சாரு நிவேதிதா's Blog, page 66
July 20, 2024
ஒரு சிறிய திட்டத்தில் ஒரு மிகச் சிறிய மாற்றம்
பல நண்பர்கள் தினம் பத்து ரூபாய் அனுப்புவதற்குப் பதிலாக மாதம் 300 ரூ. குறைந்த பட்ச நன்கொடை என்று வைத்தால் அனுப்புவதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என்று கருதுகிறார்கள். அதனால் தினமும் பத்து ரூபாய் அனுப்ப வேண்டாம். மாதம் 300 ரூ. என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு குறைந்த பட்ச நன்கொடைதான். அதிகப்படுத்திக்கொள்வது உங்கள் விருப்பமும் உங்களுடைய சாத்தியத்தையும் பொருத்தது. ஜீபே செய்வதற்கான எண்: 92457 35566 ஜீபே எண்ணில் உள்ள பெயர்: ராஜா வங்கி ... Read more
Published on July 20, 2024 07:04
July 19, 2024
ஒரு சிறிய திட்டம்
பொதுவாக லௌகீக விஷயங்களில் நான் சீனியிடம்தான் யோசனை கேட்பேன். தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் அதன்படி செய்வேன். காரியம் வெற்றிகரமாக நடக்கும். சில அரிய சந்தர்ப்பங்களில் அவர் யோசனையைக் கேட்பதில்லை. அப்போதும் காரியம் வெற்றிகரமாக நடக்கும். ஒருவேளை அந்த விஷயத்தில் அவர் யோசனையைக் கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எனக்குக் குறுகுறுப்பாக இருக்கும். லௌகீக விஷயங்களில் மற்றபடி நான் யார் யோசனையையும் பேச்சையும் கேட்பதில்லை. இன்னொரு நண்பர் இருக்கிறார். ஒரு விஷயத்தில் நான் ஒரு முடிவு செய்திருப்பேன். அந்த ... Read more
Published on July 19, 2024 23:34
July 18, 2024
கெளஹர் ஜான்
1902 நவம்பர் 14-ஆம் தேதி. கல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அடுத்தடுத்த அறைகளில் ஒரு ரெடிமேட் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ரெக்கார்டிங் அன்றுதான் நடக்கப் போகிறது. அதுவரை எந்தப் பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டதில்லை. சினிமாப் பாட்டு அல்ல. அந்தக் காலத்து சாஸ்த்ரீய சங்கீதம். தென்னிந்தியாவின் கர்னாடக சங்கீதம் மாதிரி வடக்கில் ஹிந்துஸ்தானி. அதில் அப்போது உலகப் புகழ் பெற்று விளங்கியவர் கௌஹர் ஜான். இந்தியாவில் வேலை செய்த வில்லியம் என்ற ஆர்மீனிய ... Read more
Published on July 18, 2024 10:35
July 17, 2024
மதிப்பீடுகளின் வீழ்ச்சி: கமல்ஹாசனுடன் ஒரு பேட்டி
கமல்ஹாசனும் ஜெயமோகனும் ஹிந்து பத்திரிகைக்காக உரையாடிய ஒளிப்பதிவைப் பார்த்தேன். In conversation with actor Kamal Haasan and writer Jeyamohan என்பதுதான் அந்த உரையாடலின் தலைப்பு. முதலில் இந்தத் தலைப்பே அருவருப்பானது, எழுத்தாளனை அசிங்கப்படுத்துவது. ஏன்? நடிகர்கள் என்ன இருந்தாலும் கேளிக்கையாளர்கள்தான் (entertainers). ஆனால் எழுத்தாளர்கள் அப்படி அல்ல. நிரூபணங்கள் நிறைய உண்டு. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி. பாகவதர். அவர் எப்படி வாழ்ந்தார் என்பது வரலாறு. தங்கத் தட்டில் சாப்பிட்டவர். அவர் ... Read more
Published on July 17, 2024 09:37
July 16, 2024
தயிர்வடை சென்ஸிபிலிட்டி
இப்போது நான் எழுதப் போவது ஒரு கணித விளையாட்டைப் போன்றது. சென்னையில் உள்ள பிஹெச்.டி. ஆய்வு செய்யும் மாணவர்களை எடுத்துக்கொண்டால், அதில் தலித் இலக்கியத்தை ஆய்வு செய்பவர்கள் பத்து பேர் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒன்பது பேர் பிராமணராக இருப்பார்கள். அதிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இது போன்ற ஒரு எண் ஆராய்ச்சி விளையாட்டைத்தான் இப்போது எழுதப் போகிறேன். இது நான் கண்ட உண்மை. நான் கண்ட எதார்த்தம். நான் கண்ட அந்த எதார்த்தம் ... Read more
Published on July 16, 2024 23:56
July 14, 2024
உலகத் திரைப்படம் எடுப்பது எப்படி?
