சாரு நிவேதிதா's Blog, page 59
September 14, 2024
மீண்டும் ஜப்பான்… (1)
ரொப்பங்கி இரவுகள் நாவலுக்காக இன்னும் சில தரவுகள் தேவைப்படுகின்றன. அதற்காக அக்டோபர் 11 அன்று ஜப்பான் செல்கிறேன். ஜப்பானில் உள்ள நண்பர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். சில நிபந்தனைகள் மற்றும் சில விஷயங்கள்: 1.வாழை படம் பற்றிப் பேசக் கூடாது. 2. வீட்டுக்கு அழைக்கக் கூடாது. அழைத்தால் என் பூனைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும். வீட்டில் பத்து பூனைகள். சாந்தோமில் பன்னிரண்டு பூனைகள். அந்தப் பூனைகளை அப்படியே அம்போ என்று ... Read more
Published on September 14, 2024 04:11
September 11, 2024
இனி இப்படி வேண்டாம்…
சந்தா மற்றும் நன்கொடை அனுப்புபவர்களுக்கு நான் எப்போதுமே ஒரு ஆலோசனை சொல்லியிருக்கிறேன், பணக்கஷ்டம் உள்ளவர்கள் இதில் சம்பந்தமே வைத்துக் கொள்ளாதீர்கள் என்று. மாணவர்கள், என்னைப் போன்ற தினக்கூலிகள், விளிம்புநிலை மக்கள், இல்லத்தரசிகள் போன்றவர்கள் பணம் அனுப்ப வேண்டாம் என்று கூவிக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால், என் இணைய தளத்தை 80000 பேர் படிக்கிறார்கள். அதில் ஒரு நூறு பேர்தான் நன்கொடை அனுப்புகிறார்கள். இந்த நிலையில் 79,900 பேரில் ஒருவராக இருந்து விட்டுப் போவதில் உங்களுக்கு ஒன்றும் பெரிய பிரச்சினை ... Read more
Published on September 11, 2024 22:59
Human Brains: Prada Foundation
Prada Foundation வெளியிட்டுள்ள இந்தப் பெரிய தொகுப்பில் என்னுடைய சிறுகதை வெளியாகியுள்ளது. Tandav at Tadaka என்பது கதையின் தலைப்பு. 986 பக்கங்கள். விலை: 117 யூரோ. இதுவே 27 சதவிகிதத் தள்ளுபடியில். மலிவுப் பதிப்பாக இருப்பதால் வாங்கிக் குவிப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு பிரதி ஃபெடெக்ஸ் மூலமாக வந்துள்ளது. விலாசத்தில் சாரு நிவேதிதா என்று உள்ளது, உங்கள் ஆதார் கார்டில் கிருஷ்ணசாமி அறிவழகன் என்று உள்ளது, அதனால் தர மாட்டோம். முப்பது நாட்களுக்கு மேல் ... Read more
Published on September 11, 2024 09:16
அமேஸான் ~ சாரு ~ ஜெமோ ~ மனுஷ் ~ ஹார்ட் லேண்டிங் ~ சாஃப்ட் லேண்டிங் (மீள்: 2019): கார்ல் மார்க்ஸ்
வாழை பிரச்சினையில் சமூவம் பற்றி எரிந்து கொண்டிருப்பதால் கார்ல் மார்க்ஸ் ஃபேஸ்புக்கில் மீள் பதிவு செய்ததை நான் இங்கே மீள்பதிவு செய்கிறேன். இனி கார்ல்: இந்த பல்பு நாவல் விவகாரத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் பிரதான கவியான மனுஷ்ய புத்திரன், உங்கள் சங்கத்தின் பக்கம் நிற்காமல், கட்சியினர் பக்கம் நின்றுவிட்டாரே, அதில் உங்களுக்கு வருத்தமில்லையா என்று ஒருவர் உள்பெட்டியில் கேட்டார். நான் அதற்கு, இல்லையே அவர் “தீவிரவாத இலக்கிய சங்கத்தின்” கொள்கைப்படி மிகச் சரியாகத்தானே செயல்படுகிறார் என்று ... Read more
Published on September 11, 2024 08:51
நானே ராஜா, நானே மந்திரி, நானே தளபதி, நானே சிப்பாய் : I am a one-man army…
