சாரு நிவேதிதா's Blog, page 57
October 1, 2024
ஜப்பான் – 4
இந்த முறை ஜப்பான் பயணத்தில் ஒரு பெரிய பிழை செய்து விட்டேன். கவனக் குறைவுதான் காரணம். சென்ற ஆண்டு சென்ற போது ஜப்பானில் தங்கியது 12 நாட்கள். 27 செப்டம்பர் கிளம்பி 8 அக்டோபர் திரும்பினேன். சரியாக 11 நாட்கள். பயணத்தில் இரண்டு நாட்கள் போக சுற்றிப் பார்க்கவும் தங்கவும் ஒன்பது நாட்களே கிடைத்தன. நேரமும் திட்டங்களும் மிகவும் இறுக்கமாக இருந்தன. அடுத்த முறை வரும்போது மூன்று வாரம் தங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கவனமில்லாமல் ... Read more
Published on October 01, 2024 00:08
September 30, 2024
Shree’s Poems 3: The Page-Turner Escapist
A Scene, Again The road, of course. Always the road, stretched thin under my feet, a scene you’ve read a thousand times. No songbirds, no whispering clouds; golden leaves? Please. Nothing to meet the expectations we pretend we don’t have. But we do. We always do. Cracked pavement. Worn out, scarred, It’s not a metaphor, ... Read more
Published on September 30, 2024 06:12
Shree’s Poems 2: Geometry of Fragmented Existence
In a placid state Stretching and twisting the body, Winding down, I view and discern happenings, Gauge with just two words ‘Yes’ or ‘No,’ Yet still, I land in trouble. Inhabiting amidst Volatile, Reprobate, Hypocrite, Dressed bipedal creatures. One fed me yesterday, Another smashed my spine today. My head bickers over, ‘Yes’ for who? ‘No’ ... Read more
Published on September 30, 2024 05:56
Shree’s Poems: 1. Octennium Eclipse
I was a whirlwind, bright and relentless, thoughts swirling in a tempest. Impatience fueled my fire, a spirit boundless, always stretching. Never static, always in flux, heart pulsing with untamed fervor. A storm of energy, wild and unchained, the core of me, unleashed, hyperactive. Words flowed ceaselessly, an unstoppable flood. Impulsivity guided my steps, never ... Read more
Published on September 30, 2024 04:24
September 28, 2024
ஜப்பான் – 3
சென்ற முறை ஜப்பான் சென்றிருந்தபோதே அங்கிருந்த நண்பர்களிடம் சொல்லியிருந்தேன், இனிமேல் நான் ஒவ்வொரு வருடமும் ஜப்பான் வருவேன் என. உண்மையில் ஜப்பான் பூலோக சொர்க்கம். என் நீண்ட கால சிநேகிதரான சிவகாமி ஜப்பானில் இந்திய சுற்றுலாத் துறை அதிகாரியாக சில பல ஆண்டுகள் இருந்தபோது அந்த தேசத்தைப் பற்றி நூற்றுக்கணக்கான கதைகளைச் சொல்லியிருக்கிறார். அங்கே கனகாலம் இருந்ததால் அவர் ஜப்பானிய மொழியும் பேசுவார். அவர் சொல்லும் கதைகள் எல்லாமே ஜப்பான் ஒரு பூலோக சொர்க்கம் என்ற கருத்தை ... Read more
Published on September 28, 2024 06:26
September 27, 2024
27. துய்ப்பின் கொண்டாட்ட வெளி – பகுதி 2
”அதை விடு, நாம் இப்படியே போகித்துக்கொண்டிருந்தால் நான் எலும்புக்கூடாகி விடுவேனே?” “பரவாயில்லை, நீ எலும்புக்கூடாக மாறினாலும் எனக்குப் பிடிக்கும்.” அதற்குப் பிறகு இருவரும் வெளியே செல்கிறார்கள். இரவு சூழ்கிறது. ஒரு கடையில் சாக்கே அருந்தலாம் என்று நினைக்கும்போது கடையை மூடப் போகிறேனே என்கிறான் கடைக்காரன். அப்போது சதா தன் ஆடையை மேலே தூக்கிக் காண்பித்து, என்னை வேண்டுமானால் ஒருமுறை புணர்ந்து கொள், இப்போது சாக்கே வேண்டும் என்கிறாள். கடைக்காரன் சிரித்துக்கொண்டே “என்னுடைய சாதனம் இப்போது சிறுநீர் கழிப்பதற்கு ... Read more