அன்புள்ள சாரு, நான் நந்தகுமார். உங்களின் சமீபத்திய வாசகன். ஜூன் 30 அன்று திருவண்ணாமலையில் நடந்த உலக சினிமா பயிலரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றவன். சுமார் ஒன்பது மணி நேரம் நீங்கள் நிகழ்த்திய உரை, நீங்கள் காண்பித்த திரைப்படங்கள் எல்லாமுமே எனக்குப் பெரும் திறப்பை அளித்தன. அதற்கு நான் செலுத்திய கட்டணம் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் எனக்கு ஒரு குறை உண்டு. அதைச் சொன்னால் நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்பதால் ... Read more
Published on July 14, 2024 05:21
July 13, 2024
வனத்தில் சில இரவுகள்
திருவண்ணாமலையில் ஜூன் முப்பதாம் தேதி உலக சினிமா பயிலரங்கை முடித்துவிட்டு மறுநாள் நானும் சீனியும் ராஜா வெங்கடேஷும் அந்த வனத்தை நோக்கிக் கிளம்பினோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது அந்த அடர்ந்த வனம். பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அதை அரசாங்கமே சுற்றுலாப் பயணிகளின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. சீனியும் ராஜாவும் மாற்றி மாற்றி கார் ஓட்டினார்கள். வழியில் கறி விருந்துக் கடைகள் நிறைய இருந்தன. உணவு உலகத் தரம். இங்கே சென்னையில் ஈரல் வறுவல் என்று கேட்டால் ... Read more
Published on July 13, 2024 10:02
July 5, 2024
அடுத்த ஆட்டம் ஆரம்பம்…
இவரைப் பற்றி யாரும் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. இவரைப் பற்றி எந்த விமர்சகரும் விமர்சித்தோ பாராட்டியோ எழுதியதில்லை. இவரது நூல்கள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அமெரிக்க வாசகர்கள் இவர் பெயரை அறிந்திருக்க மாட்டார்கள். ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) நண்பர். மிஷல் ஃபூக்கோ (Michel Foucault) இவரைப் பற்றிப் பெரிதும் சிலாகித்திருக்கிறார். நீட்ஷே (Nietzsche), மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade) இருவரும் இவரது எழுத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் விட்ஜென்ஸ்டைன் (Wittgenstein), ஹெடேக்கர் ... Read more
Published on July 05, 2024 22:08
மகிழ்ச்சிக்கான திறப்பு உங்கள் பாக்கெட்டிலேயே இருக்கிறது!
இப்போது நான் எழுதப் போகும் இந்தக் கட்டுரை பணத்துக்கும் மனிதனுக்கும், பெண்ணுக்கும் மனிதனுக்குமான உறவு பற்றிய என் மேனிஃபெஸ்டோ என்று சொல்ல்லாம். பணம் பற்றி இதுபோல் நான் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருந்த போதும், இந்தக் கட்டுரை அவற்றின் சாரம் என்று கொள்ளவும். ”காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறரை வரை பயிலரங்கில் கலந்து கொண்ட இருநூறு பேரில் இரண்டே இரண்டு பேர் தவிர வேறு ஒருவர் கூட இடையில் எழுந்து போகவில்லை. நம்ப முடியாத அதிசயம்.” சென்ற ... Read more
Published on July 05, 2024 04:30
July 4, 2024
ஜூ 30 பயிலரங்கம்: சில குறிப்புகள்
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் நடந்த பயிலரங்கம் சிறந்த முறையில் நடந்து முடிந்தது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பலர். விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த அரங்கசாமி, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி சேர்மன் கருணாநிதி, பவா செல்லத்துரை, இந்தப் பயிலரங்க யோசனையை எனக்குள் விதைத்த மதிவாணன், எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பாஸ்கரன், கல்லூரி நிர்வாகி சக்தி கிருஷ்ணன், என்னுடைய நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரன், மற்றும் பண உதவி செய்த நண்பர்கள். இவர்கள் ... Read more
Published on July 04, 2024 22:41
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

