சாரு நிவேதிதா's Blog, page 58

September 21, 2024

The Existential Weight of Spoons – 5

இன்று காலை பெருமாள் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்ததால் இதையும் நாவலில் சேர்க்கலாம் என்று பார்க்கிறேன்.  எனக்கு சுவாரசியம், உங்களுக்கு அசுவாரசியமாகவும் இருக்கலாம்.  கடந்து விடுங்கள். பெருமாளுக்கு அன்பு என்றால் பிடிக்காது.  ஏனென்றால், அவன் மீது அன்பு செலுத்துபவர்களால்தான் அவன் மன உளைச்சல் அடைகிறான்.  பெரிய உதாரணம், வைதேகி.  அவள் அவன் மீது கொண்டிருக்கும் அளப்பரிய அன்பினால்தானே அவனைக் குடிக்கக் கூடாது என்றும், கொக்கரக்கோவுடன் சேராதே என்றும் வம்பு பண்ணுகிறாள்?  அப்படி பெருமாள் மீது அன்பு கொண்டவனாக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2024 07:58

September 20, 2024

The Existential Weight of Spoons – 4

உங்களுக்குக் கர்மா தியரியில் நம்பிக்கை இருக்கிறா என்று தெரியாது, ஆனால் பெருமாளுக்கு இருக்கிறது. நம்பிக்கை மட்டும்தான்.  ஆதாரம் கேட்டால் அவனால் தர முடியாது.  அந்த நம்பிக்கையினால்தான் அவனுக்கு இன்னமும் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது என்று அவன் நம்புகிறான். அநேகமாக முக்கால்வாசி இந்தியர்களும் அவனைப் போல்தான் இல்லையா?  இல்லாவிட்டால் இந்த ஒட்டு மொத்த தேசமே பைத்தியக்காரர்களால்தான் நிரம்பியிருந்திருக்கும்.  அப்படி என்ன பிரச்சினை?  உங்களுக்கே இதற்குள் தெரிந்திருக்குமே?  பூனைகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு, பெருமாள் வசித்த குடியிருப்புக்கு நேர் எதிரே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2024 06:05

September 19, 2024

என்ன உதவி வேண்டும்?

ஆக்ஸிஸ் வங்கிப் பிரச்சினைக்கு ஒரு நண்பர் ஒரு யோசனை சொல்லியிருக்கிறார். ஆக்ஸிஸில் இருப்பதை ஜிபே மூலம் ஐசிஐசிஐக்கு மாற்றிக் கொள்ளலாம். நல்ல யோசனை. ஆனால் நான் கேட்டது, ஆக்ஸிஸிலிருந்து டெபிட் கார்ட் வரவழைப்பதற்கு என்ன பண்ணலாம்? ஏனென்றால், இன்னும் ஒரு மாதம் கழித்துப் போனால், மறுபடியும் விண்ணப்பத்தைப் பதிந்து கொண்டு கார்டை அனுப்ப மாட்டார்கள். மறுபடியும் போய்க் கேட்டால், இன்னும் ஒரு மாதத்துக்கு நீங்கள் புதிதாக விண்ணப்பம் வைக்க முடியாது என்பார்கள். தொலைந்து போன ஆக்ஸிஸ் வங்கி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2024 09:06

என்ன செய்யலாம்?

ஆறு மாதமாகி விட்டது, பர்ஸைத் தொலைத்து. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கிக்கு நேராகச் சென்று புதிய டெபிட் கார்டுக்கு விண்ணப்பித்து விட்டு வந்தேன். இருபது நாட்கள் ஆகியும் கார்ட் வரவில்லை. பிறகு மீண்டும் நேரில் சென்று விசாரித்தேன். உங்கள் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற தகவல் வந்தது. சரி என்று ஒரு மாதம் கழித்துச் சென்றேன். புதிய கார்ட் தருவதற்கு என் முகவரி போன்றவற்றைக் குறித்துக்கொண்டார்கள். ஒரு வாரத்துக்குள் கார்ட் வரும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2024 05:55