என்னுடைய முதல் விமர்சனக் கட்டுரை ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்கு எழுதியது. அதற்கு முன்னால் ஃப்ரெஞ்ச் தத்துவம் பற்றி படிகள், இலக்கிய வெளிவட்டம் ஆகிய காலாண்டு இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்பத்திரிகைகளில் நான் தான் பிரதான எழுத்தாளன். நாங்கள் ஒரு குழுவாகவே செயல்பட்டோம். ஆனால் அந்தப் பத்திரிகைகளிலேயே ஜே.ஜே. நாவலுக்கான என் விமர்சனத்தை வெளியிடவில்லை. அப்போதிருந்து தொடங்கி இன்று வரை என் எழுத்துக்கு எதிர்ப்பு மட்டுமே இருந்து வருகிறது. என் எழுத்தைப் பிடிக்காதவர்கள் பற்றி எனக்குக் கவலையே இல்லை. ... Read more
Published on September 11, 2024 07:25
September 9, 2024
தம்பிக்கு ஒரு கடிதம்…
அன்புத் தம்பி பெருமாளுக்கு, நான் உன்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு பதிலுக்கு நீ என்னைத் திட்டி எழுதியிருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். அதைப் படித்து நேர விரயம் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் அதில் நீ சொல்லியிருந்த ஒரே ஒரு விஷயம் பற்றி உனக்கு ஒரு பால பாடம் எடுக்கலாம் என்றே இதை எழுதுகிறேன். அதில் செல்வதற்கு முன்னால் இன்னொன்று. நீ நல்லவன். இன்றைய உலகில் நல்லவர்கள் அரிதாக இருப்பதால் உன்னை எனக்குப் பிடிக்கும். அதனால்தான் ... Read more
Published on September 09, 2024 22:17
September 8, 2024
வாழை: இரண்டு திரவங்களைக் குறி வைத்து வெற்றியடைந்த திரைப்படம்
ஒன்று, விந்து. இரண்டு, கண்ணீர். தாய்லாந்திலும் மற்ற செக்ஸ் டூரிஸ தேசங்களிலும் லைவ் ஷோ என்ற பிரபலமான காட்சி உண்டு. ஒரு பெரிய அறையின் நடுவே வட்ட வடிவத்தில் ஒரு மேடை இருக்கும். அதில் கண்ணைக் கூசும் வெளிச்சத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உடலில் எந்த வஸ்திரமும் இன்றி உடலுறவு கொள்வார்கள். அறையைச் சுற்றி அமர்ந்திருக்கும் ஆண்களும் பெண்களும் அந்தக் காட்சியைக் கண்டு களிப்பார்கள். கூட்டத்தில் ஆண்களுக்கு நிகராகவே பெண்களும் இருப்பார்கள். வாழை படத்தில் வரும் டீச்சர் ... Read more
Published on September 08, 2024 06:15
இன்று இரவுக்குள் வாழை விமர்சனம்
வாழை விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்று இரவுக்குள் வெளிவரும். சினிமாவை எப்படி ரசிப்பது என்ற பாடமாகவும் இருக்கும் இத்திரை விமர்சனம். காத்திருங்கள்.
Published on September 08, 2024 04:36
September 7, 2024
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
என் வாழ்வில் இரண்டே இரண்டு அதிர்ஷ்டக்காரர்களைத்தான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்து மனிதர்கள் புதையல் என்ற விஷயத்தை நம்பினார்கள். கோடியில் ஒருத்தருக்குப் புதையலும் கிடைத்தது. அதற்குப் பிறகு லாட்டரிச் சீட்டு. இது அல்லாமல் நடக்கும் அதிர்ஷ்டக் கதைகளும் உண்டு. நம் அனைவருக்குமே தெரிந்த கதை ஒரு கன்னடத்து பஸ் கண்டக்டர் இந்தியா முழுவதும் பிரபலமான சூப்பர் ஸ்டாராக மாறியது. ஆனால் அந்த சூப்பர் ஸ்டாரின் கதை அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. அவரிடம் அதீதமான திறமையும் இருந்தது. ... Read more
Published on September 07, 2024 05:13
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

