உங்களுக்குக் கர்மா தியரியில் நம்பிக்கை இருக்கிறா என்று தெரியாது, ஆனால் பெருமாளுக்கு இருக்கிறது. நம்பிக்கை மட்டும்தான். ஆதாரம் கேட்டால் அவனால் தர முடியாது. அந்த நம்பிக்கையினால்தான் அவனுக்கு இன்னமும் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது என்று அவன் நம்புகிறான். அநேகமாக முக்கால்வாசி இந்தியர்களும் அவனைப் போல்தான் இல்லையா? இல்லாவிட்டால் இந்த ஒட்டு மொத்த தேசமே பைத்தியக்காரர்களால்தான் நிரம்பியிருந்திருக்கும். அப்படி என்ன பிரச்சினை? உங்களுக்கே இதற்குள் தெரிந்திருக்குமே? பூனைகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு, பெருமாள் வசித்த குடியிருப்புக்கு நேர் எதிரே ...
Read more
Published on September 20, 2024 06:05