வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது எனக்குப் பிடிக்காது. கொஞ்சமும் பிடிக்காது. ஆனால் பிராணிகளைப் பிடிக்கும். வீட்டில் வளர்ப்பதுதான் பிடிக்காது. அதற்காகத் தெருவில் விட வேண்டும் என்று சொல்லவில்லை. எந்த தேசத்தில் பிராணிகள் தெருவில் திரிகின்றனவோ அந்த நாடு இந்த உலக வரைபடத்திலேயே இருப்பதற்கு லாயக்கில்லாதது என்று நினைக்கிறேன். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. துருக்கியின் தெருக்களில் எங்கு பார்த்தாலும் பூனைகள் திரியும். ஆனால் அவை பசித்திருப்பதில்லை. துருக்கி சமூகமே அந்தப் பூனைகளை வளர்க்கிறது. அப்படியிருந்தால் பிரச்சினை இல்லை. ...
Read more
Published on May 06, 2024 03:56