன்றைய சமூக எதார்த்தத்தின் ஆவணங்கள். ஒரு காலத்தில் பிராமணர்கள் என்றால் அங்கேதான் ஞானமும் அறிவும் கொட்டிக் கிடந்தது. அதைக் கண்டுதான் அரசன் முதல் ஆண்டி வரை அஞ்சினான். அரசர்களே காலில் விழுந்தார்கள். ஆனால் இன்று பிராமணர்கள் என்றால் அதற்கு உதாரண புருஷர்களாக விளங்குவது எஸ்.வி. சேகரும் மதுவந்தியும் அவர்களைப் போன்றவர்களும்தான். இலக்கியம் ... Read more
Published on August 14, 2024 23:28
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

