என் எழுத்தோடு பரிச்சயம் கொண்டவர்களுக்குத் தெரியும், நான் எழுத ஆரம்பித்த இருபத்தைந்தாம் வயதிலிருந்து ஐம்பதாவது வயது வரை என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பதிப்பகமும் என் நூல்களை வெளியிடத் தயாராக இல்லை. மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட கொள்கை அடிப்படையில் வெளியிட மறுத்து விட்டார்கள். என்ன கொள்கை? அவர்களைப் பொருத்தவரை நான் எழுதுவது குப்பை. ஆனால் அப்படி மறுக்கும் அவர்களே நட்பு கருதி அதை அச்சடித்துக் கொடுத்து உதவினார்கள். ...
Read more
Published on January 10, 2024 22:42