Published on September 27, 2024 08:13
September 26, 2024
27. துய்ப்பின் கொண்டாட்ட வெளி
நகிஸா ஓஷிமாவின் இயக்கத்தில் 1976இல் வெளிவந்த In the Realm of the Senses என்ற திரைப்படத்தை transgressive இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள அனைவருமே பார்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன். அச்சு அசலாக ஒரு நீலப்படம் பார்ப்பது போலவே இருக்கும். ஆனால் நீலப்படம் அல்ல என்பது பார்வையாளருக்கு திரைப்படம் ஆரம்பித்ததுமே தெரிந்து விடும். படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சியில் சில கெய்ஷாக்கள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கே தரையில் விழுந்து கிடக்கும் ஒரு கிழவனைப் பார்க்கிறார்கள். ... Read more
Published on September 26, 2024 10:05
September 23, 2024
மார்க்கி தெ ஸாத் – தொடர்ச்சி
பின்வரும் கட்டுரை சென்ற மாதம் 21ஆம் தேதி வெளிவந்தது. கட்டுரை எண்: 26. ஆக, இருபத்தாறு கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட தத்துவப் பிரச்சினையை முன்வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. இந்த விவாதத்துக்குக் காரணமாக இருந்தவர் அராத்து. தயிர்வடை சென்ஸிபிலிட்டியில் தொடங்கினோம். ஆனால் புத்தகத்தின் தலைப்பு தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்று இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அது ஒரு மாதிரி பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதம் மாதிரி தொனிக்கிறது. உடலை முன்வைத்து ஒரு தத்துவ விசாரணை என்பது மாதிரியான தலைப்பாக இருந்தால் ... Read more
Published on September 23, 2024 09:34
September 22, 2024
The Existential Weight of Spoons – 6
ஒருமுறை அல்ல, பலமுறை சொன்னான் விஷால். வைதேகியை விவாகரத்து செய்து விடுங்கள். அது பற்றி பெருமாள் அவனிடம் விரிவாக விளக்கியும் விஷாலுக்கு பெருமாளின் நிலைப்பாடு புரியவில்லை. பிறகு அது ஒரு துன்பமாகப் போகவே நட்பைத் துண்டித்தான். மிகவும் சுருக்கமாகச் சொன்னால், பெருமாளைப் போன்ற அதிர்ஷ்டக்கார எழுத்தாளன் இந்த உலகத்திலேயே இல்லை. எழுத்துக்கு ஆதாரமான விஷயம் என்ன? கட்டுப்பாடற்ற சுதந்திரம். இந்த விஷயத்தில் பெருமாளைப் போல் சுதந்திரத்தை அனுபவிப்பவன் யாருமேயில்லை. இதைப் படிப்பதை ஒரு கணம் நிறுத்தி விட்டு ... Read more
Published on September 22, 2024 10:24
ஜப்பான் – 2
சென்ற ஆண்டு தோக்யோவில் ரொப்பங்கியில் ஒரு பப்பில் நான் சந்தித்த பெண்ணை மீண்டும் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. அவளுடைய தொலைபேசி எண் என் தோக்யோ நண்பரிடம் இருக்கிறது. சந்தித்தால் எனக்கு ஒரே ஒரு ஆசைதான். இந்தப் பாடலுக்கு அவளுடன் ஒரு டான்ஸ் ஆட வேண்டும். சம்போகத்தை விட இன்பமானது நமக்குப் பிடித்த பெண்ணோடு ஆடுவது. என்னவோ தெரியவில்லை, நம்முடைய நெருங்கிய தோழிகளோடு ஆட வாய்ப்பதில்லை. எல்லோரும் தம்முடைய பாடி கார்டோடு வருகிறார்கள். எங்கே ஆடுவது? சம்போகத்தை ... Read more
Published on September 22, 2024 07:03
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

