சாரு நிவேதிதா's Blog, page 53

December 1, 2024

அந்தேரியில் மூன்று தினங்கள்…

நான் ஒரு எழுத்தாளனாக ஆகியிருக்காவிட்டால் உலகப் புகழ் பெற்ற சமையல்காரனாக இருந்திருப்பேன். இப்போதும் என் மதம் உணவுதான். ஃபுல்காவும் கருப்பு சன்னா (கொண்டக்கடலை) கறியும் கொடுக்கவில்லை என்று ஒரு சிநேகிதியின் மேல் பல காலமாக கொலைவெறியில் இருக்கிறேன். கடையில் ஃபுல்கா கிடைக்கும். ஆனால் கருப்பு சன்னா கறி கிடைப்பதில்லை. வெளுத்த சன்னா கறிதான் கிடைக்கிறது. அதுவும் வீட்டில் செய்வது போல் இல்லை. கைலாஷ் பர்பத்திலேயே இதுதான் லட்சணம். நானே செய்து சாப்பிடலாம். அதற்கு நேரமோ பொறுமையோ இல்லை. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2024 02:54

November 29, 2024

வால்ட்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?

நான் சமூகத்தைக் குற்றம் சொல்ல மாட்டேன். ஒட்டு மொத்தமாகவே தமிழர்களின் அறிவுத் தரம் அதல பாதாளத்துக்குப் போய் விட்டது. ஸாஃப்ட்வேர் துறையில் றெக்கை கட்டிப் பறக்கிறார்கள். மாதம் அஞ்சு லட்சம் சம்பாதிக்கிறார்கள். அமெரிக்க ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் அறிவு? பூஜ்யம். வால்டேர் என்று தமிழில் எழுதினால் Valdare என்று உச்சரிக்கிறார்கள். Voltaire என்று ஒரு ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் இருந்தார், காலத்தால் கார்ல் மார்க்ஸுக்கும் முந்தியவர். மனித வரலாற்றில் தனி மனிதரின் கருத்துச் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுத்தவர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2024 21:58

இரண்டு புத்தகங்கள் தயார்…

”வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?” என்ற கட்டுரைத் தொகுப்பும் ”இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும்…” என்ற சிறுகதைத் தொகுப்பும் தயார் நிலையில் உள்ளன. இன்னும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வரும். ”வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?” என்ற கட்டுரைத் தொகுப்பை என் இனிய நண்பரும் வேளாண் விஞ்ஞானியுமான சி. கற்பகத்துக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2024 04:35

November 27, 2024

புருஷன்

தலைக்கு மேல் வெள்ளம் போவது போல் இருக்கிறது வேலை. சுமார் இருபது புத்தகங்களைத் தொகுத்து ஸ்ரீராம் எனக்கு அனுப்பி மூன்று ஆண்டுகள் இருக்கும். நான் தான் புதிதாக எழுதுகிறேன் புதிதாக எழுதுகிறேன் என்று சொல்லியபடி புதிதாகவே எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது புத்தக விழாவில் ஒரு பத்து புத்தகங்களையாவது கொண்டு வந்து விடலாம் என்று எடிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே குறிப்பிட்ட பொருளைக் கொண்டு கட்டுரைகளைத் தொகுத்ததில் ஸ்ரீராம் ஏகப்பட்ட மணி நேரங்களைச் செலவு செய்திருக்கிறார். எனக்கு ஒரு மணி நேரத்தில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2024 02:50

November 23, 2024

ஆன்மாவை உருக்கி…

கர்னாடக இசையில் உச்ச பட்சமான ஒரு பாடகியைக் கேட்டேன். எம்மானுவல் மார்ட்டின். ஆன்மாவை உருக்கி இசையாகத் தருகிறார். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ட்டி.எம். கிருஷ்ணாவின் மாணவி என்று அறிகிறேன். இனிமேல் ட்டி.எம். கிருஷ்ணா என்ன செய்தாலும் விமர்சிக்க மாட்டேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2024 22:56

