இன்று காலை பெருமாள் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்ததால் இதையும் நாவலில் சேர்க்கலாம் என்று பார்க்கிறேன். எனக்கு சுவாரசியம், உங்களுக்கு அசுவாரசியமாகவும் இருக்கலாம். கடந்து விடுங்கள். பெருமாளுக்கு அன்பு என்றால் பிடிக்காது. ஏனென்றால், அவன் மீது அன்பு செலுத்துபவர்களால்தான் அவன் மன உளைச்சல் அடைகிறான். பெரிய உதாரணம், வைதேகி. அவள் அவன் மீது கொண்டிருக்கும் அளப்பரிய அன்பினால்தானே அவனைக் குடிக்கக் கூடாது என்றும், கொக்கரக்கோவுடன் சேராதே என்றும் வம்பு பண்ணுகிறாள்? அப்படி பெருமாள் மீது அன்பு கொண்டவனாக ...
Read more
Published on September 21, 2024 07:58