சாரு நிவேதிதா's Blog, page 60

September 5, 2024

ஆசிரியர் தினம்

இன்று ஆசிரியர் தினம் என்று தெரிந்தது பல வாசகர்கள் எனக்கு ஆசிரியர் தின வணக்கம் அனுப்பியதால். இல்லாவிட்டால் இன்று ஆசிரியர் தினம் என்றே எனக்குத் தெரிந்திராது. பிறகு ஆசிரியர் தினம் என்றால் என்ன, இன்று ஏன் ஆசிரியர் தினம் என்று பார்த்தேன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் நினைவாக இன்று ஆசிரியர் தினமாம். நான் இளம் வயதில் தத்துவம் பயின்ற போது ராதாகிருஷ்ணனைப் படித்து அவரை நிராகரித்திருக்கிறேன். இந்தியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பிரமுகர்களில் எனக்கு அம்பேத்கரைத் தவிர வேறு எவரையுமே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2024 03:53

The Existential Weight of Teaspoons (விரைவில் வெளிவர இருக்கும் குறுநாவல்)

Dear Charu, I have been following you for a long time and have previously sent you the donation. When possible, I will send more. Thank you for your great service to the humanity—you are a saint. It’s rare to see someone with your attitude in today’s world, and I truly appreciate it.I am curious, though—you ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2024 01:32

September 2, 2024

புதிய இடம், புதிய சூழல்…

கடந்த ஒரு ஆண்டு காலமாக நான் சாந்தோம் வீட்டு மொட்டை மாடியில்தான் நடைப் பயிற்சி போய்க்கொண்டிருந்தேன். அதற்கு ஷூ போட வேண்டாம். உள்ளாடை அணிய வேண்டிய அவசியம் இல்லை. ஜட்டி என்று எழுத கூச்சமாக இருக்கிறது. இந்த ஜட்டி என்ற சிறிய துணி அய்ட்டம் இளம் வயதிலிருந்தே எனக்குப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பதினாறு வயது வரை ஜட்டி கிடையாது. கோவணம் கூட கட்டியது இல்லை. பதினாறிலிருந்து இருபத்து மூன்று வயது வரை கோவணம். வேலைக்குப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2024 23:35

கைக்குட்டையை வைத்து கல்லா கட்டுவது எப்படி?

இந்தத் தொடரின் அத்தியாயம் 26, ”மார்க்கி தெ ஸாத்: உடலும் ஆன்மாவும்” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இதை வாசிக்கவும். ஜப்பானிய இயக்குனர் அகிரா குரஸவா (1910 – 1998) உலகப் புகழ் பெற்றவர்.  ஆனால் குரஸவா அளவுக்குப் பிரபலமாகாத இன்னொரு ஜப்பானிய இயக்குனர் Nagisa Ōshima (1932 – 2013).  சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட உடல் மற்றும் ஆன்மா பற்றிய குறிப்புகளை நினைவு கூருங்கள்.  ஓஷிமாவின் சினிமாவுக்கு அடிப்படை, உடல்.  குரஸவாவின் படங்களில் வன்முறையும் போரும் பிரதானமாக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2024 05:49

September 1, 2024

கல்லெறியும் கிழக் கூட்டம்…

முன்பெல்லாம் எனக்கு அடிக்கடி ஒரு மாதிரியான கடிதங்கள் வரும்.  பொதுவாக எனக்கு வரும் மின்னஞ்சல்களை அதிகாலையில் பார்க்கும் வழக்கமுடையவன் நான்.  இன்னும் நீ சாகவில்லையா?  இன்னுமா உயிரோடு இருக்கிறாய்?  சீக்கிரம் செத்துத் தொலையேன்.  உன்னை மாதிரி சமூக விரோதிகளுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா?  உன்னைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும்.  இப்படியாகப்பட்ட அஞ்சல்கள் அவை.  இதையெல்லாம் பார்த்து எனக்குள் ஒருவித கருணையுணர்வு சுரக்கும்.  உங்கள் காலணிக்குக் கீழே நீங்கள் அறியாமல் ஒரு பூரான் சிக்கித் துடிக்கும்போது ஒரு பரிதாப ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2024 10:24

சொன்னால் பலிக்கிறது!

பெண்கள்தான் இப்படிச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.  நான் ஏதாவது சொன்னால் அது பலித்து விடுகிறது.  ஒரு பெண் அதிலும் தீவிரம்.  நீண்ட காலம் பார்த்திராத யாரையாவது பார்க்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றினால் அந்த நபர் செத்து விடுகிறார்.  இப்படி அவள் ஒன்பது பேரை பார்க்க நினைத்திருக்கிறாள்.  அவள் மீது என்ன தப்பு? அவளுக்கு மனதில் தோன்றுகிறது, அதற்கு அவள் என்ன செய்ய முடியும்? என்னிடம் பெண் தன்மை அதிகம் என்பதனாலோ என்னவோ நான் சொன்னாலும் பலித்து விடுகிறது.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2024 06:08

August 29, 2024

அசோகமித்திரன் பற்றி பவா செல்லதுரை

அசோகமித்திரன் பற்றி பவா செல்லதுரை https://youtube.com/shorts/cUAfDzK1oD...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2024 01:48

August 27, 2024

My Life, My Text – 9

Asian Review இதழில் வெளியாகும் My Life My Text தொடரின் அடுத்த கட்டுரை கீழே. https://asian-reviews.com/2024/08/27/...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2024 11:04

August 23, 2024

பூனை ஆர்வலர்களுக்கு… (மற்றவர்களும் படிக்கலாம்)

சீனியை நினைத்து பயந்துகொண்டே இதை எழுதுகிறேன். கீழே தரைத்தளத்தில் ஒரு பதினைந்து பூனைகள் உள்ளன. ஒரு பூனைக்குட்டியை கீழே உள்ள பாதுகாவலர்கள் அடித்துக் கொன்று விட்டார்கள். விரிதியானா படம் பார்த்திருப்பதால் அப்படித்தான் நடந்திருக்கும் என்று நம்புகிறேன். அந்தப் பதினைந்தில் ஒரு தாய்ப்பூனையும் அதன் மூன்று குட்டிகளும். நாங்கள் வீடு மாற்றிக்கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு தினங்களாக தாய்ப்பூனையைக் காணவில்லை. குட்டிகளின் வயது ஒரு மாதம். நாள் பூராவும் பசியில் கதறிக்கொண்டிருந்தது. பூனைகளின் பெருந்தாயான அவந்திகா நேற்று அடையாறு காந்திநகர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2024 04:10

August 22, 2024

படித்ததில் பிடித்தது

சவூதி அரேபியா பற்றி சமீபத்தில் ஒரு சிறிய குறிப்பைப் படித்தேன். அதை எழுதியவரின் கருத்து அது ஒரு தேசமே இல்லை, வெறும் பாலைவனம் என்பது. அந்த நண்பர் அப்துர் ரஹ்மான் முனீஃப் என்ற சவூதி அரேபிய எழுத்தாளரைப் படித்திருக்க வாய்ப்பு இல்லை. தாமஸ் ஹார்டி, தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களுக்கு நிகரான எழுத்தாளர் அப்துர்ரஹ்மான் முனீஃப். சவூதியில் வசிக்கும் நண்பர்கள் முனீஃபை வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சவூதி பற்றி சமீபத்தில் ஒரு கதை படித்தேன். மலையாளத்திலிருந்து அதை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2024 23:24

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.