November 22, 2024

வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் – 2000ஆம் ஆண்டில் – நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு வெளிவர இருக்கிறது. அதன் தலைப்புதான் மேலே இருப்பது. இதுபோல் வரப் போகும் புத்தக விழாவில் பத்து புத்தகங்கள் வர இருக்கின்றன. அந்தக் கட்டுரைகளையெல்லாம் வாசிக்கும்போது இப்போது நான் கனிந்திருக்கிறேன் என்றே தோன்றுகிறது. வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும் என்ற கட்டுரையிலிருந்து ஒரே ஒரு பகுதியை கீழே தருகிறேன். இந்தக் கட்டுரை 2000இல் எக்ஸில் என்ற பத்திரிகையில் வெளிவந்தது. எக்ஸில் ... Read more
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2024 21:33

வெங்கடேஷ் குமார்

வெங்கடேஷ் குமாரின் வயது 71. இந்த வயதில் அவர் பெயர் உலகமெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். பீம்சென் ஜோஷி, பண்டிட் ஜஸ்ராஜ், மல்லிகார்ஜுன் மன்ஸூர், கிஷோரி அமோங்கர், கங்குபாய் ஹங்கல் அளவுக்கு இன்று பாடக் கூடிய ஒரே நபராக இருப்பவர் வெங்கடேஷ் குமார். ஆனால் அவரது எளிமையான குணத்தின் காரணமாக அவர் பெயர் எந்த அளவுக்குத் தெரிந்திருக்க வேண்டுமோ அந்த அளவுக்குத் தெரிந்திருக்கவில்லை. இன்னொரு காரணம், வெங்கடேஷ் குமாரின் தியாக மனப்பான்மை. இருபது ஆண்டுகள் அவர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2024 04:37

November 21, 2024

க்ராஸ்வேர்ட் வாக்களிப்பு – இன்னும் இரண்டு தினங்கள்

ஆட்டா கலாட்டா சிறந்த நூல் போட்டியின் நெடும்பட்டியலில் இடம் பெற்ற Conversations with Aurangzeb குறும்பட்டியலில் இடம் பெறவில்லை. என் வாழ்வில் இது சகஜம்தான் என்பதால் ஆச்சரியம் இல்லை. க்ராஸ்வேர்ட் குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் Conversations with Aurangzeb நாவலுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாக்களிக்கும் முறை மிகவும் எளிது. Translation categoryக்கு சென்று ஔரங்ஸேப் நூலில் டிக் அடிக்க வேண்டும். ஓடிபி வரும். அதைப் பூர்த்தி செய்தால் வாக்கு அளித்ததாக அர்த்தம். வாக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 21, 2024 23:06

November 20, 2024

சித்த மருத்துவர் பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழா

கடந்த ஞாயிறு (17.11.2024) அன்று மாலை தி.நகர் சோஷியல் கிளப்பில் சித்த மருத்துவர் டி. பாஸ்கரனின் சித்தாவரம் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.  சுமார் நானூறு பேர் வந்திருந்தார்கள்.  இன்னும் சற்று பெரிய அரங்காக இருந்திருந்தால் வந்திருந்த இன்னும் நூறு பேருக்கு இடம் கிடைத்திருக்கும்.  இடம் இல்லாததால் சுமார் நூறு பேர் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  உண்மையில் அது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.  இத்தனை கூட்டத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  பாஸ்கரனுக்கு இவ்வளவு நண்பர்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2024 05:46

ஏ.ஆர். ரஹ்மான்

என் வாழ்வில் எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். எத்தனையோ பேர் என் மனதுக்கு உகந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சிலரது சந்திப்பு ஒரே ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது. சிலரைத் தொடர்ந்து சந்திக்க வாய்க்கிறது. சில நண்பர்களுடன் மிக நெருக்கமான அளவில் முப்பத்தைந்து ஆண்டுகளாக நட்பில் இருக்கிறேன். முப்பத்தைந்துதான் அதிக பட்சம். முப்பத்தைந்துக்கு ஒன்றிரண்டு ஆண்டுகள் அதிகம் கூட இருக்கும். நான் சந்தித்த மனிதர்களில் முக்கியஸ்தர்களும் அடக்கம். பிரபலம் என்ற வெளிச்சம் விழாதவர்களும் அடக்கம். இப்படி நான் சந்தித்த மனிதர்களிலேயே என்னை ஆகக் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2024 00:49

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.