பங்கேற்பு

என்னுடைய புத்தக அலமாரிகளுக்குப் பணம் கேட்டதை வைத்து சிலர் என்னை ஃபேஸ்புக்கில் இழிவாக எழுதியிருந்ததாகக் கேள்விப்பட்டேன். வாழை பட விமர்சனத்துக்காகவும் என்னைப் பல பெண்கள் மிகவும் கேவலமாகத் திட்டினார்களாம். இதே பெண்கள் டீச்சரின் இடத்தில் வாத்தியாரைப் போட்டு பையனின் இடத்தில் சிறுமியைப் போட்டிருந்தால் இயக்குனரின் ட்ராயரைக் கிழித்திருப்பார்கள். ஆனானப்பட்ட புதுமைப்பித்தனே தனக்கு வந்த காசநோய்க்கு மருந்து வாங்கக் காசில்லாமல் தமிழ்ச் சமூகத்திடம் கையேந்தத்தான் வேண்டியிருந்தது. கையேந்திய மறுநாளே இறந்தது இன்னும் பெரிய துரதிர்ஷ்டம். கோபி கிருஷ்ணனும் அப்படித்தான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2024 04:42

September 17, 2024

The Existential Weight of Spoons – 3

(ஒரு அறிவிப்பு: இனிமேல் இந்த நாவலின் அத்தியாயங்கள் நான்கு நாட்கள் மட்டுமே தளத்தில் இருக்கும். என் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவு. இந்த நேரத்தில் எனக்கு நீதிமன்றத்துக்கெல்லாம் செல்ல நேரம் இல்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இந்த நாவலுக்கான சன்மானத்தை அனுப்பி வையுங்கள். தளத்தில் படிக்கத் தவறிவிட்டால் எனக்கு எழுதிக் கேளுங்கள். அனுப்பி வைக்கிறேன். charu.nivedita.india@gmail.com ) டாய்லட், பூனை, செடி என்று எதிலும் வேலை ஆகாத்தால் நாராயணன் நான்காவதாக ஒரு அஸ்திரத்தை எடுத்தான்.  பால்கனி.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 17, 2024 08:32

September 16, 2024

The Existential Weight of Spoons – 2

(முன்குறிப்பு: இந்தக் கதையில் பலதரப்பட்ட சம்பவங்களும் கருக்களும் கலந்து கட்டி வரும் என்பதாலும் வீடு என்ற தலைப்பு தட்டையாக இருப்பதாலும் வீடு என்ற தலைப்பை மாற்றி விட்டேன்.) உண்மையில் பூனைக்கு உணவிடுவதில் மட்டும் சூரிய நாராயணன் பிரச்சினை பண்ணவில்லை.  நீங்கள் யோசிக்க வேண்டும்.  மனைவி பைத்தியம் பிடித்துச் செத்தாள்.  அம்மா பைத்தியம் பிடித்துச் செத்தாள்.  அப்பாவும் பைத்தியம் பிடித்துச் செத்தார்.  மனைவியும் அப்பாவும் செத்தது பெருமாளும் வைதேகியும் அங்கே குடி போவதற்கு முன்னால்.  ஆனால் அவன் அம்மா ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2024 09:43

நான் என்ன செய்ய வேண்டும்?

இன்று இரண்டரை மணி அளவில் சீனி அழைத்தார்.  காலையிலேயே அவர் ஒரு காணொலியை அனுப்பியிருந்தார்.  என் சக எழுத்தாளர் பேசிய முக்கால் மணி நேரப் பேச்சு.  தத்துவம் சார்ந்த்து.  ”அதற்கு நீங்களும் நானும் பதில் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை” என்றார்.  உங்களுக்குத்தான் தெரியுமே, யார் எதைச் சொன்னாலும் எனக்கு அது சரியாகவே தோன்றும், அதிலும் சீனி சொன்னால் கேள்வியே இல்லை.  சரி, எழுதி விடுவோம் என்றேன்.  அவருடன் பேசிய போது குளித்து விட்டு வந்து ஈரத்துண்டைக் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2024 03:54

September 15, 2024

The Existential Weight of Teaspoons – 1

அத்தியாயம் ஒன்று ஏழு ஆண்டுகளாக இருந்த வீட்டை ஏன் மாற்றினீர்கள் என்று பல நண்பர்கள் பெருமாளைக் கேட்டார்கள்.  ஏழு ஆண்டுகள் என்ன, பத்து ஆண்டுகள் தனிக்காட்டு ராஜாவாக மைலாப்பூரில் வசித்த தனி வீட்டையே மாற்றிக்கொண்டு வரவில்லையா? என்ன அற்புதமான வீடு!  மைலாப்பூரில் ஒரு தனி வீடு.  சுற்றி வர மரங்கள்.  தோப்புக்குள் இருப்பது போல் இருக்கும்.  பத்துப் பன்னிரண்டு மரங்கள்.  அது போதாதென்று பெருமாள் கடம்ப மரம் வேறு வைத்தான்.  அது வேறு ஆலமரம் போல் பெருகி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2024 08:20

September 14, 2024

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.