My Life, My Text என்ற தலைப்பில் கனடாவிலிருந்து வெளிவரும் Asian Review இணைய இதழில் என் சுயசரிதத்தை எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது அதன் ஆறாவது அத்தியாயம் வெளிவந்திருக்கிறது. இந்தத் தொடருக்காக இதுவரை உலக மொழிகளில் எழுதப்பட்டுள்ள முக்கியமான சுயசரிதங்களைப் படித்து விட்டேன். ஒன்றே ஒன்றுதான் பாக்கியிருக்கிறது. ஆலன் ராப்-க்ரியே எழுதிய Ghosts in the Mirror. இன்னும் சில தினங்களில் கிடைத்து விடும். காத்திருக்கிறேன். அதற்கிடையில் கார்ஸியா மார்க்கேஸ் பற்றிய கலந்துரையாடலுக்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். ...
Read more
Published on April 29, 2024 09:49