என்னிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் ஆயிரமாயிரம் விஷயங்கள் உண்டு. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்குதிரைக்காக ஏராளமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் ஒன்று, கடல் கன்னி என்ற கதை. கிட்டத்தட்ட குறுநாவல் அளவு வரும். ரொஹெலியோ சினான் (Rogelio Sinán) என்ற எழுத்தாளரின் கதை. பனாமாவைச் சேர்ந்தவர். இவர் பெயரெல்லாம் யாருக்கும் தெரியாது. எனக்கு எப்படித் தெரிந்தது? அந்தக் காலகட்டத்தில் கூபாவிலிருந்து க்ரான்மா என்ற வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. Tabloid. அதுவரை ...
Read more
Published on April 29, 2024 23:37