சாரு நிவேதிதா's Blog, page 70
May 26, 2024
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் (திருவண்ணாமலைப் பயிலரங்கு)
திருவண்ணாமலையில் அடுத்த மாதம் (ஜூன்) முப்பதாம் தேதி நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கு அங்கே உள்ள SKP பொறியியல் கல்லூரியில் நடைபெறும். அரங்கத்தின் கொள்ளளவு 300 என்பதால் எண்ணிக்கை பிரச்சினை இல்லை. ஆனால் எத்தனை பேர் வருகிறீர்கள் என்ற விஷயம் சரியாகத் தெரிந்தால்தான் அத்தனை பேருக்கான உணவுக்கு ஏற்பாடு செய்ய முடியும். உணவு வீண் ஆவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, பெயர் கொடுத்து விட்டு வராமல் இருந்து விடாதீர்கள். உங்களால் வர முடியாவிட்டால் உங்களுக்கு ... Read more
Published on May 26, 2024 06:02
May 23, 2024
மதிப்பீடுகளின் வீழ்ச்சி
நான் பாட்டுக்கு நான் உண்டு என் ஜோலி உண்டு என்று கிடக்கிறேன். ஆனாலும் சில நண்பர்கள் ’ஏன்டா சும்மா கிடக்கிறாய், எழுந்து ஆடு’ என்கிறார்கள். ஏற்கனவே அந்த நண்பரிடம் ’எனக்கு எதுவும் எழுதாதீர்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அவர் கேட்பது இல்லை. என் மேலும் தப்பு இருக்கிறது. கடிதத்தைப் பார்த்து அதைக் குப்பையில் போட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? அதுதான் நம்மிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால் எப்போதோ உருப்பட்டிருப்பேனே? Kamakoti, The Director of IIT belongs ... Read more
Published on May 23, 2024 04:28
May 22, 2024
My Life My Text: 7
ஏசியன் ரிவ்யூ இதழில் வெளியாகும் My Life My Text தொடரின் அடுத்த கட்டுரை கீழே. https://asian-reviews.com/2024/05/22/...
Published on May 22, 2024 22:50
உலக சினிமா குறித்த ஒரு பயிற்சிப் பட்டறை
மனுஷ்யபுத்திரனின் முன்னெடுப்பில் சமீபத்தில் அண்ணா நூலகத்தில் நடந்த மாணவர் பயிலரங்கில் நான் உலக சினிமா குறித்துப் பேசியதற்கு மாணவர்களும், பிறகு ஷ்ருதி டிவி கபிலனின் முயற்சியில் அதன் காணொலியைப் பார்த்த நீங்களும் காட்டிய ஆர்வத்தினால் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. நான் அண்ணா நூலகத்தில் பேசிய ஒன்றரை மணி நேர உரை உலக சினிமாவில் ஒரு துளிதான். அதை நான் குறைந்த பட்சமாக ஆறு மணி நேரம் பேசி உங்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும். ஒரு நாற்பது ... Read more
Published on May 22, 2024 08:46
எனக்குப் பிடித்த எழுத்தாளர் (மீண்டும்)
அவருடைய இணைய தளத்தை அறிமுகப்படுத்தும்போது, அதில் உள்ள ஐந்து சிறுகதைகளும் எனக்குப் பிடித்திருந்ததால் எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று தலைப்பு வைத்தேன். பிறகு, அவர் ஃப்ரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த கதைகளைப் பாராட்டி எழுதினேன். ஆனால் அவருடைய தேர்ந்தெடுப்பில் அரசியல் இல்லை என்று அவரைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தேன். அவர் என்னிடம் என் அரசியல் தேர்வைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை சூசகமாகச் சொல்லியிருந்தேன். அதற்கு அவர் என் மீது கோபம்தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் நன்றி ... Read more
Published on May 22, 2024 02:23
May 21, 2024
உலக சினிமா குறித்து ஓர் அறிமுகம்
ஒரு இருபத்து நான்கு மணி நேரத்தில் ஐந்தாயிரம் பேர் என்னுடைய இந்தப் பேச்சைக் கேட்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் கூட ஒரு ஐந்து மணி நேரம் பேசுவதற்கு விஷயம் இருந்தது. நான் பேசியதே கூட ஒரு வரி ஒரு வரியாக சுருக்கமாகத்தான் பேசினேன். ஏனென்றால், ஒன்றரை மணி நேரம் என்பது நான் எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஒன்றுமே இல்லை. ரத்தினச் சுருக்கமாகத்தான் பேச முடிந்தது. இல்லாவிட்டால் பொலிவிய இயக்குனர் Jorge Sanjines பற்றியே சுருக்கமாக முப்பது நிமிடம் ... Read more
Published on May 21, 2024 23:16
உலக சினிமா – சாரு உரை
சென்னை அண்ணா நூலகத்தில் நேற்று (மே 20, 2024), மனுஷ்ய புத்திரன் ஒருங்கிணைத்த கல்லூரி மாணவர்களுக்கான திரைக்கதைப் பட்டறையில் சாரு பேசியது கீழே. நன்றி shruti.tv
Published on May 21, 2024 02:03
May 16, 2024
அண்ணா நூலகத்தில் பேசுகிறேன்
மனுஷ்யபுத்திரனின் தலைமையில் மாணவர்களுக்கான பயிலரங்குகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் ஒரு பகுதியாக வரும் திங்கள்கிழமை (20 மே) அன்று காலை பதினொன்றரை மணி அளவில் அண்ணா நூலக அரங்கில் உலக சினிமா பற்றிப் பேசுகிறேன். இந்தப் பயிலரங்கு மாணவர்களுக்கானது என்பதால் இதை வாசிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். ”இளையராஜாவை ஏன் விமர்சிக்கிறீர்கள்?” என்பது போன்ற தனிப்பட்ட கேள்விகளைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னிடம் உலக சினிமா பற்றி நூறு மணி ... Read more
Published on May 16, 2024 21:45
அண்ணா நூலகத்தில் பேசுகிறேன்
மனுஷ்யபுத்திரனின் தலைமையில் மாணவர்களுக்கான பயிலரங்குகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் ஒரு பகுதியாக வரும் திங்கள்கிழமை (20 மே) அன்று காலை பதினொன்றரை மணி அளவில் அண்ணா நூலக அரங்கில் உலக சினிமா பற்றிப் பேசுகிறேன். இந்தப் பயிலரங்கு மாணவர்களுக்கானது என்பதால் இதை வாசிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். ”இளையராஜாவை ஏன் விமர்சிக்கிறீர்கள்?” என்பது போன்ற தனிப்பட்ட கேள்விகளைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னிடம் உலக சினிமா பற்றி நூறு மணி ... Read more
Published on May 16, 2024 21:45
May 15, 2024
மொழிபெயர்ப்பின் கலையும் அரசியலும்
மொழிபெயர்ப்பு பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். நானும் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மொழிபெயர்ப்புத் தொகுதி இன்றைய மொழிபெயர்ப்பாளர்களின் முன்மாதிரி நூலாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும். இதை யாரும் சொல்லாததால் நானே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. என் பெருமைக்காக அல்ல. மொழிபெயர்ப்பாளர்களின் நன்மைக்காக. தருண் தேஜ்பாலின் The Valley of Masks நாவலை நானும் தாமரைச்செல்வியும் காயத்ரியும் மொழிபெயர்த்தோம். அதுவுமே மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி நூல்தான். மொழிபெயர்ப்பு எப்படி வந்திருக்கிறது என்று தருண் என்னைக் கேட்டபோது ... Read more
Published on May 15, 2024 23:52
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

